அப்பா:(தன் பிள்ளையை) ஏன்டா கழுதை மாதிரி மந்தமா இருக்க? சொன்ன வேலையை ஒழுங்கா செய்றீயா?
மகன்: திட்டாதிங்கப்பா சரியா பண்ணிடறேன்.
கழுதை: (மகனிடம்) டேய்! நீ வேலை செய்யாதற்க்கு, உங்க அப்பன் ஏன்டா என் பேரை சொல்லி திட்டுறான்?
அப்பா:(தன் பிள்ளையை) ஏன்டா நாய் மாதிரி ஊர் சுத்திட்டு இவ்வளவு லேட்டா வரியே?
மகன்: திட்டாதிங்கப்பா.. இனிமே சீக்கிரம் வந்துடுறேன்.
நாய்:( மகனிடம்) டேய்! நீ லேட்டா வரத்துக்கு, வீட்டு வாசல்லே உட்கார்ந்து இருக்குற என்னை ஏண்டா திட்டுறான் உங்கப்பன்.
......
கழுதை,பன்றி,எருமை,நாய்: நாம நம்ம வேலைகளை பார்த்துட்டு இருக்குறோம். இந்த மனுச பசங்க , அவனுங்க பண்ணுற தப்புக்கெல்லாம் நம்ம பேரை எதுக்கு இழுக்குறானுங்க?
நாம எப்பவாச்சும் அவனுங்க பேரை சொல்லி திட்டியிருக்கோமா?
என்ன கொடுமை சார் இது...
கருத்துகள்
அதானே. சரியான கேள்வி!!!!!!!!
அதானே. சரியான கேள்வி!!!!!!!!







