செல்வராஜ்'s படம்

இருட்டிலும் வண்ண வண்ண குளியல்!

Saturday, 10 July 2010
இருட்டிலும் வண்ண வண்ண குளியல்!
இருட்டிலும் வண்ண வண்ண குளியல்!

நீங்கள் அதிகாலை குளிக்க ஆயத்தமாகும்போது மின்சாரம் நின்று விடுகிறதா? கவலையை விடுங்கள்! கீழே காணும் ஷவரை நீங்கள் திறந்ததும் தண்ணீர் பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு என பல நிறங்களில் மாறி மாறி நல்ல வெளிச்சத்தை தரும்.

அதாவது சீரியல் லைட் எவ்வாறு செயல்படுமோ அதைப்போலவே இருக்கும். உண்மையிலேயே இது ஒரு இன்பக்குளியலாகவே இருக்கும். இதற்கு பாட்டரி எதுவும் தேவையில்லை. வேகமாக வரும் தண்ணீரே இதை செயல்பட வைக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்வரை நிச்சயமாக இதை விரும்புவர். விலையும் குறைவு சுமார் 5௦௦ ரூபாயிலிருந்தே கிடைக்கிறது. இதில் சில மூன்று நிறங்களிலும், சில ஏழு நிறங்களிலும், சில பன்னிரண்டு நிறங்களிலும் என விற்பனைக்குள்ளது.

ஆனால், இது எவ்வளவு நாள் வேலைசெய்யும் என்பது சீனா காரனுக்கே தெரியாது. என்ன இருந்தாலும் இதை பயன்படுத்தும் போது அது ஒரு தனி அனுபவம்தான்.
Posted by: selvaraj
http://www.tamilcatholican.com/2010/07/blog-post.html

7
Your rating: None Average: 7 (1 vote)

கருத்துகள்

Ragavan's படம்

தகவலுக்கு மிக்க


தகவலுக்கு மிக்க நன்றி...
கலர்ஃபுல்லான தகவல்தான்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


செல்வராஜ்'s படம்

வாசித்து கருத்து சொன்னமைக்கு


வாசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி நண்பரே!