கோடீஸ்வர தந்தை தன் அழகான மகளுக்கு கணவனாக வருபவன் துணிச்சல் மிகுந்த வீரனாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். சுயம்வர போட்டி ஏற்பாடு செய்தார். நீச்சல் குளத்தில் முதலை, பாம்பு இன்னும் பல விஷ ஜந்துக்கள் விடப்பட்டன. எவன் இதில் தைரியமாக நீந்தி மறுகரை ஏறுகிறானோ அவனுக்கு தன் மகளும் சொத்தும் என்று அறிவித்துவிட்டார். வேடிக்கை பார்க்க, நேரடி ஒளிபரப்பு செய்ய என்று எக்கச்சக்க கூட்டம் சேர்ந்துவிட்டது. வெகு நேரம் யாரும் போட்டிக்கு துணியவில்லை. கடைசியில் ஒருவன் தைரியமாக குதித்து, நீந்தி மேலேயும் ஏறிவிட்டான். அவனை பேட்டி கண்டனர்,
"உங்களுக்கு அபார துணிச்சல்,இப்ப அழகான மனைவியும், சொத்தும் கிடைச்சாச்சு, அடுத்தா என்ன செய்யப் போறீங்க?"
"மொதல் வேலையா, என்னை குளத்துக்குள்ள பிடிச்சு தள்ளினவனை கண்டு பிடிக்கப்போறேன்" 
கருத்துகள்
கண்டுபிடுச்சு என்ன சொல்லப்
கண்டுபிடுச்சு என்ன சொல்லப் போறானோ?
அது யார் தெரியுமா சத்யன்
அது யார் தெரியுமா
சத்யன் அ.
ஹா...ஹா...ஹா... 
நட்புடன்
குமார்
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை 
உங்களில் ஒருவன்...
சத்யன் அ.














