ஆசிரியர் : வான் கோழி முட்டை போடும் பறவை இனம்
மாணவன் : அப்போது அது உங்க இனம்னு சொல்லுங்க..
ஆசிரியர் : எப்படிடா?
மாணவன் : நீங்களும் முட்டைதானே போடுறீங்க.
என்னடா அவன் கணக்குப் பரிட்சைக்கு கட்டுப் போட்டுக்கிட்டு வந்திருக்கான்.
கேட்டதுக்கு நேத்து கணக்கு போட்டுப் போட்டுப் பார்த்தானாம்.
அதுக்கு ஏன் உடம்பெல்லாம் கட்டு
பல கணக்குகள் உதைச்சதுன்னு சொல்லுறான்டா..
மாணவன் : ஏன் சார் நீங்க மண்டையப் போட மாட்ரீங்க?
தலைமை ஆசிரியர் : ஏன்டா அப்படிக் கேக்குற
மாணவன் : பின்ன என்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
எங்க அப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடிலயே அழிச்சுட்டார்
அடப்பாவமே; உனக்கு எதுவுமே வைக்கலயா
ஒரு சொட்டு கூட வைக்கல.
ஆக்சிடண்ட் நடந்த இடத்தில்...
ஜக்கு: டேய் ஆக்சிடண்ட் நடந்த இடத்தில் போலீஸ் சாக்பீஸ் வச்சி கோடு போடுறாங்களே எதுக்குடா?
மக்கு: அது தெரியாதா உனக்கு.. எறும்பு வரக்கூடாதுன்னுதான்.
ஆசிரியர் : என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியே போயிட்டு வந்தாலும் தொண . . . தொண . . . ன்னு சத்தம் போடுவீங்க.. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே . . . வெரி குட்!
மாணவன் : நீங்க வெளியே போயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே . . . . மறந்துட்டீங்களா ஸார்?
ஆசிரியர்: அமெரிக்காவ கண்டுபிடிச்சது யாரு?
சர்தார்: அய்யய்யோ அப்போ அமெரிக்காவ யாராச்சும் தொலைச்சுட்டாங்களா? இல்ல விளையாட்டுக்காக ஒளிச்சு வச்சிட்டாங்களா?
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
பரிட்சை ஹால் வாசலில்
மாணவன் : நேத்திக்கு ஒரு கனவு! எனக்கு கணக்குப் பரிட்சை முடிஞ்சு போனப்புறம் பரீட்சை ஹாலுக்கு வர்ற மாதிரி. அப்பாடா பயந்து போயிட்டேன் சார்.
சூப்பர்வைசர் : மறதிப்பிசாசே! கனவிலேயும் மறதியா? நீ வராமலேயே முடிஞ்சு போனது சயின்ஸ் பரீட்சை!
கருத்துகள்
எங்க அப்பா சம்பாதிச்ச துட்டு
எங்க அப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடிலயே அழிச்சுட்டார்
அடப்பாவமே; உனக்கு எதுவுமே வைக்கலயா
ஒரு சொட்டு கூட வைக்கல.
ஹீஹீ
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
nice
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்









