செல்வராஜ்'s படம்

பெயர் பிரச்சனை பெரிய பிரச்சனை!

இந்தியாவை விட்டு வெளியே வரும் ஒவ்வருவரும் சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய பாஸ்போர்ட்டில் பார்த்தீர்களானால் தந்தையின் பெயரை முதலிலும் அடுத்து நம்முடைய பெயரையுமாக போட்டிருப்பார்கள். surname என்பதில் சும்மா ஒரு வரை போட்டுவிடுவார்கள்.

இதனால் அரபு நாட்டில் இருப்பவர்களை, அரபிகள் தந்தையின் பெயரை சொல்லி கூப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு ஐரோப்பாவில் surname தான் முதலில் கேட்பார்கள். நம்ம ஆட்கள் உடனே சொல்வார்கள் எங்க ஊரில் surname எல்லாம் கிடையாதுன்னு. அதுக்காக சும்மா விட்டுருவாங்களா என்ன? சட்டப்படி ஒரு surname கொடுத்துதான் ஆகணும்.இதனால் நம்மாட்கள் தங்களின் கடைசி பெயரை surname ஆக கொடுத்து விடுவார்கள். நான்கூட அப்படித்தான் செய்திருக்கிறேன். நான் லண்டன் வந்த புதிதில் வங்கி கணக்கு தொடங்க சென்ற போது, என் பாஸ்போர்ட்டை பார்த்து விட்டு அதில் surname இல்லையென திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்புறமாக வேறு வங்கியில் சென்று கணக்கு தொடங்கினேன். இந்த வங்கியில் உள்ளவருக்கு இந்திய நடைமுறை தெரிந்ததால் பிரச்சினை இல்லாமல் போனது. நான் திருமணத்திற்கு முன்பே வெளிநாடு வந்துவிட்டதால் என் பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை வராதபடி பார்த்துக்கொண்டேன்.

இப்போதுதான் நாம் உலக மயம் என்று சொல்லுகிறோம். எனவே நம் பெயரையும் உலகத்திற்கு ஏற்றதாக வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நம் புதிய தலைமுறையினர், இனி தங்கள் குழைந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது நிச்சயமாக இதை கருத்தில் வைத்து பெயர் வைக்க வேண்டும். எதோ படிக்க ஆங்கில மீடியத்தில் விட்டால் மட்டும் போதாது. ஒன்றிற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ளவர்கள் தங்களின் எல்லா பிள்ளைகளுக்கும் இரண்டாம் பெயர் பொதுவாக வரும்படி பாத்துக்கொள்ள வேண்டும். முதல் பெயர்தான் பிள்ளைகளுக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும். முடிந்த்தவரை தந்தைக்குள்ள இரண்டாம் பெயரையே பிள்ளைகளுக்கும் வைத்தல் நல்லது. அதுவே குடும்ப பெயராக நிலைக்கும்.
ஏனென்றால் இங்கு முதல் பெயர்தான் நம் பெயர் எனவும், இரண்டாம் பெயர் குடும்ப பெயர் எனவும்தான் நினைப்பார்கள். இது இனிவரும் தலைமுறைக்கு மிகவும் அவசியம். இன்று தமிழன் இல்லாத நாடே இல்லையென சொல்லலாம். இதை ஒவ்வருவருடைய வலை பக்கத்தின் பார்வையாளர்களின் பட்டியலில் காணலாம். நூற்றிற்கு மேற்பட்ட நாடுகளில்லிருந்து வாசகர்கள் வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்களெல்லாம் இப்படி ஒரு பிரச்சினையை சந்த்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே இந்தியாவில் இருப்பவர்கள் இதை கருத்தில் கொள்வது நல்லது. "நாமெல்லாம் இப்போது திரவியத்தை தேடுகிறோமோ இல்லையோ! திரைகடலை தாண்டுகிறோம்!"
Related Posts : வாழ்க்கை
Posted by: selvaraj
http://www.tamilcatholican.com/2010/07/blog-post_13.html

7
Average: 7 (2 votes)
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

Ragavan's படம்

என் முழுப்பெயர் ராகவேந்திரன்.


10

என் முழுப்பெயர் ராகவேந்திரன். நான் ஹைதராபாத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் சிஸ்டம் அக்கவுண்ட், ஐ.டி. கார்டு, பேங்க் அக்கவுண்ட் என்று எல்லாவற்றிலும் 'சர் நேம்' தான் முதலில் கேட்கப்படுகிறது.. அப்படி எதுவும் எங்க ஊரில் கிடையாது என்றதுக்கு, வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஏன்னா இங்கே சர் நேம் இல்லாம யாருமே இல்லை. ஒரு வழியா அப்பா பேரைத் தான் சர் நேமாக எடுத்துக்கொண்டார்கள்..
ஆகவே, இனிமேல் விஜய், ஜீவா, சூர்யா, பிரகாஷ் என்று ஒற்றைப் பெயர் வைப்பதை தவிர்க்கவும்..
பக்கத்தில் இருக்கும் ஆந்திராவிலேயே இப்படி என்றால், லண்டனை பற்றி சொல்லவும் வேண்டுமா...
நல்ல பதிவு நண்பரே...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


செல்வராஜ்'s படம்

உங்களின் கருத்திற்கு நன்றி


0

உங்களின் கருத்திற்கு நன்றி ராகவன்!

vinoth's படம்

முதலில் நாம் வெளிநாட்டை


4

முதலில் நாம் வெளிநாட்டை பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


செல்வராஜ்'s படம்

உங்களின் கருத்திற்கு நன்றி


0

உங்களின் கருத்திற்கு நன்றி வினோத்!
இது எதோ வெளிநாட்டு பிரச்சினை என மட்டும் நினைக்க வேண்டாம். இதோ, ராகவன் அவர்கள் உள்நாட்டிலும் இந்த பிரச்சினை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே நீங்கள் வெளிநாட்டை பின்பற்றுவதை நிறுத்தினாலும் உள்நாட்டை பின்பற்றுவதை நிறுத்தமுடியாதல்லவா? என்றாவது தமிழ் நாட்டிற்கு வெளியே செல்லும்போது உணர்வீர்கள்.

kumaran's படம்

அருமையான தகவல் நண்பரே...ஆனால்


0

அருமையான தகவல் நண்பரே...ஆனால் சில இடங்களில் சர்நேம் அவசியம் என்பது சற்று அபத்தமாகத்தான் இருக்கிறது.

நாம் நமிழ்நாட்டில்தான் தமிழனாக இருக்கமுடியும். இந்தியாவில் இந்தியனாக இருக்கமுடியும். ரோமுக்கு சென்றால் ரோமானியனாகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது. என்ன செய்வது?

பல நேரங்களில் நல்லது எது கெட்டது எது என பகுத்தறிந்து உணர்ந்து நாம் வாழ்ந்தாலும் ,சமயங்களில் சமூகத்தின் சில மூடத்தனங்களை சில நேரங்களில் அனுசரித்து செய்வதைப்போல,(உதாரணமாக, தாலியில் நம்பிக்கையும் விருப்பமும் இல்லாத சிலர் கல்யாண வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்துக்காக சுயமரியாதையைவிட்டு அதை பெண்ணின் கழுத்தில் கட்டுவதுண்டு) அதைப்போல,இதையும் செய்துவிட வேண்டியதுதான்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


செல்வராஜ்'s படம்

உங்கள் கருத்திற்கு நன்றி


0

உங்கள் கருத்திற்கு நன்றி குமரன்!

Ragavan's படம்

இதில் அபத்தமான தகவலுக்கு


0

இதில் அபத்தமான தகவலுக்கு எதுவுமே இல்லை குமரன்..
நீங்கள் சொல்வதேதான் த்மிழ்நாட்டில் தான் தமிழனாக இருக்க முடியும்.. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது சர்நேம் மிகவும் அவசியமே(Mandatory). இவ்வளவு ஏன் பாஸ்போர்ட்டை பாருங்கள் First Name, Sur Name, Last Name என்றுதான் இருக்கும்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..