உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2010

இடம் : கோயம்புத்தூர் கொடிசியா வளாகம், தமிழ்நாடு, இந்தியா
துவங்கிய தேதி: 23 ஜூன் 2010
நிறைவடைந்த தேதி: ஜூன் 27 2010
இணைதளம் : ulakathamizhchemmozhi.org
பேஸ்புக்கில் : facebook.com/pages/ulakat-tamic-cemmoi-manau-2010-kovai/309366499074
Twitter : twitter.com/chemmozhimanadu

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக இந்திய தமிழ்நாடு மாநில அரசு அறிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினையை தமிழ் நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி 23.10.2009 அன்று வெளியிட்டார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான ஆய்வரங்க அமைப்புக்குழுவை அமைத்து 23.10.2009 அன்று ஆணை வெளியிட்டார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கோவை 'கொடிசியா' அரங்கு தகுதியான இடம் என 09.11.2009அன்று அறிவித்துள்ளார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ் இணைய மாநாடும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்தப்படும் என்று 12.11.2009 அன்று அறிவித்துள்ளார்கள்.

மாநாட்டுப் பொருண்மை

முகப்பரங்கம்
===========
1. தற்கால உலகில் தமிழ் இலக்கியங்கள்
2. தற்கால உலகில் தொல்காப்பியம்
3. தற்கால உலகில் திருக்குறள்

தனிப் பொழிவரங்கம்
=============
1. சங்ககால அரசியலில் புலவர்கள்
2. சங்ககால வாழ்வியல்
3. தலித் இலக்கியம்
4. பெண்ணியம்
5. ஆட்சித் தமிழ்

கலந்துரையரங்கம்
=============
1. தமிழ்வழிக் கல்வி
2. அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளும் தமிழ் மொழி இலக்கியக்
காலக் கணிப்புகளும்
3. காலத்திற்கேற்ற தமிழ் மேம்பாடு
4. உலகமயமாதல் சூழலில் தமிழ்
5. மாறிய பாலியம்
6. உலக நாடுகளில் தமிழும் தமிழரும்
7. எழுத்துச் சீர்திருத்தம்
8. இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பு

அமர்வரங்கம்
==========
1. தமிழும் உலகச் செம்மொழிகளும்
2. தமிழ் இலக்கியம்
3. இலக்கணம்
4. மொழியியல்
5. திராவிட மொழியியல்
6. மரபுவழிக் கலைகள்
7. நாட்டுப்புற இலக்கியம்
8. தொல்லியல்
9. கல்வெட்டியல் மற்றும் தொல்லெழுத்தியல்
10. நாணயவியல்
11. அரசியல், சமூக, பொருளாதார வரலாறு
12. ஒப்பிலக்கியம்
13. திறனாய்வு
14. இலக்கியக் கொள்கை
15. அகராதியியல்
16. பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்
17. சுவடிவியலும், பதிப்பியலும்
18. ஊடகத் தமிழ் (தொலைக்காட்சி, வானொலி, மேடை, இதழ்கள்)
19. சமயமும் தமிழும்
20. மொழிசார் இயக்கங்கள்
21. மொழிபெயர்ப்பு
22. மொழிக் கல்வி
23. தமிழகப் பழங்குடி மொழிகள்
24. தமிழும் மெய்யியலும்
25. சிறுவர் இலக்கியம்
26. புதிய இலக்கிய வகைகள்
27. தமிழும் பிற இந்திய மொழிகளும்
28. கலை, இலக்கியப் பண்பாட்டு வரலாறு
29. படைப்பிலக்கியம்
30. வட்டார வழக்குகளும் தகுநிலை வழக்கும்
31. சொற்பிறப்பியல்
32. கலைச்சொல்லாக்கம்
33. சமுதாய அறிவியல்
34. மொழிசார் அரசியல்
35. மரபுவழி அறிவியல்
36. தமிழ்த் திரைப்படங்கள்
37. ஆவணப் படங்கள்
38. தமிழிசை
39. கணினித் தமிழ்
40. சூழலியலும் தமிழும்
41. கட்டுமானக்கலை
42. தமிழ் மருத்துவம்
43. சிற்பக் கலை
44. பெண்ணியம்
45. தலித்தியம்
46. நுண்கலைகள்
47. நூல் பாதுகாப்பு
48. ஆவணத் தமிழ்
49. சிற்றிதழ்கள்
50. சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துக்களும் - திராவிடத் தொடர்புகள்
51. அறிவியலும் தமிழும்
52. ஊர்ப் பெயராய்வு
53. நாடகவியல்
54. உரையாசிரியர்கள்
55. மொழி மேலாண்மை

மாநாட்டு குழுக்கள்
==============

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட தமிழ்நாடு அரசு பல குழுக்களை அமைத்துள்ளது.

1. மாநாட்டுத் தலைமைக் குழு
2. மாநாட்டு ஆலோசனைக் குழு
3. மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு
4. மாநாடு ஆய்வரங்க அமைப்புக் குழு
5. தமிழ் இணைய மாநாட்டுக் குழு
6. மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
7. வரவேற்புக் குழு
8. ஊர்வலக் குழு
9. பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக்குழு
10. விருந்தோம்பல் குழு
11. கண்காட்சி அமைப்புக் குழு
12. கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு
13. தங்கும் இட ஏற்பாட்டுக் குழு
14. மாநாட்டு அரங்க அமைப்புக் குழு
15. மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு
16. கோவை மாநகர மேம்பாட்டுக் குழு
17. மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு
18. மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு
19. போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு
20. பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு
21. ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இரத்து
=========================

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்த முதலில் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்கள் சம்மதிக்காததால் இந்த மாநாட்டுக்கு ஈடாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது

புறக்கணிப்பு
===========

திமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்துள்ளன. "கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்." மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கைவிடுத்துள்ளார்

வதை முகாங்களில் ஈழத் தமிழர்கள்
=========================

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்

தகவல்கள்
http://www.ulakathamizhchemmozhi.org மற்றும் விக்கி

7.4
Average: 7.4 (10 votes)
Your rating: None Average: 7.4 (10 votes)