1. கேள்வி;எனக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. 14 ஆண்டுகள் கணவரின் பெற்றோருடன்தான் வசித்தோம்.அவர்கள் குடும்பத்தொழிலை என் கணவரும் சேர்ந்துதான் பார்த்துவந்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சின்ன மனஸ்தாபத்தால் தனிக்குடித்தனம் வந்துவிட்டோம். என் கணவரும் சேர்ந்து சம்பாதித்த்தில் நிறையச் சொத்துக்களை அவர்கள் வாங்கியுள்ளனர். இப்போது எங்களுக்கு அதில் பங்கு இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?
பதில்; அஜிதா-வழக்கறிஞர்.
‘’பரம்பரை வழிச்சொத்தா அல்லது சொந்த சம்பாத்தியமா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் மாமனாரிடம் இருப்பது அவர் பாட்டனார் வழிச்சொத்தாக இருந்தால்,நிச்சயம் உங்கள் கணவர் மூலமாகவே வழக்குத் தொடரலாம். ஒருவேளை, உங்கள் மாமனார் சுயமாக சம்பாதித்து சேர்த்ததாக இருந்தால்,உங்கள் குழந்தைகளுக்கு கூட உரிமை இல்லை. உங்கள் மாமனார் வாங்கிய சொத்துக்களில் உங்கள் கணவரின் உழைப்பும் இருக்கிறது என்றால், உங்கள் கணவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ‘குறிப்பிட்ட சொத்தில் என் உழைப்பும் உள்ளது’ என்பதை நிரூபித்து சொத்தில் பங்கு பெற முயற்சிக்கலாம்’’