கேள்வி;’’சாதி மாறி திருமணம் செய்துகொண்டவன் நான். என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?
பதில்; ரமேஷ்-வழக்கறிஞர்.
‘’கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்கள் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சாதியில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இப்போது இருக்கும் நடைமுறைப்படி பள்ளிச் சான்றிதழ் மற்றும் அரசின் பிற வேலை வாய்ப்புச் சான்றிதழ்களிலும் சாதி அவசியமாகிறது. சாதி பெயரை குறிப்பிடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மறுப்பது இப்போது உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால்,’சாதியை குறிப்பிடச்சொல்லக் கூடாது’ என்று நீங்கள் விரும்பினால் உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தால் உரிய தீர்வு கிடைக்கும். சாதி குறிப்பிடவில்லை என்றால் ,உங்கள் குழந்தை பொதுப்பிரிவில் வரும்!’’
- kumaran's blog
- Login or register to post comments
- 149 reads
கருத்துகள்
இது மேட்டரு..
இது மேட்டரு..

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
சாதிக்காக
சாதிக்காக பிறக்கவில்லை..
சாதிக்கத்தான் பிறந்தோம்னு எல்லாரும் எப்போதான் உணர்வார்களோ....

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
"சாதிக்கவே
"சாதிக்கவே பிறந்திருக்கின்றோம்,
சாதிக்காக அல்ல"
என்று இந்த ஜென்மங்கள் புரிந்துகொள்ளப்போவது எப்போது.. உலகை அழிக்க கொடிய நோய்கள் தேவை இல்லை,
இந்த சாதி ஒன்று போதும்...
நன்றி.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..






