செல்வராஜ்'s படம்

Wednesday, 3 February 2010
நீச்சல் கட்டாய பாடம்!
நீச்சல் கட்டாய பாடம்!

சமீப காலமாக பத்திரிகைகளில் தொடர்ந்து இந்த மாதிரி செய்திகள் வந்ததை பார்த்திருப்பீர்கள். "தேக்கடியில் படகு கவிழ்ந்து பலபேர் பலி". "குளத்தில் வேன் கவிழ்ந்து பள்ளி பிள்ளைகள் பலி". "ஆற்றில் பேருந்து கவிழ்ந்து பயணிகள் பலி". இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலியானால் அதை தவிர்க்க முடியாமல் பலியானவர்கள் என்று சொல்லலாம். ஆனால் நீச்சல் தெரியாமல் இறந்தார்கள் என்றுகூட படித்தேன். இது மிகவும் மோசமான ஒரு செய்தி. இப்படி நீச்சல் தெரியாமல் இறந்தவர்கள், எதோ சிறுவர்கள் அல்ல! பெரியவர்கள், என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

இன்று பெரும்பாலான வீடுகள், குளியலறை வசதியை கொண்டிருப்பதால், ஆறு, குளங்களில் சென்று குளிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றுகூட சொல்லலாம். இதனால் சிறு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இது உயிருக்கு ஆபத்து என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

மிகவும் வளர்ச்சி அடைந்த நாகரீக காலத்தில் நீச்சல் தெரியாமல் இருப்பது அபத்தம் மட்டுமல்ல! ஆபத்தும் கூட.

இங்கு லண்டனில் ஆரம்ப பாடசாலைகளில் நீச்சலும் கற்றுக் கொடுக்கிறார்கள். சாதாரண பள்ளிகளில் மட்டுமல்ல, மாற்றுதிறன் படைத்த பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலும்கூட நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் நீச்சல் தெரியாமல் பிள்ளைகள் இறக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் தேக்கடி விபத்தில் வெள்ளைக்காரர்கள் நீந்தி தப்பித்தது நினைவிருக்கலாம். ஆனால் நம்மவர் பலர் நீச்சல் தெரியாமல் பலியாயினர். எனவே நம் பள்ளிகளிலும் நீச்சல் ஒரு பாடமாக அமையவேண்டும். இதை அமல் படுத்துவது கொஞ்சம் கடினமான காரியமாக தெரியலாம். ஆனால் அப்படி அமல் படுத்தினால் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்களை தடுக்கலாம்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று சொல்லும் நாடுகளின் பள்ளிகளில்கூட, இலவச சத்துணவு திட்டங்கள் இல்லாதபோது, நம் பள்ளிகளில் அதை செயல்படுத்தும் நமக்கு, இந்த நீச்சலையும் செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். செயல் படுத்துவார்களா சம்பந்தபட்டவர்கள்?
Posted by selvaraj
http://www.tamilcatholican.com/2010/02/blog-post.html

0
Your rating: None

கருத்துகள்

chandru2110's படம்

ஆமாம். நல்ல யோசனை.


ஆமாம். நல்ல யோசனை. வரவேற்கின்றேன்.


சந்துரு


செல்வராஜ்'s படம்

வருகைக்கும் கருத்திற்கும்


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

VISWAM's படம்

நல்ல பதிவு.


நல்ல பதிவு.

செல்வராஜ்'s படம்

நன்றி!


நன்றி!

kumaran's படம்

நீந்துங்கள். வாழ்க்கையிலும்


நீந்துங்கள். வாழ்க்கையிலும் தண்ணீரிலும்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


செல்வராஜ்'s படம்

வாங்க குமரன்! நான்


வாங்க குமரன்! நான் தண்ணீரில்தான் நீந்த தெரியணும் என சொல்லியிருந்தேன். நீங்க வாழ்க்கையிலும் தேவை என சொல்லியுள்ளீர்கள். நன்றி!

kumaran's படம்

நன்றி..நண்பரே


நன்றி..நண்பரே


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


annaa's படம்

உண்மைதான்..!! நம்மவர்கள்


உண்மைதான்..!! நம்மவர்கள் நீச்சல்
போன்ற தற்காப்புக் கலைகளைக்
கற்றுத் தேற வேண்டும்..!!
நல்ல கருத்து..!!நன்றிகள்..!!


annaa


செல்வராஜ்'s படம்

வருகைக்கும் கருத்திற்கும்


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

paramaswari's படம்

வாழ்க்கைக்குத் தேவையான


வாழ்க்கைக்குத் தேவையான கருத்து.

செல்வராஜ்'s படம்

உங்கள் கருத்திற்கு நன்றி!


உங்கள் கருத்திற்கு நன்றி!