சிறுவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் சமயத்தில் இப்படி கடிபட வேண்டி வரும்.
பாக்டீரியா
பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?
என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல
என்ன காலம்
பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.
கடி காலம் சார்.
விலை வாசி
என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல...
அப்பாவின் கவலை
என்னடா ஆங்கிலத்தில் இப்போ 2 மார்க் வாங்கிட்டு வந்திருக்க போன வாட்டி 98 மார்க் வாங்கினியேடா என்னடா ஆச்சு
நீதானப்பா போன முறை பரிட்சைப் பேப்பர் கொண்டு வந்தப்ப ஒரு 2 மார்க் எடுத்திருக்கலாமேன்னு கவலைப்பட்ட?
நோயாளிகளுக்கு
இந்த கிளினுக்குக்கு வர்ற நோயாளிங்க கிட்ட முதல்ல ரெண்டு டெஸ்ட் எடுப்போம்.
அது என்னடா?
முதல்ல பல்ஸ் டெஸ்ட் பிறகு பர்ஸ் டெஸ்ட். 
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
எல்லாமே அருமை நண்பரே...
எல்லாமே அருமை நண்பரே...








