joshi2010's படம்

சிலந்தி 1 : ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது ?
சிலந்தி 2 : அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்.......
****************************
நண்பன் 1 : என்னை எல்லோரும் இங்கீலிஸ்ல புலி ன்னு பாராட்டுவாங்க........
நண்பன் 2 : பொய் சொல்லாத, இங்கீலிஸ்ல டைகர் அப்படித்தான சொல்லனும்.....
************************
பெண் : டாக்டர், என் கணவர் நீங்க சொன்ன மாதிரி ,தினமும் வாக்கிங் போய் உடம்ப துரும்பாய் இளைச்சுட்டார், திரும்ப சதை போட என்ன வழி டாக்டர் ?
டாக்டர் : அப்படியே ரிவர்ஸ்ல நடக்கச் சொல்லுங்க‌
**************************
பெண் 1 : நீ ரொம்ப குண்டாகிட்ட, அதனால் தினமும் நீச்சல் அடி, உடம்பு குறையும்,
பெண் 2 : போடி, திமிங்கலம் 24 மணி நேரமும், தண்ணில தான் நீச்சல் அடிக்குது, அதுக்கு என்ன உடம்பு குறைந்தா இருக்கு????
*************************
நண்பன் 1 : பொண்ணு, கிளி மாதிரி இருக்கான்னு திருமணம் முடித்தது தப்பா போச்சுடா
நண்பன் 2 : ஏன்டா?????
நண்பன் 1 : பேசினதையே பேசி பேசி என் பிராணனை வாங்குறாடா......................
************************
ஆசிரியர் : "கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான்" இது என்ன காலம்???
மாணவி : கொசு இல்லாத காலம் சார்......
***********************************
நண்பன் 1 : அவன் திருமணம் முடிந்த பிறகும் படிச்சுகிட்டு இருக்கின்றான்டா
ந‌ண்பன் 2 : அப்ப திருமண "மாணவர்"னு சொல்லு.........
*************************
நண்பர் 1 : என் பையன் சும்மாவே வெட்டிப் பொழுத கழிக்கின்றான்பா, அதான் ரொம்ப கவலையா இருக்கு...
நண்பர் 2 : அப்ப சலூனோ, டெய்லர் கடையோ வச்சுக் கொடு.... நல்லா முன்னேறிடுவான்.....
நண்பர் 1 : ??????
**********************