நீங்கள் Gnome 3 பயன்படுத்துகிறீர்களா? அதை இன்னும் மேம்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் Gnome 2 ல் பயன்படுத்தி வந்த பழைய பல வசதிகள் தற்போது பயன்படுத்த கடினமாகவே இருந்திருக்கும். அதில் முக்கியமானவை
௧. power off: Gnome பயனர் மெனுவில் நீங்கள் ALT கீ அழுத்தினால் மட்டுமே நீங்கள் கணினியை அணைக்க முடியும். அல்லது கணினி தற்காலிக செயலிழப்பு நிலையிலேயே இருக்கும்.
௨. Window list: Gnome Panel ல் முன்பு பார்த்த தற்போது இயங்கிய நிலையில் இருக்கும் பயன்பாடுகளின் பட்டியல் Gnome 3 ல் இருந்திருக்காது.
௩. APP menu: அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் தெரிவு செய்ய முன்பு இருந்த Gnome APP menu தற்போது இல்லாமல் இருந்திருக்கும்.
இவை மட்டுமல்ல. இதே போல பல பயன்பாடுகளும் தற்போதையை புதிய Gnome 3 ல் இல்லாமல் இருந்திருக்கும்.
ஆனால் இவற்றை தற்போது தேவை எனில் எளிதில் செயல்படுத்த முடியும். உங்களுக்காகவே Gnome 3 Shell Extensions அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Gnome Shell Extensions தளத்தில் பல மிகவும் பயன்படக்கூடிய Extensions கிடைக்கிறது.
நிறுவுவது எப்படி?
நீங்கள் Gnome Shell Extensions தளத்தை பார்வையிடும் போது Gnome ஐ பயன்படுத்தியவண்ணம் இருக்க வேண்டும். அல்லது அந்த Extension தற்போதைய இயங்குதளத்தில் செயல்படாது என்று கூறிவிடும்.
ஒவ்வொரு Extensions பக்கத்திலும் இடது பக்கம் அப்பயன்பாட்டை Enable/Disable செய்வதற்கு ஏற்ற வகையில் ON/OFF இயங்கிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ON என்று செயல்படுத்தினால் பயன்பாட்டை நிறுவ வேண்டுமா என GNOME கேட்கும். அதிலிருந்து நிறுவுக என்பதை தெரிவு செய்தால் உடனடியாக பயன்பாடு செயல்படுத்தப்பட்டிருக்கும்.
முக்கிய பயன்பாடுகள்:
Alternative Status Menu:

பயனர் மெனுவில் power off எங்கே என்று தேடுபவர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால் நீங்கள் எளிதாக power off செய்ய முடியும்.
முகவரி : Alternative Status Menu
Dock:

பல விருப்பத்தெரிவு பயன்பாடுகள் டெஸ்க்டாப்பிலேயே dock bar போல வைத்திருக்க இப்பயன்பாடு உதவும்.
முகவரி : Dock
Favorites Menu:
உங்களின் விருப்பத்தெரிவு பயன்பாடுகளை panel ல் மெனுவாக வைத்திருக்க இப்பயன்பாடு உதவும்.
முகவரி : Favorites Menu
Music Integration:

பலவகைப்பட்ட இசைபயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தும் போது அவற்றை எளிதாக கட்டுப்படுத்த இது உதவும்.
முகவரி : Music Integration
Places Status Indicator:

உங்கள் கணினியில் உள்ள drives, directories போன்றவற்றை எளிதாக பட்டியலிட இப்பயன்பாடு உதவும்.
முகவரி : Places Status Indicator
Window Icon List:

தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது.
முகவரி : Window Icon List
Window List:

மேலே குறிப்பிட்டது போலவே தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது.
முகவரி : Window List
இவை மட்டுமல்ல, இதே போன்ற அனைத்து பயன்பாடுகளையும் நீங்கள் Gnome 3 Shell Extensions இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு தேவைப்படுவனவற்றை நிறுவலாம்.
- vinoth's blog
- Login or register to post comments
- 368 reads







