yarlpavanan's படம்

பொழுது போக்கிற்காக...


முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

0
No votes yet
No votes yet

sugiri's படம்

சமர்ப்பணம்


ஒரு சிறுவன் எஃப் எம் ரேடியோ தொகுப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்,

"ரயில்வே கம்பார்ட்மெண்டுல ஒரு பர்ஸ் கெடச்சுது. அதில 20,000 ரூபாய் பணம், ஐசிஐசிஐ பாங்க் க்ரெடிட் கார்ட், ராம்ன்ற பேருல ஒரு விசிடிங்க் கார்ட் எல்லாம் இருக்கு."

தொகுப்பாளருக்கு ஒரே ஆச்சரியம், "ஆஹா , உங்க நேர்மையை ரொம்ப பாராட்டறோம். இந்த நிகழ்ச்சி மூலமா ராமை தொடர்பு கொண்டு, அவரோட பர்ஸ் ஐ திருப்பி தரப்போறீங்க. பாராட்டுக்கள்"

சிறுவன் ‍:" அதெல்லாம் இல்லீங்க. அவருக்காக ஒரு சோக பாட்டு போட்டு சமர்ப்பணம் செய்திடுங்க. பை"

3.66667
Average: 3.7 (3 votes)
Your rating: None Average: 3.7 (3 votes)

yarlpavanan's படம்

பொங்கின புக்கை


முதலாமவர் : ஒருவரை நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : இல்லை... இல்லை...

இரண்டாமவர் : இல்லையென்றால் சான்று கூறு பார்ப்போம்...

முதலாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்...

10
Average: 10 (1 vote)
Your rating: None Average: 10 (1 vote)

Flower's படம்

காதலர்தின வேண்டுதல்...


பழனிமலை ஆண்டவா....
"வர்ற பிப்ரவரி 14க்குள்ள...
எனக்கு ஒரு நல்ல
லவ்வர் கிடைச்சா
இந்த வேண்டுதல படிக்குற
எல்லாருக்கும்
மொட்டை போட்டு,
நாக்குள வேல் குத்தி,
அவங்க செலவுலையே 10000 பேருக்கு அன்னதானமும் ப்ண்ணி,
அவங்க செல்லையும் உன் உண்டியல்ல போடுறேன்....
இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம் "
Smile Smile

5.42857
Average: 5.4 (14 votes)
Your rating: None Average: 5.4 (14 votes)

yarlpavanan's படம்

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?


கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ... Clap

2.25
Average: 2.3 (4 votes)
Your rating: None Average: 2.3 (4 votes)

sugiri's படம்

சான்டா பான்டா


சான்டாவும் பான்டாவும் அலைபேசியில் மெசேஜ் அனுப்பி அனுப்பி அலுத்து போய், புறா மூலமாக கடிதம் பரிமாறி கொள்ள ஆரம்பித்தனர்.
ஒரு நாள் சான்டாவிடமிருந்து பான்டாவிற்கு வந்து சேர்ந்த புறா காலில் ஒரு கடிதமும் இல்லை. இதனால் கோபமுற்ற சான்டா பான்டாவை அழைத்து திட்டினார்.

இதற்கு பான்டாவின் பதில், "டேய் அது மிஸ்ட் கால்டா"

நன்றி ‍ டைம்ஸ் ஆஃப் இந்தியா

5.625
Average: 5.6 (8 votes)
Your rating: None Average: 5.6 (8 votes)

yarlpavanan's படம்

காதலி, காதலன் நினைவாக...


கேள்வி : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?
-----------------------------------------------------------------------------
ஆண் : மேலுள்ள கேள்வியைக் கேட்க...

பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
-----------------------------------------------------------------------------
பெண் : மேலுள்ள கேள்வியைக் கேட்க...

ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
-----------------------------------------------------------------------------
நானே ஒரு பெரியவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.
-----------------------------------------------------------------------------
இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். நகைச்சுவையாகப் பதில் தாருங்களேன்.

3.71429
Average: 3.7 (7 votes)
Your rating: None Average: 3.7 (7 votes)

Siju's படம்

சமையல் குறிப்புகள் - 1 - காதல் கவிதை எழுதுவது எப்படி?


தேவையான பொருட்கள்:

1. பெண்ணே - 4 கிலோ
2. என்னவளே - 2 கிலோ
3. கண்ணே , மணியே, முத்தே (ரகத்திற்கு ஒன்று)
4. என்னவோ, செய்கின்றனவே, அதனால்தான் (கவிதைக்கு ஒன்று என்ற அளவில்)
5. !!!!! (வரிக்கு ஒருமுறை தேவைப்படும் என்பதால் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பது நல்லது)
6. அடியே, ‘டி’, என்னவள் - போதுமான அளவு
7. காமம் தேவைப்படுவோர் குல்பி,மழை,ஈரம், ஒட்டுதல்,உரசுதல் போன்ற வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

8. டிரெண்டிலிருக்கும் ஹீரோயினின் புகைப்படம் - போதுமான அளவு ( ஒரு வேளை உங்கள் காதலி அந்த பதிவை படிக்கும் வாய்ப்பிருந்தால், ஹீரோயின் படத்திற்கு பதிலாக முகம் தெரியாமல் வெட்கப்படும் எதாவது பெண் படத்தை கூகிளில் சுட்டு போடுவது, உடம்பை பாதுகாக்கும்)
செய்முறை:

முதலில் தமிழில் டைப்புவதற்கு கவிதையின் அளவுக்கேற்ற வகையில் ஒரு டைப்பிங்க் டூல் எடுத்துக்கொள்ளவும், என்டர் பட்டன் தேயுமளவிற்கு கன்னாபின்னாவென என்டர் தட்டி நிறைய இடங்களில் ஆச்சர்யக்குறியை போட்டு பொன்னிறமாக மேனஜர் முகம் மாறும் வரை வதக்கவும். அடியே என்னவளே பெண்ணே போன்ற வார்த்தைகளை இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.

முதலில் என்னவளேவில் ஆரம்பித்து எதாவது பெண்ணின் செய்கையை அடுத்துப்போட்டு வேகவிடவும். பிறகு அதனுடன் ‘ அதனால்தான் என்னவோ’ வைக் கலந்து கொஞ்சம் கிளறவும். பிறகு அந்தப்பெண்ணின் செய்கையால் சூழ்னிலையில் நிகழ்ந்த மாற்றத்தை போட்டு இன்னும் கொஞ்சம் கிளறவும். ஒரு கருகிய வாடை வந்தததும் கூடவே , அடியே பெண்ணே, கில்மாவார்த்தைகளை (3வேளை குளிக்கிறேன், 4 வேளை பல் தேய்க்கிறேன் என கிளீன்பாய் இமேஜ் கிரியேட் செய்து வைத்திருப்பவர்கள், கில்மாவார்த்தைகளை சுத்தமாக தவிர்ப்பது உடம்புக்கு நல்லது) சேர்க்கவும். நன்கு கொதித்ததும், ‘ஓ’ வை இறுதி வார்த்தையில் இணைத்து நாலைந்து கேள்விக்குறிகளுடன் சேர்த்துவிட்டால் காதல் கவிதை ரெடி!!!!

இதே பதத்தில் 4 அல்லது 5 பிளேட் கவிதைகள் செய்து, நடு நடுவே ஹீரோயின் புகைப்படத்தைப் போட்டு சுடச்சுட பரிமாறவும்.

பி.கு : பீலிங்க்ஸில் இருப்பதாக பிலிம் காட்ட நினைப்பவர்கள், சூழ்னிலை மாற்றத்தை முதலிலும், பெண்ணின் செய்கையை இரண்டாவதாகவும் போட்டு நடுவில் ‘அதனால்தான் என்னவோ’விற்கு பதிலாக நினைவூட்டுகிறது என்பதை சேர்த்துக்கொள்ளவும்.

சாம்ப்பிள் பதார்த்தம் கீழே . சில கவிதைகளை சமைத்தும் கமெண்டலாம்.
அடியே என்னவளே!
அடியே!
மொட்டை மாடியில்
காக்கா விரட்டப் பிடிக்கும் உனக்கு
அதனாலதான் என்னவோ
உன்னைப்பிரியப் பயந்து
காக்கா வருவதில்லையோ????????

என்னவளே அடியே! (பீலிங்க்ஸ் வெர்சன்)

என்னவளே
மொட்டைமாடிக்கு காக்கா
வருவதில்லை இப்போதெல்லாம்
நினைவூட்டுகிறது
வந்த காக்காவையெல்லாம்
விரட்டப்பிடிக்கும் எனச் சொன்ன
நீ

** நண்பர் ஒருவரின் குறும்பான படைப்பு இது. ஜெய் பரமானந்தா... (இந்த கதைக்கு சொந்தக்காரரின் பெயர்)

7.875
Average: 7.9 (8 votes)
Your rating: None Average: 7.9 (8 votes)

yarlpavanan's படம்

களவும் கற்று மற


ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்க மாட்டியளே?

மாணவர் எல்லோரும் : ???

6
Average: 6 (6 votes)
Your rating: None Average: 6 (6 votes)

VEZHAVAN's படம்

அறைமூடி...


நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?
நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.
நன்றியுடன்
தில்லை.வேழவன்

6.57143
Average: 6.6 (7 votes)
Your rating: None Average: 6.6 (7 votes)