பிரபல ஹாலிவுட் நடிகர் "வில்ஸ்மித்"தோட 12 வயசு பையன் "சேடன்ஸ்மித்"தும், ஜாக்கிசானும் சேர்ந்து பரபர...ன்னு கலக்கியிருக்குற படம் தான் இந்த தி கராத்தே கிட்.
1980 - ஆம் வருசத்துல வெளியாகி வசூல்ல சாதனை புரிஞ்ச "தி கராத்தே கிட்" படம் மறுபடியும் இவங்க ரெண்டு பேரோட நடிப்புல வெளிவந்திருக்கு.ஆனா, பழைய படம் மாதிரி இல்லாமல் காலத்துக்கேற்ப பல மாற்றங்களோட பாக்குறவங்களை படத்தோட ஒன்றி போற அளவுக்கு படத்தை தந்திருக்காங்க.
படம் ஆங்கிலப்படமா இருந்தாலும் படம் முழுக்க முழுக்க சீனாவுல தான் நடக்குது,அதனால பாக்குறதுக்கு அசல் சைனீஸ் நூடுல்ஸ் மாதிரியே ரொம்ப டேஸ்டியா இருக்கு.
அமெரிக்காவுல அம்மாவோட வசிக்கிற ஜேடன்ஸ்மித் அவனோட அம்மாவுக்கு வேலைல மாற்றல் கிடைச்சதுனால சைனாவுக்கு வர்றான்.வந்த இடமும்,அங்க வசிக்கிற மக்களும்,அங்க நிலவுற சூழ்நிலைகளும் அவனுக்கு ரொம்ப புதுசா இருக்கு.
அங்க அவனோட அம்மா அவனை ஒரு பள்ளியில படிக்க சேர்த்து விடுறாங்க,அங்க கூட படிக்கிற ஒரு பொண்ணோட நட்பு கிடைக்குது,அந்த நட்பை அங்க இருக்குற இன்னொரு பசங்களோட கும்பல் கண்டிக்கிறதும் மட்டுமில்லாம,ஜேடனை அடிக்கடி அடிச்சி துன்புறுத்தவும் செய்றாங்க..,இதனால நாம என்ன பன்றதுன்னு தெரியாம பயப்படுற ஜேடனுக்கு அந்த ஊரே புடிக்காம போவுது.
இந்த நேரத்துல தான் ஜேடன் தங்கியிருக்குற பிளாட்ல அந்த பிளாட்டை பராமரிக்கிற வேலையில இருக்குற ஜாக்கிசானோட நட்பு கிடைக்குது.இவனோட பிரச்சனையை தெரிஞ்சிக்கிற அவர்,ஜேடனுக்கு குங்ஃபூ கத்து குடுக்க முன் வர்றாரு...
தன்னை அடிச்சவங்களை எதிர்க்கிற தைரியத்தையும் வீரத்தையும், தன்னம்பிக்கை யையும் வளர்த்துக்கிட்டு அவங்க பள்ளியின் சார்பா நடக்குற குங்ஃபூ போட்டியில கலந்துக்குறான் ஜேடன்.அந்த போட்டியில அவன் கலந்துக்கிட்டு,அவன் எதிரிகளை ஜெயிச்சி, போட்டியிலும் வெற்றி பெற்றானா? இல்லையாங்குறது தான் படம்.
இடம்,மொழி,மதம்,நாடு வாரியா மக்கள் பிரிஞ்சிருந்தாலும் எல்லா நாட்டோட கலாச்சாரமும்,பண்பாடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்குங்கிறதை இந்தப் படத்தோட ஒவ்வொரு காட்சியும் நமக்கு உணர்த்துது.அந்தளவுக்கு படத்துல வர்ற பெரும்பாலான காட்சிகள் நம்ம வீட்டுல நடக்குற மாதிரியே இருக்கும்.
குறிப்பா வீட்டுல எப்போ பார்த்தாலும் தன்னோட சட்டையை கண்ட இடத்துல கழட்டி போடுற ஜேடனை அவனோட அம்மா திட்டுறது நம்ம ஒவ்வொருத்தரோட வீட்லயும் நடத்திருக்கும்.ஜேடனோட அந்த பொறுப்பற்ற செயல் மூலமாவே அவனுக்கு ஜாக்கிசான் குங்ஃபூ கலையை கத்து குடுக்குறது ஒரு அசத்தலான திருப்பம்.
குங்ஃபூ கலை எல்லாத்திலேயும் இருக்கு,நாம நிக்குறதுல,நடக்குறதுல,நீ இப்படி சட்டையை கழட்டி போடுறதுல இப்படி எல்லாத்திலேயும் பரவியிருக்கு என்று ஜாக்கிசான் குங்ஃபூ கலையின் மகத்துவத்தை சொல்ற இடம் அபாரம்.
புலிக்கு பொறந்தது எப்படி பூனாயாகும்னு சொல்ற மாதிரி வில்ஸ்மித்தோட 12 வயசு பையனோட அந்த துறுதுறுப்பான நடிப்பும்,எப்போ பார்த்தாலும் வளவளன்னு பேசிக்கிட்டே இருக்குற சுறுசுறுப்பும் படம் பாக்குற எல்லாருக்கும் தொத்திக்கும் அந்தளவுக்கு ரொம்ப அருமையா நடிச்சிருக்காப்ல,
மத்தவங்ககிட்ட அடிபடாம இருக்கணும்னா என்ன பண்ணனும், அதுக்கு ரொம்ப பேசக் கூடாது,நான் ஜெயிக்கிறேனா,தோத்து போறேனாங்குறது முக்கியம் இல்ல,அங்க இருந்து வர்றப்ப நான் பயமில்லாம வரணும் இப்படி யதார்த்தமா வர்ற வசனங்கள் நம்மை இருக்கையோட சேர்த்து கெட்டி போட்டுடுது.
இப்படி ஒரு படத்துல ஹெஸ்ட் ரோல்ல நடிச்சதுக்கு உண்மையிலேயே மாபெரும் நடிகர் ஜாக்கிசானை அவரோட ரசிகனா நான் கைகூப்பி வணங்குறேன்.ஏன்னா..,தமிழ்ல உள்ள ஹீரோக்கள் தங்களை ஒத்த நடிகர்கள் கூடையே சேர்ந்து நடிக்க மரியாதை குறைவு பாக்குறப்போ தன்னோட ரசிகர்கள்கிட்ட இருக்குற தன்னோட தனிப்பட்ட பாப்புலாரிட்டியை பத்தி கொஞ்சம் கூட அலட்டிக்காம, ஒரு சின்னப்பையனுக்கு, முக்கியத்துவம் இருக்குற படத்துல அவனுக்கு குங்ஃபூ கத்து குடுக்குற சாதாரண குங்ஃபூ மாஸ்டரா வர்ற கேரக்டர்ல நடிக்க ஒத்துக்கிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் தான்.அதுவும்,முகத்துல எந்தவித ஒப்பனையும் இல்லாம,அவருக்குன்னு கதாநாயகி இல்லாம ச்சசே..கலைஞன்னா அவர்தான் உண்மையான கலைஞன்.உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ஜாக்கி.
ஜெடனோட அம்மாவா நடிச்சிருக்குற டாராஜி பி.ஹென்சன் ஒரு மகனோட எண்ணங்களை,வலிகளை புரிஞ்சிக்கிற ஒரு அழகான அம்மாவா கலக்கியிருக்காங்க. ஒரு அம்மா,மகனுக்கான உறவை இவ்ளோ அருமையா எந்த தமிழ்ப்படத்திலேயும் நாம பார்த்திருக்க முடியாது.
ஒரே ஒரு பாட்டு சீனுக்கே தமிழ்ல நூறு பேரை ஆடவிடுற இயக்குனர்களுக்கு மத்தியில இந்த படம் முழுக்க ஜேடன்,ஜாக்கிசான்,டாராஜி மூன்னு பேரையும் சுத்தி கதையை பிண்ணி அதை கொஞ்சம் கூட போரடிக்காம குடுத்த ஹாலந்து நாட்டு இயக்குனரான இப்படத்தோட இயக்குனர் ஹரால்ட் ஸ்வர்ட்(harald zwart).டை பாராட்டியே தீரனும்.
"குங்ஃபூகலை"ங்கிறது அடுத்தவங்களை வீணா வம்புக்கிழுத்துத்து சண்டைக்கு போற வைக்கிற கலை இல்லை.அது மற்றவர்களை மதித்து,நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுற ஒரு உன்னதமான கலை என்பதை இந்தப்படம் நமக்கு சொல்ல வர்ற மெசேஜ்.
படத்துக்கு போனீங்கன்னா ரெண்டேகால் மணி நேரம் படம் போறதே தெரியாது...அந்தளவுக்கு படத்தோட ஒன்றி போயிடுவீங்க...மிஸ் பண்ணிடாதீங்க...
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 537 reads
கருத்துகள்
பகிர்விற்கு நன்றி ஜாக்கி
பகிர்விற்கு நன்றி
ஜாக்கி அதிகமாக இப்போதெல்லாம் ஒரு துணை நடிகருடன் நடிப்பதுதான் வழக்கம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பகிர்விற்கு நன்றி ஜாக்கி
பகிர்விற்கு நன்றி
ஜாக்கி அதிகமாக இப்போதெல்லாம் ஒரு துணை நடிகருடன் நடிப்பதுதான் வழக்கம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மிக்க நன்றி.. தமிழில் பார்க்க
மிக்க நன்றி.. தமிழில் பார்க்க ஆசைதான். ஆனால் இங்கே தெலுங்கில்தான் ரிலீஸ் ஆகும்..
Anyway thanks..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
சரியான விமர்சனம்...நன்றி.
சரியான விமர்சனம்...நன்றி. 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.












