“குடிக்கிறவங்க எல்லாரும் ரொம்ப மோசமானவங்க. குடிக்காதவங்க எல்லாரும் ரொம்ப யோக்கியமானவங்க...”ன்னு இந்த உலகம் சொல்ற ஒரு அப்பட்டமான பொய்யை என்னால உண்மைன்னு ஏத்துக்க முடியாது.ஆனா அதேநேரம் அளவுக்கு மீறி குடிச்சிட்டு தன்னிலை மறந்து தப்பு செய்றவங்களை நாம வன்மையா கண்டிக்கிறோம். ஆனா நாட்டுல நடக்குற அத்தனை குற்றங்களுக்கும் குடிதான் முக்கிய காரணம்ங்கிறதுல துளி கூட உண்மை இல்லை.
நாம தெனமும் நியூஸ் பேப்பர் படிக்கிறோம்.தினமும் குறைஞ்சது ஒரு அஞ்சி கொலை, கொள்ளை,கற்பழிப்பு செய்திகளாவது வருது. அதுல எத்தனை செய்திகள் “இவரு குடிச்சிட்டு கொலை பண்ணினார்”,”இவரு குடிச்சிட்டு திருடினார்”,”அவரு குடிச்சிட்டு கற்பழிச்சார்”னு செய்திகள் வருது சொல்லுங்க..? அதிகபட்சம் ஒரே ஒரே செய்தி வேணும்னா அப்படி இருக்கும்.மீதி எல்லாமே குடிக்காம நிதானத்துல இருக்குற யோக்கிவானுங்க செய்ற தப்புகள் தான் அதிகம். அப்படி இருக்கும்போது குடிக்கிறதையும்,குடிக்கிறவங்களையும் தப்பானவங்கன்னு சொல்றதே ரொம்ப தப்பு தான்.
நல்லா யோசனை பண்ணிப்பாருங்க, நாம ஒரு குவார்ட்டர் வாங்கினோம்னா அத ஒரு ரெண்டு ரவுண்டு,இல்லேன்னா எக்ஸ்ட்ரா ஒரு ரவுண்டு ஊத்தி எலுமிச்சை ஊறுகாவை தொட்டு நக்கி சரக்க உள்ள தள்ளிட்டு வீட்டுக்கு போனம்னா எந்த சத்தமும் போடாம கவுந்தடிச்சி தூங்கிடுவோம்.(ஓவர் மப்புல போயி ரகளை பண்ணுறவங்களை இந்த கணக்குலேயே சேர்க்கல..)
ஆனா இந்த சரக்கே அடிக்காம “நாங்க ரொம்ப நல்லவைங்க”ன்னு சொல்லிக்கிட்டிருக்குற பிதாமகன்கள் என்ன பண்ணுவாய்ங்க? வாய வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம யார்கிட்டயாவது ஒரண்டை இழுத்துக்கிட்டு வந்து நிப்பாங்க.இதுலயும் ஒரு கணக்கு பாருங்க,சரக்கடிச்சிட்டு சண்டை போடுறவங்களை விட,சரக்கடிக்காதவங்க போடுற சண்டை ரொம்ப மோசமாவும், ரொம்ப நேரமும் நடக்கும்.(சந்தர்ப்பம் கெடைச்சா அடுத்த தடவை செக் பண்ணி பாருங்க.)
அதுக்கு காரணம் ஒண்ணே ஒண்ணு தான்,சரக்கடிச்சிட்டு சண்டை போடுறவனை ஒரு ரெண்டு மூணு பேர் ஒண்ணு சேர்ந்து சத்தம் போட்டு வீட்டுக்குள்ள தூக்கி போட்டுட்டம்னா அவன் பாட்டுல கம்முன்னு கெடப்பான்.ஆனா சரக்கடிக்காம சண்டை போடுறவனை நாம சமாதானம் செய்யப்
போனம்னா நமக்கு தான் வில்லங்கம் வரும்.போதாக்குறைக்கு அவன் அந்த நேரத்துல அவன் பேசுற வார்த்தைகளை கேட்டா கண்டிப்பா நம்ம காதுல ரத்தம் தீர்ந்து போயி சலம் வர ஆரம்பிச்சிரும் அந்தளவுக்கு கலீஜா இருக்கும்.
அதே மாதிரி சரக்கடிக்கிறவங்களுக்கு இருக்குற நேர்மையும்.மனிதநேயமும்,உண்மையும் குறிப்பா இரக்ககுணமும் இந்த நார்மல் மனிதர்கள்கிட்ட இருக்குறது ரொம்ப கம்மி தான். இந்த பதிவை படிக்கிற பல நண்பர்கள் அனுபவத்துல இதை உணர்ந்திருக்கலாம்.
ஊர்ல நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது தமிழ்வாத்தியார் பள்ளிக்கூடத்துக்கு வந்தார்னா அவ்ளோ அழகா பேசுவார். ஸ்கூல்ல கெட்ட வார்த்தைகள் யார் பேசினாலும் பிரம்படி நிச்சயம்.அப்படிப்பட்டவர் வீட்ல இருந்தார்னா அவர் வாயில கெட்ட வார்த்தைகள் தவுத்து வேற எதுவுமே வராது.
நான் ஆச்சரியப்பட்டு எப்படி ஸார் இது சாத்தியம்னு கேட்டப்போ “சின்ன வயசிலேர்ந்தே இது பழக்கம்னு சொல்லி ஆச்சரியப்பட வெச்சாரு.அந்த வாத்தியார் குடிக்க மாட்டார்,ஆனா கண்டமேனிக்கு கெட்ட வார்த்தைகள் பேசுற அவரு நல்லவரா..?கெட்டவரா..?(அப்புறம் என்ன யோக்கியமானவங்கன்னா எல்லாத்திலேயும் அப்படி இருக்கணும்.)நான் சொல்றது சரிதானே பாஸு...இனிமே யாராவது குவார்ட்டர் அடிக்கிறதை தப்புன்னு சொன்னா சொல்றவங்ககிட்ட நீங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேளுங்க,
“நீ யோக்கியமானவனா..?”
டிஸ்கி : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் டாஸ்மாக் கடைகளில் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. பாட்டலில் என்ன விலை போட்டுருக்கோ அந்த பணத்தை தான் கடைக்காரர் வசூல் பண்றார். வடபழனி குமரன்காலனியில் இருக்கும் டாஸ்மாக்கில் நண்பர் ஒரு குவார்ட்டர் நெப்போலியன் பிராந்தியை வாங்கினார். நூறுரூபாயில் மீதி இருபது ரூபாய் கடைக்காரர் கொடுத்தார். பாட்டலில் விலை 80 – ரூபாய்னு போட்டிருந்திச்சி. (அடி சக்க...!)
http://oruvaarthai.blogspot.com/2011/06/blog-post_14.html
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 122 reads






