தெட்சண கயிலாயம் எனப்போற்றப்படும் திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்குமாகாணத்திலுள்ள திருகோணமலையில் அமைந்திருக்கிறது.
தோற்றம் -இவ்வாலயத்தின் தோற்றக்காலத்தை சரியாக நிர்ணயிப்பது கடினமாக இருப்பினும் 1624 இல் கோணேசர் கோவிலை இடித்தழித்த போத்துக்கேய தளபதி ( கொன்ஸ்ரான் ரைண்டீசா ) அவனுடைய அரசனுக்கு அனுப்பிய அறிக்கையின்படி 'மனுராசா /மாணிக்கராசா என்னும் மன்னால் கி.மு 1300 இல் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.
உறுதிப்படுத்தப்படாத பல ஆய்வுகளும் , கற்பனைப் புனைவுகளும் ,சமகால நிகழ்வுகளும் ஆலயத்தின் தொன்மைதனை அறிவியல் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தைச் சிட்டி நிர்க்கின்றன.
ஆலய மூர்த்தி - கோணேஸ்வரர்
இறைவி - மாதுமையம்பாள்
தீர்த்தம் - பாபநாசதீர்த்தம்
தலவிருட்சம் - கல்லால்
வரலாற்றுச்சுருக்கம்
இராமாயண காலம் - இராவணனின் வழிபாட்டுத்தலமாக இவ்வாலயம் குறிப்பிடப்படுகிறது.
மகாவம்சம் - கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவினான்.
யாழ்ப்பாண வைபவமாலை - கி.பி 436 -சோழமன்னன் வரராமதேவனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் ஆலயத்தை புனருத்தானம் செய்தான்.
வாயு புராணம் - கி.பி 5
தேவாரத் திருப்பதிகம் - கி.பி 7 திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம்.
திருக்கோணேச்சரம் கி.பி 1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.
1963 ம் ஆண்டளவில் இப்போதுள்ள ஆலயம் புதிதாக நிர்மானிக்கப்பட்டது.
விழாக்கள்
சிவராத்திரிவிழா சிறப்பாக ஆனுஷ்டிக்கப்படும்.
நகர்வலம் - சிவராத்திரிக்கு அடுத்த நாள் மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் நகர்வலத்துக்குப் புறப்படுவார். இரவில் நகர்வலம் இடம்பெறும். முதல்நாள் சிவன்கோவிலிலும் , இரண்டாம் நாள் காளிகோவிலிலும் தங்கி மூன்றாம் நாள் ஆலயம் திரும்புவார்.
மகோற்சவம் - பங்குனி உத்தரத்தில் கொடியேறி 18 நாட்களுக்கு மகோற்சவம் நடைபெறும்.
தெப்பத்திருவிழாசுவாமி தெப்பத்தில் ஆரோகணித்து கோணமலையைச் சுற்றி சமுத்திரத்தில் வலம்வரும் நிகழ்வு இங்கு விசேசமானதாகும்.
- jeevaraj's blog
- Login or register to post comments
- 197 reads
கருத்துகள்
வீடியோவைக் காண இயலவில்லை.
வீடியோவைக் காண இயலவில்லை.
நன்றி
நன்றி
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil








