ஆடுகளம் (தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும்-ஒரு நேரடி வருணனை)
-----------------------------------------------
"சிங்கம்"-ஆய் சங்காவின் அணி முழங்கி batting பலம் காட்ட
"விண்ணைத்தாண்டி வருவாயா" என்றிருந்தது இலங்கை தந்த அந்த இமாலய இலக்கு
"மதராசபட்டினம்" அஸ்வின் இருந்திருந்தால் run குறைத்திருப்பாரோ என தோனியும் ஒரு கணம் நினைக்க
"துங்கா நகரம்" பல அந்த பகலிரவு ஆட்டத்தை பார்த்திருக்க
"தொட்டுப்பார்" என Malinga தோட்டாக்களாக பந்து வீச
Malinga-வின் "மந்திரப் புன்னகை" யில் மளமள என wicket-கள் சரிய
"நில் கவனி செல்லாதே" என்ற தோனி எச்சரிக்கை மீறிய Shewag வெளியேற
"நான் மகான் அல்ல" எல்லா ஆட்டத்திலும் விளையாட என Sachin-வும் கைவிட
"வ குவாட்டர் கட்டிங்" தான் இனி என டல்லான கூட்டம் ஒன்று டாஸ்மாக் புறப்பட
"அரிது அரிது" வாய்ப்பு அரிதென்று அலை கடல் கூட்டம் ஆவேசப்பட
"சித்து ப்ளஸ்டூ பர்ஸ்ட் அட்டம்ட்" என Kohli களமிரங்க
"தீராத விளையாட்டுப் பிள்ளை" Dilshan-வும் புகுந்து விளையாட
"பொன்னர் சங்கர்" என தோனி, Gambhir கூட்டணி பின்னர் தொடர
"களவாணி" Kulasekara-வும் Malinga-வுடன் கை கோர்க்க
"முத்துக்கு முத்தாக" முரளியும் பந்து வீச
"கௌரவர்கள்"-ஆய் சூழ்ந்த இலங்கை "பாண்டவர் பூமி"-ஐ பந்தாட
"பாணா காத்தாடி"-ஆய் இந்தியக் கனவுகள் நூலறுந்து பறக்க
"எந்திரன்", "அய்யனார்"-இன் மொத்த உருவமாய் தோனி மறு அவதாரம் எடுக்க
"ஆடுகளம்" சூடு பிடித்தது அந்த வினாடியிலிருந்து
"சிறுத்தை"-ஆய் Yuvaraj Singh-வும் சேர்ந்து கொள்ள
"காவலன்"-ஆய் கடைசி வரை நின்ற தோனி பவுண்டரிகளாக விளாச
"தென் மேற்கு பருவக்காற்று" தோ(தே)னிப் பக்கம் பலமாக வீச
"சிங்கம் புலி"-ஆக தொடங்கிய இலங்கை கடைசியில் "குள்ளநரி கூட்டம்"-ஆய் வலுவிழக்க
"வல்லக்கோட்டை"-யாய் நின்ற இலங்கை இறுதியில் இடிந்து தவுடுபொடி ஆக
"இனிது இனிது" என்று இந்தியாவே இன்ப "மகிழ்ச்சி"-இல் மிதக்க
"ஆட்டநாயகன்" விருதும் உலக கோப்பையுடன் தோனிக்கே வந்து சேர
"வரலாறு" படைத்த இந்திய அணி வண்ணமிகு நம் கொடியை வானுயர பிடித்து வான்கடே ஸ்டேடியத்தை வெற்றி வலம் வந்தது.
(I salute the Indian team for their historic and exceptionally great achievement and brilliant performance throughout the world cup tournament. The above commentary is just for fun only. In addition to that, we all know that Sri Lankans are also one of the best sides in the world. In fact, I appreciate the Sri Lankan team also for the good fight they have put up against India in the final match)
கருத்துகள்
நந்தூ.....................எப்
நந்தூ.....................எப்படி இப்படியெல்லாம்,அருமை.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
நந்து கலக்கீட்டீங்க! அருமை
நந்து கலக்கீட்டீங்க! அருமை

"தென் மேற்கு பருவக்காற்று"
"தென் மேற்கு பருவக்காற்று" தோ(தே)னிப் பக்கம் பலமாக வீச
hahaha! 















