vinoth's படம்

மௌஸ் ஸ்பெல்லிங் சொல்லு


ஆசிரியர் : ராமூ, மௌஸ் ஸ்பெல்லிங் சொல்லு பார்க்கலாம்.

ராமூ: M......O.........U............S.............

ஆசிரியர்: சொல்லுடா, அதுக்கு பின்னாடி என்ன வரும்

ராமூ: அதுக்கு பின்னாடி வாலு தான் டீச்சர் வரும்

Cry

(வானொலியில் கேட்டது. )


yarlpavanan's படம்

களவும் கற்று மற


ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...


joshi2010's படம்

ஏன்டா சிரிக்கின்றீங்க?????


தமிழ் ஆசிரியர் : ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......


Srinisha's படம்

Great Nose Cut


ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு
அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா????
ஆசிரியா் ; ???????????????.


Srinisha's படம்

H 2 O FORMULA


ஆசிரியா் ; தண்ணீருக்கு FORMULA என்ன ?

மாணவன்; HIJKLMNO

ஆசிரியா் ; என்ன சொல்ற ? நீ அடி வாங்க போறீயா?

மாணவன்; நேற்று நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க,


yarlpavanan's படம்

சாப்பிட மறப்பியளே!


ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?
மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...
மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...
மாணவர் - 3 : எத்தனையோ இருக்கும்...


yarlpavanan's படம்

கணக்கில என்ன பிணக்கு?


ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?

மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...


yarlpavanan's படம்

தேர்வில் சித்தியடைய...


ஆசிரியர் : நான் படிப்பித்தது ஒன்றும் தேர்வுத்தாளில வராமல் எப்படித் தேர்வில் சித்தியடைந்தாய்?


Srinisha's படம்

லீவ்


சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!


yarlpavanan's படம்

ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல


மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!
ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


Syndicate உள்ளடக்கம்