vinoth's படம்

 

 

(கணினியில் ட்ரூபாலை நிறுவுதல் – Drupal Installation)

 

கடந்த பதிவில் ட்ரூபாலின் முக்கிய உறுப்புகளைப்பற்றி பார்த்தோம். அது முக்கிய பதிவாக இருப்பதால் அதைப்படிக்கத் தவறியவர்கள் http://tamilnanbargal.com/node/26782 இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.

முதலில் ட்ரூபாலை பயன்படுத்த கணினியில் அதை நிறுவிக்கொள்ள வேண்டும்.

இவ்வேலையை இரண்டு பகுதியாக நாம் பிரித்துக்கொள்ளலாம்.
பகுதி 1: டாரூபாலுக்கு தேவையான மற்ற மென்பொருட்களை கணினியில் இல்லாவிட்டால் அதை முதலில் நிறுவுதல்
பகுதி 2: ட்ரூபாலை நிறுவுதல்

இதில் முதல் பகுதியை தற்போது முழுவதுமாக ஆழ்ந்து தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தடவை நிறுவினால் போதுமானது என்பதால் இதைப்பார்த்து ஒரு தடவை நிறுவிவிட்டு விட்டுவிடலாம்.

இரண்டாவது பகுதி ட்ரூபாலை நிறுவ வேண்டிய தருணங்களிலும் புதிய பதிப்பு போடும் போதும் தேவைப்படும்.

நீங்கள் ட்ரூபாலை சொந்த கணினியில் நிறுவாமல் இணையத்தில் வாங்கப்பட்ட வழங்கி கணினியில் (Server)  நிறுவப்போவதாக இருந்தால் இப்பகுதியை நீங்கள் தவிர்த்து விட்டு இரண்டாவது பகுதியை படிக்கலாம. ஏனெனில் அந்தக்கணினியில் இதற்குத்தேவையான எல்லா மென்பொருட்களும் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும். அல்லது உங்கள் கணினியில் இதற்கான மென்பொருட்கள் ஏற்கெனவே இருப்பினும் இப்பகுதியை தவிர்த்துவிடலாம்.

ட்ரூபாலுக்கு தேவையான மென்பொருட்கள்:

முன்பு கூறியபடி ட்ரூபால் PHP மற்றும் MYSQL (அ) PgSQL இவற்றில் செயல்படுமாறு உருவாக்கப்பட்டுள்ளதால் இவைகளை நிறுவ வேண்டும். இதைவிட மேலும் ஒன்று மிக முக்கியமாக தேவை. அது ஒரு இணைய வழங்கி. இணைய வழங்கி என்பது நீங்கள் இணைய உலாவியில் ஒரு இணைய முகவரியை கொடுக்கும் போது அதற்கான சரியான பக்கத்தை சரிபார்த்து செயல்படுத்தி உலாவிக்கு கொடுக்கும் ஒரு மென்பொருள்.
ட்ரூபால் மற்ற இணைய வழங்கியிலும் செயல்படும் என்றாலும் அப்பாச்சி (Apache)  எனும் இணையவழங்கி இதற்கு சிறந்தது.

ஆக, PHP, MYSQL, APACHE இந்த மூன்றும் ட்ரூபால் இயங்க நமக்கு தேவை. இதை நீங்கள் ஒவ்வொன்றாக நிறுவ ஆரம்பித்தால் ட்ரூபால் படிக்கும் ஆசையே இல்லாமல் போய்விடும் என்பது உறுதி.

இந்த நிறுவுதலை எளிமைப்படுத்த நமக்கு கைகொடுப்பது WAMP எனும் ஒரே ஒரு மென்பொருள். அதாவது  PHP, MYSQL, APACHE இந்த மூன்றையும் தனித்தனியாக நிறுவுவதற்குப்பதிலாக நீங்கள் WAMP இதை மட்டும் நிறுவினால் போதுமானது.

WAMP என்பதற்கு Windows + Apache + MySQL + (PHP/Perl/Python) என்ற பதங்களின் சுருக்கம். அதாவது விண்டோஸ் இயங்குதளத்தில் PHP, MYSQL, APACHE இவற்றை நிறுவி மேலாண்மை செய்யும் மென்பொருள. ( Perl, Python என்பது PHP ஐ போலவே மற்ற பிரபலமான இணைய மொழிகள்). நாம் விண்டோஸில் பயன்படுத்துவதால் WAMP பயன்படுத்துகிறோம். இதையே LINUX ல் நீங்கள் நிறுவப்போவதாக இருந்தால் அதிலேயே இவைகள் இயல்பாகவே இருக்கும். அல்லது WAMPP - க்குப்பதிலாக LAMP SERVER பயன்படுத்தலாம். Lamp என்றால் linux + Apache + MySql + (Python | PHP | Perl)

WAMP நிறுவுதல்:

WAMP ஐ தரையிறக்க http://sourceforge.net/projects/wampserver/files/WampServer%202/WampServer%202.0/WampServer2.0a.exe/download இப்பக்கத்திற்கு சென்று மென்பொருளை எடுத்துக் கொள்ளவும்.
தரையிரக்கப்பட்ட Wamp Server ஐ மற்றைய மென்பொருள் நிறுவுதல் போலவே எளிதாக  நிறுவிக் கொள்ளலாம்.

தரையிறக்கி முடிந்ததும் அந்த WampServer2.0a.exe கோப்பை திறக்கவும். (double click or click and press Enter)

  1. முதலில் WAMP ஏற்கெனவே நிறுவியிருப்பதை உறுதிப்படுத்த செய்திவரும். அதில் yes கொடுக்கவும்.
  2. NEXT கொடுக்கவும்
  3. I accept the agreement தெரிவு செய்து NEXT கொடுக்கவும்
  4. இதிலும் NEXT கொடுத்துவிடலாம். ஒருவேளை நீங்கள் அடிக்கடி கணினியில் C Drive உடன் விளையாடி Format செய்து விண்டோஸை மறுபடி மறபடி நிறுவுபராக இருந்தால் இதில் C: என்பதற்கு பதிலாக உங்கள் வன்தட்டின் மற்றொரு Drive ன் எழுத்தை கொடுக்கலாம். இதன் மூலம் WAMP எங்கே நிறுவப்பட வேண்டும் என உறுதிசெய்கிறோம். சரியாக தெரியவில்லை எனில் எதையும் மாற்றாமல் NEXT கொடுக்கவும்
  5. NEXT கொடுக்கவும்
  6. இவ்வாறு வந்தால் yes கொடுக்கவும் (Firefox நிறுவியிருந்தால் மட்டும் இவ்வாறு வரும் )
  7. இப்பகுதி மின்னஞ்சல் அனுப்புவதற்கான வழியை கேட்கிறது. இதைப்பற்றி பின்பு பார்க்கலாம். NEXT கொடுத்துவிடவும்.
  8. அவ்வளவும் தான். நிறுவுதல் முடிந்தது. Finish கொடுக்கவும்.


நிறுவி முடிந்த்தும் Start -> Programs –> WAMP Server ல் இருந்து அதை
செயல் படுத்தவும். அது ஒரு குட்டி படமாக உங்கள் டாஸ்க் பாரில்  (task bar) ஒட்டிக்கொள்ளும்,
சிறிது நேரம் கழித்து அது வெள்ளை நிறத்தில் இருந்தால் WAMP நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நிறுவுதலில் எந்த பிரச்சனையும் இல்லை என  அர்த்தம். அந்தப் படம் சிவப்பு நிறமாகவோ அல்லது சிறிது மஞ்சள் நிறமாகவோ இருந்தால் நிறுவதல் தலைவலி ஆரம்பம் என அர்த்தம்.

WAMP சரியாக செயல்படுகிறதா எனப்பார்க்க இணைய உலவியை திறந்து அதில் http://localhost என்று தட்டச்சினால் wampserver என்ற பக்கம் காட்சியளிக்கும்.

[ Localhost என்பது அவரவர் கணினியின் பெயராகும். இணையத்தில் ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு பெயர் மற்றும் ஐபி முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதே கணினியை குறிக்க localhost என்பதை பயன்படுத்தலாம். இதற்குப்பதிலாக இதன் ஐபி முகவரியான 127.0.0.1 என்பதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ]


இவ்வாறு வரவில்லை என்றாலோ அல்லது WAMP ஐக்கான் (icon) மஞ்சள் அல்லது சிகப்பு நிறத்தை காட்டினாலோ அதை சொடுக்கி (Left click)  restart All Services கொடுத்துவிட்டு காத்திருக்கவும். மறுபடியும் வெண்மை நிறமாகாமல் மஞ்சள் அல்லது சிகப்பு நிறத்தை காட்டினால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்.

( வெண்மை நிறம வந்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்ட்ட சாலி. இப்பகுதியை தவிர்த்துவிட்டு அடுத்த பகுதிக்கு தாவி விடலாம் )

WAMP சரியாக செயல்படாமைக்கு சில காரணங்கள்

(http://localhost என்பதில் wampserver பக்கம் சரியாக வந்த பின்பும் WAMP ஐக்கான் (icon) மஞ்சள் அல்லது சிகப்பு நிறத்தை காட்டினால் MYSQL பிரச்சனை என்று அர்த்தம். இவ்வகை பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு.)

ஏற்கெனவே உங்களிடம் IIS, APACHE, Tomcat போன்ற வேறு இணைய வழங்கி மென்பொருள் நிறுவப்பட்டிருந்தால் WAMP ல் சில மாற்றங்கள் செய்யதாக வேண்டும். ஏனென்றால் IIS ஏற்கெனவே HTTP துறை 80 ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கும், அதையே WAMP ம் பயன்படுத்த Windows அனுமதிக்காது.

இணைய துறை எண் (Port Number) என்பது இயல்பாக HTTP க்கு 80 ஆகும். அதாவது நீங்கள் http://tamilnanbargal.com/ என போடுகிறீர்கள் எனில் http://tamilnanbargal.com:80/ என்று போட்டிருக்கிறீர்கள் என அர்த்தம். இதை இணைய உலாவி பார்த்துக்கொள்ளும். நமது கணினியில் இந்த இயல்பான துறை எண்ணை IIS, APACHE, Tomcat  போன்ற வேறு இணைய வழங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தால் Apache அதை பயன்படுத்த முடியாது

 இதை சரிசெய்ய   -
1. தற்காலிக தீர்வு : WAMP தேவைப்படும் நேரம் மட்டும் IIS ஐ நிறுத்தி வைத்து விடலாம். நீங்கள் IIS பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதை நிறுத்த start -> run ல் அல்லது command prompt ல் IISRESET /STOP என்று போட்டால் போதும்.
2. நிரந்தர தீர்வு: Apache ல் HTTP துறை ஐ 8080, 4040, 4848 என்பது போல் ஏதாவது ஒரு எண்ணை   கொடுக்க வேண்டி வரும்.

அப்பாச்சி இன் துறை எண்ணை மாற்ற

Wamp ஐக்கானில் சொடுக்கி (left click)  வரும் பட்டியலில் Apache  - httpd.conf என்பதை தெரிவு செய்யவும்.


Apache ன் அமைவுகள் கோப்பு httpd.conf திறக்கும். அதில் 53 ஆவது மற்றும் 143 ஆவது வரியில்
Listen 80 மற்றும் ServerName localhost:80 என்று இருக்கும்.

 

அதில் 80 என்பதை மாற்றி அதற்குப்பதிலாக 8080, 4040, 4848 என்பதில் ஏதேனும ஒன்றை போட்டு சேமிக்கவும். . இப்போது மறுபடி டாஸ்க் பாரின் Wamp ன் படத்தில் சொடுக்கி  வரும் பட்டியலில் Restart All Service கொடுத்து பாருங்கள். கிட்டத்தட்ட இதில் சரியாகிவிடும்

இதிலும் சரியாக வில்லை எனில் அதே Wamp படத்தில் சொடுக்கி வரும் பட்டியலில் Apache -> Apache Error Log என்பதை தேர்வு செய்தால் உண்மை பிழை தெரிய வரும். அந்தப் பிழையை பொறுத்து மேற்படி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

முக்கியமாக நீங்கள் HTTP துறை ஐ மாற்றி யிருந்தால்  இணைய உலாவியில் http://localhost என்று போடுவதற்குப் பதிலாக துறை எண்ணையும் சேர்த்து http://localhost:8080 என்பது போல்
கொடுக்க வேண்டியிருக்கும்.  

 

அடுத்த பகுதியில் ட்ரூபாலை நிறுவுதலை காணலாம்.

வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/node/26967

8
Your rating: None Average: 8 (1 vote)