kumaran's படம்

கேள்வி;’’நான் வெளிநாடு செல்ல இருப்பதால்,சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விரும்புகிறேன். இதற்கு யாரை அனுக வேண்டும்? தகுதிகள் என்னென்ன?

பதில்;காத்தலிங்கம்-வட்டார போக்குவரத்து அலுவலர்.

‘’சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற, ஏற்கனவே செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். உங்கள் பகுதி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஃபார்ம்4 ஏ என்ற விண்ணப்பத்தை கேட்டு வாங்குங்கள்.அதனைப் பூர்த்தி செய்வதோடு அதில் கேட்கப்பட்டு இருக்கும் ஆவணங்களுடன் (ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட்,விசா, ஆகியவற்றின் மூன்று நகல்கள்,,மருத்துவச்சான்றிதழ்,மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சில ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வெளிநாடு செல்வது உறுதி ஆகிவிட்டதா என்பதை சரிபார்க்க விமான டிக்கெட்டையும் பரிசோதிப்பது உண்டு. சேவைக்கட்டணம் உட்பட 1,000 ரூபாய் செலுத்தவேண்டி இருக்கும். பரிசீலனைக்குப்பின் அன்றைய தினமே லைசன்ஸ் வழங்கப்படும்!’’

0
No votes yet
No votes yet

கருத்துகள்

Ragavan's படம்

(No subject)


0

Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

நன்றி.


0

நன்றி. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.