செம்மொழி மாநாடு முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19966
செம்மொழி மாநாடு முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இருமடங்கு அல்லது 20 லட்சம் ரூபாய் கூடுதல் "சரக்கு' இருப் பில் வைத்திருக்க, கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஏதுவாக, தனியார் தொழிற்சாலைகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரவு பகலாக தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஐந்து நாள் விடுமுறையில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை மூன்று நாள் என்றும், அடுத்த இரண்டு நாள், மற்ற விடுமுறை நாட்களில் சரி கட்டப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க வசதியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "டாஸ்மாக் ஊழியர்களும் ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும்;குடும் பத்துடன் மாநாட்டில் பங்கேற்கலாம்' என, ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், முட்டுக்கட்டையாக சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பங்கேற்ற கூட்டத்தை நடத்தியது.
இதில்,"உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, மாவட் டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் மதுக்கடைகளையும் வெள்ளை அடித்து சுத்தப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுபான விற்பனைக்கடை என்ற பெயருக்கு பதில் "தமிழ்நாடுமாநில வாணிபக்கழகம்' என பெயர் மாற்ற உத்தரவிடப்பட்டது.திருடு போகாமல் இருக்க விற்பனை செய்யும் பகுதியில் இரும்பு கதவு அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும், மாநாடு முடியும் வரை அனைத்து ஊழியர்களும் கடையில் இருக்க வேண்டும் எனவும் முடிவானது. முக்கியமாக, தற்போது கடைக்கு வரும் சரக்கை விட இரு மடங்கு, அல்லது 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சரக்கை இருப்பில் வைத்திருக்க வேண்டும். கடைக்கு அருகில் அல்லது தெரிந்த பாதுகாப்பான இடத்தை குடோனாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர், உயரதிகாரிகள்.
செம்மொழி மாநாடு நடக்கும் நாட்களில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு வெள்ளை அடித்தல், பெயர்ப்பலகை மாற்றம் ஜரூராக நடந்து வருகிறது. அனைத்துக்கடைகளுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் வரத்துவங் கியுள்ளன.
- 338 reads

