தமிழ் இலக்கணம்
நன்றி
-- விக்கி
-- நன்னூல் இலக்கண நூல்
-- தொல்காப்பியம் இலக்கண நூல்
-- நேமிநாதம் இலக்கண நூல்
-- தமிழ் நாடு அரசு இலக்கண பாடநூல்
தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது.
நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று.
செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். நேமிநாதம் என்பது மற்றொரு தமிழ் இலக்கண நூலாகும்.
அறிஞர்கள் சிலர் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் சிலர் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவையாவன,