oruvaarthai's படம்

 தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று போற்றப்படும் 'கலைமாமணி' பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் தொகுத்தளித்த தமிழ் சினிமாவின் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டின் நிலவரம் :

அவருடைய தகவலின்படி இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை என்றே தோன்றுகிறது.படங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருந்தாலும் வெற்றி என்பது மிக மிகக் குறைவு தான்.இந்த புள்ளி விபரங்களை பார்க்கும் போது இன்னும் ரசிகர்களுக்காக தமிழ் சினிமா மெனக்கிட வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

2010 - ல் ஜூன் வரை விழா கொண்டாடிய படங்கள் :

100 நாள் படங்கள் :

பேராண்மை

ஆதவன்

ஆயிரத்தில் ஒருவன்

விண்ணைத் தாண்டி வருவாயா

இந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் நான்கு படங்கள் மட்டுமே நூறு நாள் விழா படங்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டு 2009 - ல் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறுமாத காலத்தில் 14 படங்கள் விழா கொண்டாடின.

2010 - ல் ஜூன் வரை வெளியான படங்களின் எண்ணிக்கை :

நேரடிப் படங்கள் : 62

ஆங்கிலம் உட்பட மொழிமாற்றம்
செய்யப்பட்டு வெளியான படங்கள் : 15

படங்களின் மொத்த எண்ணிக்கை : 77

2009 - ல் ஜூன் வரை வெளியான படங்களின் எண்ணிக்கை :

நேரடிப் படங்கள் : 53

ஆங்கிலம் உட்பட மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான படங்கள் : 20

படங்களின் மொத்த எண்ணிக்கை : 73

* 2008 -  ஆம் ஆண்டு வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை :

நேரடிப் படங்கள் : 128 மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் : 36

படங்களின் மொத்த எண்ணிக்கை : 164

2009 - ல் சென்ஸார் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் படங்கள்:

அன்றொருநாள்,ஆதிநாராயணா,காதல் ஓசை,காதல் கனவு,காதல் புன்னகை, கல்யாணம்,ராஜமாணிக்கம்,மாட்டுத்தாவணி,காவலர் குடியிருப்பு,அயல்,இரு விழிகள்,குமரா,புது காதல்,புதுமுகம்,போராட்டம்,சைதை செல்லா, சுனாம்பிகா,தலைகீழ்,அதிசய மணல்மாதா,அலையோடு விளையாடு,இளமை இதோ இதோ,காதலுக்கு மரணமில்லை,காதல் கொண்ட மனசு,கண் இமைக்கும் நேரத்தில், கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க,கருதப் பைய்யன், செவத்த பொண்ணு, 365 காதல் கடிதங்கள்,நூறாவது நாள் வெற்றி விழா,புரிந்தும் புரியாமலும்,பொள்ளாச்சி மாப்பிள்ளை,ராமன் நல்ல பிள்ளை

2010 - ல் தணிக்கை செய்யப்பட்டு வெளிவர இருக்கும் படங்கள் :

அப்பாவி,அறியான்,இலக்கணப் பிழை,கடற்கரை,கருவறை பூக்கள்,காதல் மெய்ப்பட,கோலம,மண்டபம்,மம்பட்டியான்,மாஸ்கோவின் காவிரி,இந்திர சேனா,உயர்ந்தவன்,சித்திரைப் பூவே,கிள்ளாதே,நந்தலாலா,ராமர்,சித்து +2,
வாடா,வீரமாறன்,பேசுவது கிளியா,சிங்கமுகம்,விகடகவி,மார்கழி 16,
பௌர்ணமி நாகம்,உனக்காக என் காதல்,உள்ளமெல்லாம் தள்ளாடுதே,
ஏன் உள்ளம உன்னைத் தேடுதே,நாங்க ரொம்ப நல்லவங்க,பழகியதே பிரிவதற்கா,பயணங்கள் தொடரும்,விடியும் வரை காத்திரு...

நன்றி : 'கலைமாமணி' பிலிம் நியூஸ் ஆனந்தன்

0
No votes yet
No votes yet
http://oruvaarthai.blogspot.com/2010/06/blog-post_28.html