இன்று காலை ராஜ் அலைவரிசையில் ஒரு பெரியவர் இந்தக் கதை சொன்னார். .
புகழிலும் செல்வத்திலும் வானுயர்ந்து , உலகமே தன் கையில் உள்ளதாக நினைத்த அரசன் ஒருவன் தனக்கு அடுத்து ஆட்சி புரிய வாரிசு இல்லாமல் இருந்தான்.வாரிசாக யாரை எப்படி தேர்ந்தெடுப்பதென யோசித்தவன் ஒரு அறிவிப்பு விடுத்தான்.தனது ஏழடுக்கு அரண்மனை ஒன்றில் ஆறு அடுக்கிலும் இதுவரை தனக்குண்டான செல்வங்கள் அனைத்தையும் வைத்திருப்பதாகவும்,ஏழாவது அடுக்கில் அரசன் அமர்ந்திருப்பதாகவும், மக்கள் அனைவரும் வந்து தங்களுக்கு எவ்வளவு செல்வங்கள் வேண்டுமோ அத்தனையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அறிவிப்பு .
செய்தி அறிந்த மக்கள் அனைவரும் அந்த அரண்மனைக்குச் சென்று திளைக்க திளைக்க பொற்காசுகளையும்,ஆபரணங்களையும் அள்ளிச்சென்று கொண்டிருந்தனர். எல்லோரும் ஆனந்தமாக செல்வங்களுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதைக் கண்ட ஒருவன் முதல் முறை அரண்மனைக்குள் சென்றான்.மக்கள் இந்த மாடியில் என்ன உள்ளது,அந்த மாடியில் என்ன உள்ளது,என்று பார்த்து பார்த்து பொற்காசுகள்,தங்க,வைர ஆபரணங்கள்,ரெத்தின கற்கள் இப்படி எல்லாவற்றையும் சங்கடமின்றி அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்தவன்,மக்களுக்கு அனுமதி தந்து, இப்படியொரு அறிவிப்புவிடக் காரணமென்ன ?இதனால் அரசனுக்கு என்ன பயன் ? என்று யோசித்தவன், இந்த கேள்விகளுக்கு இந்த பேராசை கொண்ட மக்களிடம் நிச்சயம் பதில் கிடைக்காது என்றெண்ணி அறிவிப்புவிடுத்த அரசனிடமே கேட்டுவிடுவோமென்று ஏழாவது மாடிக்குச்சென்று அங்கு தனியே அமர்ந்திருந்த அரசனைப் பார்த்து “அரசே இந்த அறிவிப்பு ஏன்?,எதற்கு ?,இதனால் மக்களுக்கு பயனிருக்கலாம் உங்களுக்கு என்ன பயன்?" என்று கேட்டானாம்.
.ஆறாம் அடுக்கு வரை வந்தும்,தனக்கு வேண்டிய செல்வங்ககளையெல்லாம் வாரிச்சென்ற நாட்டு மக்கள்,நன்றி சொல்லக் கூட என்னை வந்து பார்க்க வரவில்லை,மரியாதை நிமித்தமாகவும் வரவில்லை என்று கேட்டவனின் தோள்களை கம்பீரமாக அன்பாகத் தட்டிய அரசன்,நீதான் என் வாரிசு,எனக்கடுத்து ஆட்சி புரிய தகுதி உடையோனை தேர்ந்தெடுக்கவே இந்த அறிவிப்பு.இப்படிப்பட்ட மக்களை,நாட்டை ஆட்சி புரிய தேவையான சம யோசித புத்தி உள்ள ஒருவனை முழுமனதாக என் வாரிசாக தேர்ந்தெடுத்துவிட்டேன்.,என்று பெரு நிம்மதி கொண்டானாம்.
புத்தகத்தில் படித்த கதை:
சந்நியாசியிடம் சென்ற ஏழை ஒருவன் அய்யா என் உயிரைத் தவிர வேறெந்த சொத்தும் என்னிடம் இல்லை,நான் வாழ்க்கையில் சகல வசதிகளுடன் வாழ வழி சொல்லுங்கள் என்றானாம்.
சந்நியாசி அந்த மனிதனிடம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன் உன் கைகளை வெட்டி என்னிடம் கொடு என்றார்.அந்த மனிதன் பயந்து என்னால் என் கைகளை ஐந்தாயிரம் ரூபாய்க்காக இழக்க முடியாது என்றானாம்.
சரி,பதினைந்தாயிரம் ரூபாய் தருகிறேன் உன் கால்களை வெட்டி என்னிடம் கொடுத்துவிடு என்றார்.அதற்கும் அவன் ஒற்றுக் கொள்ளவில்லை.
சரி,ஐம்பாதாயிரம் தருகிறேன்,உன் கண்களைக் கொடு என்றார் சந்நியாசி ,அதற்கு அந்த மனிதன் ஒரு லட்சம் கொடுத்தாலும் முடியாது என்றான்.
பத்து லட்சம் தருகிறேன் உன் உயிரைக் கொடு எனக் கேட்டார் சந்நியாசி.அந்த மனிதன் முடியவே முடியாது என்றானாம்.
சந்நியாசி அந்த மனிதனிடம் உயிரைத் தவிர எந்த சொத்தும் இல்லையென சொன்ன நீ,இவ்வளவு பெரிய தொகைக் கிடைத்தாலும் இலக்க விரும்பாத விலை மதிப்பற்ற அங்கங்களைக் கொண்டிருக்கும் நீ ஏழை இல்லை.உழைத்து முன்னேறு என்று ஆசி கூறி அனுப்பினார்.
(3 votes)
http://aatchi.blogspot.com/2011/03/blog-post_26.html
- thirumathibssridhar's blog
- Login or register to post comments
- 186 reads
கருத்துகள்
நல்ல கதை!நல்ல
Submitted by saravanamuthu on சனி, 26/03/2011 - 9:02pm.
நல்ல கதை!நல்ல கருத்து!
---------------------------
சரவணமுத்து 
(No subject)
Submitted by yarlpavanan on திங்கள், 28/03/2011 - 12:17pm.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil






