கேள்வி; ‘’நானும் என் மனைவியும் தேனிலவுக்காக ஒரு சுற்றுலாத்தல ஹோட்டலில் தங்கியிருந்தோம். பிறகு, எங்களுக்கு இடையேயான அந்தரங்கப்புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து அதிர்ந்தேன். நாங்கள் அதை எந்த வடிவத்திலும் பதியவே இல்லை.இது தொடர்பாக அந்தச் சுற்றுலா தல காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டுமா? புகார் அளிக்கும்போது எங்களைப்பற்றிய ரகசியம் காக்கப்படுமா?
பதில்; எஸ்.ஜெயக்குமார்-மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்.
‘’இது மாதிரியான விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர் ரகசியம் காக்கப்படும். நீங்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு தேனிலவு சென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், புகார் அளிக்க நீங்கள் மைசூர் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டும் எனபதில்லை. சைபர் க்ரைம் போலிசாரிடமே புகார் அளிக்கலாம். சென்னை போன்ற பெருநகர ஆணையர் அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சைபர் க்ரைம் பிரிவு இருக்கும். உங்களுக்கு அருகில் இருக்கும் ஊரில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். நீங்கள் குறிப்பிடும் வீடியோ எந்த கம்ப்யூட்டரில் இருந்து இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது என்பதை முதலில் கண்டுபிடிப்பார்கள். இந்தியாவின் எந்த மூலையில் இருந்து அப்லோடு செய்யப்பட்டு இருந்தாலும் ,சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யலாம். தொடர்ந்த விசாரணைகளில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பங்கு இருந்தால் ,அவர்கள் மீதும் நடவடிக்கை உண்டு. பொதுவாக, தரமான,நம்பகமான விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். காலண்டர்,ஓவியம்,பூச்சாடி என எவற்றில் வேண்டுமானாலும் ரகசிய கேமராக்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே, உறங்கும்போதும் உஷாராக இருங்கள்!’’
- kumaran's blog
- Login or register to post comments
- 245 reads
கருத்துகள்
(No subject)
:*
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..





