மனைவி : "உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ' சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"
கணவன் : "பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்"
------------------------------------------------------------------------
ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தயாராக இருக்கேன்"
பெண் : எப்ப? எப்ப? ? ? ?....
------------------------------------------------------------------------
டேட்டிங்போது பேச்சை இப்படி ஆரம்பிக்கலாமே. . .
பையன் : "உனக்கு கீரைப் பிடிக்குமா?"
பெண் : "ஊஹும். . ."
பையன் : உனக்கு அண்ணன், தம்பி யாராவது இருக்காங்களா?
பெண் : ஊஹும். . .
பையன் : "சப்போஸ், உனக்கு அண்ணன், தம்பி யாராவது இருந்தா அவங்களுக்கு கீரை பிடிக்குமா?"
பெண் : ?!?!?!
------------------------------------------------------------------------
பெண் : "நான் நல்லாயிருக்கேன்னு பீட்டர் சொல்றான், ஆனா கோரமா இருக்கேன்னு ஜோசப் சொல்றான், நீ என்ன சொல்ற?"
ஆண் : "இரண்டுமா இருக்க. அதாவது `நல்லகோரமா' இருக்க"
------------------------------------------------------------------------
பையன் : "நான் பெரிய பணக்காரன் கிடையாது, அல்லது என் நண்பன் பிரண்ட் கோபி மாதிரி என்கிட்ட பெரிய காரோ வீடோ கிடையாது, ஆனா நான் உன்ன லவ் பண்றேன்"
பெண் : "நானும்தான், ஆனா உங்க நண்பர் கோபின்னு யாரையோ சொன்னீயே `அவர்' எங்க இருக்கார்?"
------------------------------------------------------------------------
காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல்.
அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறியா?"
அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங்க?"
------------------------------------------------------------------------
"ஏண்டா, அந்தப் பொண்ணுக்கு தாமரைப்பூ கொடுத்தியே, திருப்பி என்ன கொடுத்துச்சு?"
"பளார்னு அவ கையால என் கன்னத்துல அறைஞ்சு, நீ பி.ஜே.பி.ன்னா, நான் காங்கிரஸ் அப்படீன்னுடுச்சு"
------------------------------------------------------------------------
நண்பன்-1 : "பொதுவா உனக்கு நேர் எதிரான ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினா, லைஃப் சந்தோஷமா இருக்கும் தெரியுமா?"
நண்பன்-2 : "அதனாலதான் நல்ல பணமுள்ள பொண்ண தேடிட்டிருக்கேன்"
------------------------------------------------------------------------
"உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட அப்புறமே உன் கணவர் சிவாஜி கணேசன் மாதிரி
ஆயிட்டார் டி"
"எப்படி சொல்ற?"
"அதான், சிரிச்சுகிட்டே அழறார், அழுதுகிட்டே சிரிக்கிறாரே"
------------------------------------------------------------------------
"உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு"
"இப்ப?"
"நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்"
------------------------------------------------------------------------
பெண் : "நீ என்னை `லவ்' பண்றியா?"
ஆண் : "யெஸ், டியர்"
பெண் : "எனக்காக சாகக்கூட துணிவியா?"
ஆண் : இல்லை டியர், என்னோடது `சாகாத காதல்'
------------------------------------------------------------------------
கணவன் : "என்ன வேணும்னாலும என்கிட்ட சொல்லு, கூச்சப்படாம சொல்லு, கூச்சப்படாத என்ன?"
மனைவி : "சரி, முதல்ல வெளில போ"
------------------------------------------------------------------------
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம், பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : "எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை"
பெண் : "அவசரப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே"
------------------------------------------------------------------------
"சார் உங்க பொண்ணு என் மேலே பைத்தியமா இருக்கா, அவளையே நான். . .
(அப்பா குறுக்கிட்டு)
"அவ ஒரு சரியான பைத்தியம்னா"
"அதான் சார் என் மேல பைத்தியம்"
"அதான் எப்படீன்னு புரியல"
-----------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
கருத்துகள்
"உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட
"உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட அப்புறமே உன் கணவர் சிவாஜி கணேசன் மாதிரி
ஆயிட்டார் டி"
"எப்படி சொல்ற?"
"அதான், சிரிச்சுகிட்டே அழறார், அழுதுகிட்டே சிரிக்கிறாரே"
----------

"பளார்னு அவ கையால என் கன்னத்துல அறைஞ்சு, நீ பி.ஜே.பி.ன்னா, நான் காங்கிரஸ் அப்படீன்னுடுச்சு"
ஹாஹா
நல்ல வேளை நான் CPIM ன்னு அரிவாளோட வரலை, அதுவரைக்கும் சந்தோஷம்
------------
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
எல்லாமே அருமையோ அருமை...
எல்லாமே அருமையோ அருமை... நன்றி...