oruvaarthai's படம்

ணைய உலகில் கூகுளின் சேவை அளப்பரியது. ஆப்பிள் போன்ற பணக்கார நிறுவனங்கள் எல்லாமும் முக்கியமான மென் பொருட்களை யும், சேவைகளை யும் தனது பாவனையாளர்களிடம் அநியாய காசுக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் கூகிள் நிறுவனம் மட்டும் தான் இணைய பயன்பாட்டாளர்களுக்கு பெரும்பாலான சேவைகளை இலவசமாக தருகிறது.

கூகுளின் அசைக்க முடியாத NO-1 இடத்தை மைக்ரோசாப்ட்,யாஹூ உட்பட மற்ற இணைய உலகின் ஜாம்பவான்களாலும் தோற்கடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் கூகுளின் சேவைத்தரம் ஒரு பக்கம் இருந்தாலும், இது போன்ற இலவச சேவைகளும் ஒரு காரணம் தான்.

எதிலும்,எப்போதும் இலவசங்களை மட்டுமே அதிகமாக விரும்பும் இந்தியா போன்ற நாடுகளில் கூகுளின் ஆதிக்கம் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கக் காரணம் கூகுளின் இலவச சேவைகள் தான்.

குறிப்பாக இணையதளத்தில் தமிழில் எழுதுவது என்பது ஒரு குதிரை கொம்பான விஷயமாக இருந்து வந்தது.அதற்காக முறையான தமிழ் - டைப்பிங் முறையை நாம் கற்று தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்த நேரத்தில் கூகுள் அதிரடியாக google transliteration என்ற சேவையை தொடங்கியது.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான WALLSTREET JOURNAL ன் தமிழ்வடிவம் 

இது நாம் பேச்சு வழக்கில் பேசுவதை ஆங்கிலத்தில் எழுதினால் அதை அப்படியே தமிழில் மாற்றி தரும்.அதாவது ‘வணக்கம்’ என்று நாம் பேச்சு வழக்கில் பேசுவதை VANAKKAM என்று டைப் செய்தால் ‘வணக்கம்’ என்று தமிழில் வரும். இதன் மூலம் முறையான தமிழ் டைப்பிங் முறை தெரியாதவர்கள் கூட மிக எளிதாக கணினியில் தமிழில் எழுத முடிந்தது.

ஆரம்பத்தில் இணைய சேவை இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது,ஆனால் கூகுள் அதையும் எளிதாக மாற்றி google transliteration சேவையை ஒரு மென்பொருளாக நமக்கு தந்தது. அதை நாம் தரவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக்கொண்டால் இணைய இணைப்பே இல்லாமல் எந்த நேரமும் நாம் கணினியில் தமிழ் மொழியில் டைப்பிங் செய்யலாம்.

தமிழ் தவிர மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,பஞ்சாபி,மராத்தி,
ஒரியா,குஜராத்தி போன்ற தென்னிந்திய மொழிகளிலும் கூகுள் இந்த சேவையை வழங்கி வருகிறது.

இதன் பயனாக இன்றைக்கு இணையத்தில் பிளாக்கர்கள் உட்பட தொழில்முறை சார்ந்த எழுத்தாளர்கள் பலரும் கூகுளின் இந்த google transliteration மென்பொருளைப் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள்.

ஆங்கிலத்தில் எனது வலைப்பூ 

இப்படி எந்த சேவையை எடுத்துக்கொண்டாலும் அதில் தனி முத்திரை பதித்து இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்து வரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் ஒரு மகத்தான புதிய சேவை தான் 
google translate  என்ற “ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் வசதி” சேவை.

கூகுளின் இந்த புதிய சேவை வேறு எந்த நிறுவனங்களாலும் கூகுளின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு இணைய ரசிகர்களின் மத்தியில் ஒரு மகத்தான வரவேற்பை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

காரணம், இந்த சேவையின் மூலம் ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளில் இருக்கும் இணையதளங்களை நாம் தமிழில் வாசிக்க முடியும்.அதேபோல நாம் தமிழில் எழுதுவதை அப்படியே ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.

உதாரணமாக wallstreet journal, usatoday, The Washington Post போன்ற உலக அளவில் பிரபலமான தினசரி பத்திரிகைகளையும், உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்களையும் நாம் தமிழில் படிக்க முடியும்.

ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,பெங்காலி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கூகுள் இந்த சேவையை வழங்குவதால் இது சாத்தியமாகிறது.

முதலில் நீங்கள் http://translate.google.com என்ற இந்த இணையதள முகவரிக்கு சென்று முதலில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு அங்குள்ள காலி பெட்டியில் நீங்கள் இணையதள முகவரியை கொடுத்தால் அது நீங்கள் மாற்ற நினைக்கும் மொழிக்கு மொழிபெயர்த்து காட்டும்.

நான் எழுதிய ஆங்கிலம் 

உதாரணமாக from : english to : tamil என்று தேர்வு செய்து கொண்டு ஒரு ஆங்கில இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் அடுத்த சில நொடிகளில் அந்த ஆங்கில இணைய தளம் தமிழில் காட்சியளிக்கும்.

அதேபோல from : tamil to : english என்று தேர்வு செய்து கொண்டு அந்த காலி பெட்டியில் நீங்கள் தமிழ் மொழியில் எழுதினால் நீங்கள் எழுதியவை ஆங்கிலமாக மாறிவிடும். அதுவே நீங்கள் எழுதியதை ஹிந்தியில் மொழிபெயர்க்க விரும்பினால்  ஹிந்தி மொழியை தேர்வு செய்தால் போதும். இப்படியாக நீங்கள் எழுதியதை ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.

இன்னும் சில வசதிகள் :

# தமிழில் உள்ள ஒரு வார்த்தைக்கு ஜப்பானிய மொழியில் என்ன அர்த்தம்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

# கூகுளில் நமது தேடலை எந்த மொழியிலும் மேற்கொள்ளலாம்.

# பல மொழிகளில் உள்ள யூ-ட்யூப் வீடியோக்களை உங்களுக்கு தெரிந்த மொழியில் சப்-டைட்டிலோடு பார்த்து ரசிக்கலாம்.இந்திய மொழிகளில் இப்போதைக்கு ஹிந்தி மொழி மட்டுமே சப்போர்ட் செய்கிறது.

# இந்த பக்கத்துக்கு சென்று தான் நீங்கள் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் wordpad இல் எழுதியதை டாகுமெண்ட் பைலாக மாற்றி கொடுத்தாலும் போதும்,ஒருநொடியில் அது நீங்கள் விரும்பிய மொழியில் மொழிபெயர்த்து கொடுக்கும்.இப்படி இதில் இன்னும் பல வசதிகளை கூகுள் நிறுவனம் தர இருக்கிறது.

இந்த சேவை இப்போது சோதனை முறை ஓட்டம் என்பதால்  மொழிபெயர்ப்புகள் முழுமையானதாக இல்லை. குறிப்பாக பிறமொழிகளின் பக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் போது அது நாம் தமிழில் எளிதாக புரிந்து படிக்கக்கூடிய அளவில் முழுமை யானதாக இல்லை. பெரும்பாலான பக்கங்கள் ‘தங்கிலிஷ்’ ஆகவே இருக்கிறது.

என்றாலும் கூகுள் இனி வரும் காலங்களில் இந்த குறைகள் அனைத்தையும் நீக்கி இந்த ‘மொழிபெயர்ப்பு’ சேவையை ஒரு முழுமையான சேவையாக தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
0
Your rating: None
http://oruvaarthai.blogspot.com/2011/06/100.html