பாதுகாவலுக்கு சென்ற போலீஸே பாலியல் பலாத்காரத்தில்...
தலைப்பை பார்த்ததுமே, தமிழ் நாட்டில் இது எங்கு நடந்ததது என நினைக்கிறீர்களா? இது தமிழ் நாட்டில் நடக்கவில்லை. லண்டன் மாநகரில் நடந்ததுங்க! எப்பவுமே நம்ம போலீஸ்தான் மோசம் என நினைப்போம் அல்லவா !பிற நாட்டு போலீஸும் கொஞ்சம் அதைப்போலத்தான். மேற்கொண்டு படியுங்களேன்.
இருபது வயது பெண்ணிற்கும் அவரது துணைவருக்கும் ஏற்பட்ட தகராறின் உச்ச கட்டத்தில் அவள் போலீசின் உதவியை நாடியிருக்கிறாள். இந்த அழைப்பு அதிகாலை மூன்று மணியளவில் வந்துள்ளது. உடனே ஜேம்ஸ் போர்ம்பி என்ற போலீஸ்காரர் தன் சக போலீஸ் காரருடன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பெண் மிகவும் குடிபோதையில் இருந்துள்ளார். இரண்டு போலீசில் மற்றொருவர் அப்பெண்ணின் துணைவரை விசாரிப்பதற்காக காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளார்.
ஜேம்ஸ் போர்ம்பி(31) அப்பெண்ணின் துணைக்காக அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் இந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்த அப்பெண்ணுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த போலீஸ்காரர் மார்ச் ஒன்றாம் தியதி அறிவிக்கபடவுள்ள சிறை தண்டனைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் நம்மூரில் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பு செய்பவர்கள் தப்பித்து விடுவார்கள். இங்கு அது கொஞ்சம் கடினம். அவ்வளவுதான்!
Posted by
- செல்வராஜ்'s blog
- Login or register to post comments
- 615 reads
கருத்துகள்
தப்பிப்பதனால்தானே திரும்பத்
தப்பிப்பதனால்தானே திரும்பத் திரும்ப தப்பு செய்ய தைரியம் வருகிறது. தப்பு நடக்க காரணமே தப்பி விடுவோம் என்கிற தைரியம்தானே நண்பரே!




