ampalathar's படம்

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........

இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

ஓமப்பா பொன்னர், அம்பலத்தார் என்று உங்கட பெயரைப்ப் பார்க்க நாங்கள் தங்கட சாதி ஆக்களில்லையோ என்று யோசிக்கினமாம் அதுதான் வடிவா விசாரிக்கவேணுமென்று சொல்லுகினமமாம். அதுதான்.........

என்ரை அப்பா விசுவர் பொன்னர்.

அப்பைய்யா.........

பொறும் பொறும் ஞாபகம் வருகுது..........வீரகத்தி விசுவர்.

சொல்லி முடிக்கமுதல் செல்லம்மா....
உதென்ன உந்தப் பெயருகளைகளைக் கேட்க எனக்கே ஒருமாதிரியாக்கிடக்கு அவர்கள் கேட்கிறதும் நியாயம்தான் என்று சொல்லவும்

எனக்குக் கோவம் பத்திக்கோண்டு வர சும்மா விசர்கதையளைக் கதைத்து உருவேத்தாமல் இரும்பாப்பம் என்று கத்தின படி

அப்பாச்சியின்ரை பெயர்தான் ஞாபகம் வராதாம்.

அம்மா சின்னத்தங்கம்.... அப்பாச்சி.............சீ அவசரத்துக்கு ஞாபகம்வராதாம்....

என்னங்கோ இதுகூட.......

என்று செல்லம்மா நக்கலாக எதோ சொல்லத் தொடங்கவும்

பொறும் பொறும் கூகிள்ளை அப்பைய்யான்ரை பேரைக்கொடுத்துத் தேடிப் பார்ப்பம்

என்று சொல்லிக்கொண்டு கொம்பியூட்டரை இயக்கத் தொடங்கினன்

Google Search _வீரகத்தி விசுவர்.

தேடத்தொடங்கினன்

வீரகத்தி விசுவமடு.......

வீரகத்தி வில்லியம் Jaffna Toranto ...............

தொலைந்த இளமையை மீண்டும் பெற சித்த வயகரா.....
தொடர்புகளுக்கு பரம்பரை ஆயுள்வேத வைத்தியகலாநிதி வீரமாமுனி வீரகத்தி கைலாசம் Jeya Traders La Chapel Paris ........

உங்கள் எந்தவித தேவைகும் அவசர கடனுதவி ஆலோசகர் விசுவர் அண்ணா ஜேர்மனி ....

அட இது ஒரு பெரிய தொல்லையாப்போட்டுது எங்கைபார்த்தாலும் எதைத்திறந்தாலும் ஒரே விளம்பரமாகிவிட்டது.

சலிப்பாக முணுமுணுத்தபடி தொடர்ந்து தேடினன்

வில்லங்க வீரகத்தி M.A. பிரபல அரசியல் ஆய்வாளர்........லண்டன்

வீரகத்தி விசுவர் வட்டுக்கோட்டை........

இவராகத்தான் இருக்கவேணும்

பிறந்த நாள்: தெரியாது

தொழில்: விவசாயம்

விருப்பங்கள்: தியாகராசபகவதர் பாடல்கள், சின்னமேளம், நாட்டுக்கூத்து,

மனைவிபெயர்: மரகத நாச்சியார்

பிள்ளைகள்: தங்கராசு, பொன்னர்.

இது என்ரை அப்பைய்யாதான் நல்லகாலம் கூகிளிலை விபரம்கிடக்கிறது.

கொஞ்சம் சந்தோசப்பட விடாமல் இதுக்கிடையில் செல்லம்மா..

இந்தாங்கோ புறோக்கர் உங்களோட கதைக்கவேணுமாம் என்று தொலைபேசியை நீட்ட

அதை வாங்கி

வணக்கம் அம்பலத்தார்

................

ஓமோம் அதுதான் இப்ப கூகிளிலை தேடிக்கொண்டிருந்தனான் புறோக்கர்.

.....................

நல்லாகாலம் கூகிளிலை விபரம் கிடந்தது. சொல்லுறன் குறிச்சு வையும்.வீரகத்தி விசுவர்......................

தனிமனித விபரப் பாதுகாப்பு எக்கேடு கெட்டால் எனக்கென்ன.......

விரைவில் வரப்போகிறதாம் புதிய தொழில்நுட்பம் கைத்தொலைபேசியிலை படத்தை எடுத்துக் கொடுத்தாலே படத்துக்குரியவரின் தகவல் எல்லாம் காட்டப்போகுதாம் கூகிள்.

இனி எல்லாம் ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம் கைவசம்.வாழ்க கூகிள்

நேசமுடன் அம்பலத்தார்

7
Your rating: None Average: 7 (1 vote)

கருத்துகள்

yarlpavanan's படம்

அறிஞர் அம்பலத்தார் அவர்களின்


7

அறிஞர் அம்பலத்தார் அவர்களின் தொழில்நுட்பக் கருத்துரை நன்றாக இருக்கிறது.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil