VISWAM's படம்

லவங்கப்பட்டையை சமையலில் அதன் மக்த்துவம் தெரியாம்லே உபயோகித்திருக்கிறோம்..

அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகம்..
சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள்

உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.

கருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டை செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.

தமிழில் லங்கப்ப்ட்டை
ஆங்கிலத்தில்- Cinnamon
மலையாளத்தில் கருவாப்பட்டை
தெலுங்கில் லங்கப்ப்ட்டா
Sanskrit - Twak
Hindi - Dalchini
BotanicalName - Cinnamomum verum என்றும் அழைக்கப்டும் அருமருந்து..

இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சிறந்த மருந்தாக.கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் வெகு விரைவில் சாதாரண நிலைக்கு வருவார்கள்..

லவங்க பட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும்,
நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.

அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர்.
40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.

* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.

நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

நன்றி : இராஜராஜேஸ்வரி

0
Your rating: None