54. பெண்ணின் பெருந்தக்க யாவுள் கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
What is there that is greater than woman, when she is strong in the strength of her chastity?