கேள்வி;.”நான் எனது கிராமத்தில் ஒரு நூலகம் தொடங்க விரும்புகிறேன். அதை நடத்துவதற்கு லைசென்ஸ் எதும் பெறவேண்டுமா? தொடங்கி நடத்த அரசிடம் இருந்து சலுகைகள் ,மானியங்கள் ஏதேனும் கிடைக்குமா?
பதில்;க.அறிவொளி,இயக்குநர்,பொது நூலகத்துறை.
‘’தனிப்பட்ட முறையில் நூலகம் தொடங்கி நடத்த லைசன்ஸ் எதுவும் தேவை இல்லை. அதே சமயம்,உடனடியாக அதற்கு அரசு மானியம் எதுவும் கிடைக்காது. ஆனால்,மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து நீங்கள் நூலகத்தை சிறப்பாக நடத்தியபிறகு எங்களுக்கு மனு தாக்கல் செய்தால்,தக்க ஆய்வுகளுக்கு பிறகு கொல்கத்தா ராஜாராம் மோகன்ராய் லைப்ரரி ஃபவுண்டேசனுக்கு எங்கள் பரிந்துரையை அனுப்புவோம். அவர்கள் ஒருமுறை நிதி உதவியாக ஒன்றரை லட்ச ரூபாயை உங்களுக்கு வழங்குவார்கள். பொது நூலகத்துறை சார்பாகவும் உங்கள் பகுதியில் நூலகம் தொடங்க நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீலகம் தொடங்க விரும்பி நீங்க்ள மனு அளித்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட நூலகர் உங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வார் பகுதிநேர நூலகம் திறக்கப் போதுமான தகுதிகள் உள்ளதா,குறைந்த பட்ச மக்கள் தொகை ஆயிரத்தை எட்டுகிறதா என்றெல்லாம் ஆய்வு செய்வார்கள்.நூலகம் அமைக்க குறைந்த பட்சமாக 400-500 சதுர அடிக்கு கட்டிட வசதியை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். 25 உறுப்பினர்கள் சேர வேண்டும். இருவர் புரவலர்களாகச் சேரவேண்டும். இவற்றை நீங்கள் செய்து முடித்தால், நாங்களே ஒரு நூலகரை நியமித்து புத்தகங்களையும் அளித்து நூலகத்தை நடத்த உதவி செய்வோம்’’.
- kumaran's blog
- Login or register to post comments
- 145 reads
கருத்துகள்
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..





