vinoth's படம்

Message Translation in GMail
Message Translation in GMail

உங்களுக்கு ஜிமெயிலில் அந்திய மொழிகளில் நிறைய மடல்கள் வருகிறதா? அதில் அதிகமாக தேவையில்லாத மடலாகவே இருக்கும்.
ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என அறிந்து கொள்ள ஆர்வலா?

இதை எளிமைப்படுத்தி உலக மொழிகளுக்கு மிகச்சிறந்த சேவையை செய்திருக்கிறது கூகிள்

இதன் இணைய தளம் http://translate.google.com
இங்கே சென்று சொற்களை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

தற்போது இதே சேவையை ஜிமெயில் மடல் படிக்கும் போது அதிலிருந்தே மொழிமாற்றி படிக்கும் வசதியை ஜிமெயில் வழங்குகிறது..

இதை செயல் படுத்தி விட்டால் உங்களுக்கு அந்திய மொழிகளில் மடல் வந்து அதை நீங்கள் திறந்தால் ஜிமெயில் தானாகவே மொழிமாற்ற வேண்டுமா என காட்டும்.. இதிலிருந்து மொழியை தெரிவு செய்து படித்துக்கொள்ளலாம்..

இதை செயல் படுத்த ஜிமெயில் settings ல் Labs பகுதியில் Message Translate என்பதை செயல் படுத்தினால் மட்டும் போதும்.

ஒரு வேளை உங்கள் ஜிமெயில் கணக்கில் Labs பகுதி இல்லை எனில் உங்கள் இணைய உலவி மிக பழையது என அர்த்தம். நீங்கள்
www.mozilla.com/firefox/ ,
www.google.com/chrome என்பதில் ஒன்றை நிறுவி அதை பயன்படுத்தலாம்.

தற்போது தமிழிற்கான மொழிமாற்ற சேவை குறைவாகவே உள்ளது. சீக்கிரமே தமிழையும் கூகிள் இணைக்கும் என எதிர்பார்க்கலாம்.

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

visilkumar's படம்

romba nanri


romba nanri Clap Clap Clap


kumar


Ragavan's படம்

தகவலுக்கு மிக்க நன்றி


தகவலுக்கு மிக்க நன்றி வினோத்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..