பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும் புதிதாக பழக்கமேற்படுத்திக் கொள்வதில் மிகவும் சங்கடப்படுவீர்கள்
. வார்த்தைகளை அளந்து பேசும் உங்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்காதவாறு மிகவும் எச்சரிக்கையுடன் பேசுவர்.
அறிவாற்றலும், நிகரற்ற ஞாபகசக்தியும் படைத்த நீங்கள் உண்மைக்கு பெருமதிப்பு கொடுப்பீர்கள். தங்களால் இயன்ற அளவு உண்மைய பழக்கத்தில் கையாளும் பண்பு பெற்றவர்கள். தற்பெருமைகக்கும் புகழ்ச்சிக்கும் ஆசைப்படாத நீங்கள், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபதாபம் கொள்வதும் இல்லை. பிறரை சமனாகக்கருதி அவர்களையும் தன்னுடன் இணைத்துச் செல்லும் சுபாவம் படைத்த நீங்கள் மற்றவர்மீது அதிகாரம் செலுத்தவோ அல்லது மற்றவரைத் தன் வசமாக்கிக் கொள்ளவோ ஆசைப்படமாட்டீர்கள். நீங்கள் ஈடுபடும் காரியங்களிலெல்லாம் தியாகம், சுயநலமின்மை, பெருந்தன்மை மேலோங்கி நிற்கும்.
நேர்மையே குறிக்கோளாகக்கொண்ட உங்களுடன் நேர்மையற்றவர்கள் பழகுவது கடினமாகும். பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்து செயலாற்றி எளியவர்களை முன்னேற்றமடையச் செய்வர். மிகவும் பொறுமைசாலிகளான நீங்கள் சகிப்புத் தன்மை பெற்றவர். பிடிவாத குணம் படைத்த நீங்கள் பிறருக்கு அடிபணிவதென்பது நடக்காத காரியம். சிந்தனா சக்தியிலும் செயலாற்றுவதிலும் நிதானமாக ஈடுபட்டாலும், தன்னம்பிக்கையும் அசட்டுத் தைரியமும் மேலோங்கி நிற்பதால் உங்களுடைய கருத்தை மாற்றுவது மிகவும் கடினம்.
நீங்கள்எளியவாழ்க்கையில் விருப்பம் கொண்டவர்கள். எருது போல் நடையும், கஷ்டத்தைத் தாங்கும் சகிப்புத் தன்மையும், கொண்டவர். பிறருக்காக உழைத்து தியாகம் செய்யும் நற்குணம் பெற்றவரானாலும், எவருக்கும் எளிதில் வீட்டுக்கொடுக்காத பிடிவாத குணம் கொண்டவர்கள். உங்கள் சாதுவாக தோற்றம் அளித்தாலும், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற வாக்கிற்கிணங்க இந்த லக்னக்காரர்கள் கோபம் கொண்டால் உங்களை யாரும் நெருங்கவோ அல்லது எதிர்க்கவோ முடியாது. உங்களுக்கு சகோதரர்களாலும், பெற்றோராலும் உறவினர்களாலும் தொல்லைகள் தான் அதிகம் ஏற்படும். ஆனால் நண்பர்களால் உதவியுண்டு. விரோதிகளால் தொல்லைகள் ஏற்படினும் அவற்றைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். நீங்கள் சாதாரணப்பேர்வழிகளாக தோற்றமளித்தாலும் உங்களுடன் யார் வம்புக்கு வந்தாலும் அவர்களை கடைசிவரை விரட்டியாடித்து அவமானத்திற்குள்ளாக்கி விடுவீர்கள்.
நீங்கள் சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும், நயமாகவும், பிறரைத் தன் வசமாக்கக்கூடிய அளவுக்கு பேசும் ஆற்றலுடையவர்களாகவுமிருப்பீர்கள். உங்களுடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் பிரதிபலிக்கும். பேச்சில் இவர்கள் தம்மைப் பிறர் வெல்ல இடம் கொடுக்க மாட்டீர்கள். சில சமயங்களில் குதர்க்கமாகவும், குயுக்தியாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானம் செய்வதில் சாமர்த்தியசாலிகள். தர்க்கவாதிகளாலும் சட்டம் கற்றுத் தெரிந்தவர்களாலும் உங்களுடைய பேச்சுத் திறமையை மெச்சும் அளவுக்கு உங்களுடைய பேச்சில் அறிவாற்றலும், திறமையும் புலமையும் பிரதிபலிக்கும். தமக்காக வாதாடுவதைவிட பிறருக்காக வாதாடுவார்கள். பேச்சளவில் தங்களுக்காகவென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ளாதவர்களானாலும், எந்த சமயத்தில் எந்தக்கட்சிக்காக வாதாடுகிறாரோ, அந்த கட்சிக்காக வாதாடி வெற்றி பெறுவார்கள். அந்த அளவுக்கு நீங்கள் போற்றத்கரிய சாதுரியம் பெற்றவர்கள்.
நீங்கள் வயதில் சிறுவர்களாயினும், அந்தஸ்தில் சிறியவர்களாயினும், வயது முதிர்ந்தவர்களும், பெரியோர்களும், அறிவாளிகளும்கூட வயது, அந்தஸ்து முதலியவற்றைப் பாராமல் உங்களுடைய அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்து அரிய பலன்களைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள்.
நீங்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயினும், வளர வளர தனியாக வேறு இடத்தில் வளர வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். சிறுவயதிலிருந்தம் தமது பெற்றோரிடமிருந்தம் சகோதர-சகோதரிகளிடமிருந்தே பிரிந்து வாழ வேண்டிவரும். ஆயினும் சிறுவயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். உடன் பிறந்தவர்க்கு திருமணமானபின்தான் தான், செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாதலால் பெரும்பாலோர்க்கு நாள் கடந்துதான் திருமணமாகும். ஆயினும் புத்திரர்கள் குறைந்து அளவான குடும்பம் அமையப் பெற்றவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர்க்கு சீக்கிரமாகவே திருமணம் முடிந்திருந்தாலும் புத்திரப்பேறு நாள் கடந்துதான் ஏற்படும். ஒரு சிலர்க்கு சாந்தி முறைகளைக் கையாண்ட பிறகுதான் புத்திரப்பேறு ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
உங்களுக்கு வாய்க்கும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அமைந்திருக்கும். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்றே ஆசை கொண்டிருந்தாலும், அதற்காக பிரயாசைப்படுபவர்களல்லவாதலால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏதும் ஏற்படக் காரணமாவதில்லை.
நீங்கள் கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுபவர்கள் அல்லர். பசித்திருக்கும் போதும். அவசியமானபோதும் தமக்குப் பிடித்ததை விருப்பமுடன் சாப்பிடுவார்கள். தண்ணீர், காப்பி, டீ குளிர்ந்த பானங்கள் நீங்கள் அதிகமாக விரும்பி அருந்துவார்கள்.
ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவீர். தூய வெண்மையான உடைகளே உங்களுக்கு மிகப் பிடித்தமானவை. சிறிது தூசு படிந்திருந்தாலும், உடனே வேறு ஆடையை அணிந்திடுவீர்கள். பழக்கமான உடைதவிர, புதுபாஷன்களில் உங்களில் கவனம் செல்லாது. மடிப்புக்கலையாமலிருக்க அடிக்கடி உடையை சரிப்படுத்திக் கொள்ளும் நீங்கள் கவர்ச்சிகரமாகவும், உடுப்பதற்கு மிக சௌகரியமானதாகவும் உள்ள உடைகளையே தேர்ந்தெடுப்பீர்கள்.
உங்களுக்கு உடன் பிறந்தர்களால் எந்தவித சௌரியமும் ஏற்படாது. சகோதர்களானால் ஒற்றுமை நிலவுவது மிகக்கடினம். உங்களுடைய உதவி அவர்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். சிலருக்கு தங்கள் சகோதரர்களுடைய குடும்பப் பொறுப்பையும் சேர்த்தே நிர்வகிக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். சகோதரிகளானால் உங்களுடன் ஒற்றுமையாக இருந்து வருவர். எனினும், உடன் பிறந்தவர்களால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் தான் அதிகமே தவிர ஆதாயம் ஏதும் ஏற்படாது.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட நீங்கள் எந்தத் துறையிலும் துணிந்து செயலாற்றி வெற்றி பெறுவார்கள். பொது நல சேவைகளில் அதிக நாட்டம் கொண்ட நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தொழில் துறையில் மேலோரால் வஞ்சிகப்பட்டவர்கள். முதலாளிகளிடத்தில் சலுகைபெற விரும்புபவர்கள் உங்களுக்காக உதவி செய்து அவர்களுடைய குறைகளை தீர்க்கமுன் வருவார்கள். உங்களுடைய விடா முயற்சியும் பரோபகார சிந்தனையும் புகழையும், கீர்த்தியையும் பெருகச் செய்யும்.
தாராளமாக செலவு செய்யும் உங்களுக்கு பணவசதி திருப்திகரமாக அமைவதில்லை. ஆனால் இவருடைய செலவினங்களுக்கேற்றவாறு கடன் வசதிகள் தாராளமாக கிடைத்திடும். உங்களுடைய உடன் பிறந்தோர்களால் செலவினங்கள் அதிகமானாலும், உற்ற நண்பர்கள் இவர்களுக்கு வேண்டிய தருணத்தில் தக்க உதவியைப் புரிந்திடுவார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பண வசதிக்காக மிகவும் சிரமப்பட்டாலும், வயது வளர, வளர தங்களது சுய முயற்சியினால் தேவைக் கேற்றவாறு பண வசதியைப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். லாட்டரி, ரேஸ் போன்ற ஹேஷ்ய விவகாரங்களில் சில சமயம் சொற்ப வெற்றி ஏற்படும். ஆனால் தொடர்ந்து ஈடுபடுவதால் நஷ்டங்களே ஏற்படும். ஆகவே ஹேஷ்ய விவகாரங்களைத் தவிர்ப்பது நலமாகும்.

- BRAHMAGURU's blog
- Login or register to post comments
- 1505 reads
கருத்துகள்
எனக்கு கன்னி ராசிக்கு
எனக்கு கன்னி ராசிக்கு சொல்லுங்க
அப்போதான் பதில் வரும்..
ராசி தான் கன்னி, லக்னம் என்னென்னு தெரியது.
சீக்கிரம் பொண்ணு கிடைக்கும்னு சொன்னா பதிலும் சீக்கிரம் வரும். ஹிஹி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
எல்லா ராசிக்கும் எழுதுங்கள்
எல்லா ராசிக்கும் எழுதுங்கள் நன்றி
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
சந்தேகம் வந்தா கேட்காம விட
சந்தேகம் வந்தா கேட்காம விட மாட்டோம் கேட்டுடுவோம்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
"ரிஷபராசி,லக்கணம் உள்ளவரின்
"ரிஷபராசி,லக்கணம் உள்ளவரின் இயல்பு குணம் "
என்று தலைப்பில் சொல்லி உள்ளீர்கள்
அப்போ க்கு ரிஷபராசிஉரிய கட்டுரையா இது இல்லை ரிஷலக்கணம் உரிய கட்டுரையா இது??
ஏன் என்றால் ரசி வேறு லக்னம் வேறாக இருக்கும் அல்லவா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
புரியலை எனக்கு கன்னி ராசி ஆனா
புரியலை
எனக்கு கன்னி ராசி
ஆனா லக்னம் வேற
அப்போ உங்க கூற்றுப்படி அந்த லக்ன ராசியும் கன்னிராசி குணங்களும் ஒன்றாகிறது
அப்படிப்பார்த்தா எல்லா ராசி குணங்களும் ஒன்றாகிவிடுமே
தெளிவா சொல்லுங்களேன்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஒண்ணும் புரியல ஏதோ போங்க..
ஒண்ணும் புரியல ஏதோ போங்க..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நீங்கள் ரிஷபராசியின் குணத்தை
நீங்கள் ரிஷபராசியின் குணத்தை தனியாக ரிஷபலக்கணம் உள்ளவரின் குணத்தை தனியாக சொல்லுங்களேன்..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
மிக்க நன்றி
மிக்க நன்றி
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அய்யா நான் ரோகினி
அய்யா நான் ரோகினி நட்சத்திரம்,மேச லக்கனம், ரிசபராசி.
பிறந்த நாள் 21_10_1986.
தமிழுக்கு ஐப்பசி_4,செவ்வாய் கிழமை
உங்களுக்கு விருப்பமிருந்தால் பலன் கூறவும்.
சந்துரு
பிறந்த நேரம், பிறந்த ஊர்
பிறந்த நேரம், பிறந்த ஊர் சொல்லாம விட்டுடீங்க..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நன்றி தஞ்சாவூர் பக்கத்தில்
நன்றி
தஞ்சாவூர் பக்கத்தில் ராஜமன்னார்குடி, நேரம் மாலை 6.05க்கு.
4ம் பாதம்னு நினைக்கிறேன்.
சந்துரு
ரிசபராசிக்கு 10.01.2010 to
ரிசபராசிக்கு 10.01.2010 to 27.05.210 வரை வக்கிர சனி 5ல் சஞ்சரிக்கும். (வாக்கிய பஞ்சாங்கக்கபடி)
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அதனால் நன்மையா? தீமையா?
அதனால் நன்மையா? தீமையா?
சந்துரு
ரிசபராசிக்கு 10.01.2010 to
ரிசபராசிக்கு 10.01.2010 to 27.05.210 வரை வக்கிர சனி 5ல் சஞ்சரிக்கும் போது ........
எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டினாலும் அதிகம் பாடுபடவேண்டி இருக்கும் .
சனி 5ல் சஞ்சரிப்பது சுமாரான பலன் கொடுக்கும் என்றாலும் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால்
எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்சன் உண்டாகும்
பொருளாதாரநிலை ஓரளவு திருப்தியளிக்கும். குறு 10ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் , உத்தியோகம் செய்பவர்கள் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்க கூடும் எதிலும் கவனம் தேவை இக்காலங்களில் உடல் நிலையிலும் கவனம் செலுத்தவேண்டி வரும்
இவை பொது பலன்களே அவரவர் திசாபுத்தியை பொறுத்து சிறிது மாற்றமடையும்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
எனது ஓய்வு நேரத்தை தற்போது
எனது ஓய்வு நேரத்தை தற்போது ஜோதிடம் கற்பதற்கு செலவிடுகிறேன் அவளவும் தான்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அதுக்கு ப்ராடிகளுக்கு நான்
அதுக்கு ப்ராடிகளுக்கு நான் தான் மாட்டியிருக்கேன்னு தெருஞ்சுடுச்சு
just joke
சந்துரு
மிக்க நன்றி. நலவிரும்பி..
மிக்க நன்றி.
நலவிரும்பி..
சந்துரு
மிக்க நன்றி. சற்று
மிக்க நன்றி.
சற்று ஜாக்கிரைதையாகவே இருக்கிறேன்.
சந்துரு
பரிகாரங்கள்,வழிபட வேண்டிய
பரிகாரங்கள்,வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து கூறவும்
சந்துரு
ராகு கேது வழிபாடு சிறப்பு
ராகு கேது வழிபாடு சிறப்பு தரும்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இங்கு இதுதான் பிரச்சனை. நான்
இங்கு இதுதான் பிரச்சனை.
நான் மும்பையில் உள்ளேன். இங்கு ராகு கேது கோயில்கள் இல்லை.
எல்லோரும் இங்கிருந்து தமிழ் நாட்டுக்குதான் வருகின்றனர்.
இனி ஊருக்கு போறப்பதான் வழிபடனும்.
சந்துரு
சரி, அப்படியே செய்கிறேன்.
சரி, அப்படியே செய்கிறேன்.
சந்துரு
அய்யா எனக்கு
அய்யா எனக்கு ஜோதிடம்,கிரகங்கள் மற்றும் பல தெய்வ காரியங்கள் பற்றி அதிக சந்தேகங்கள்,அடிக்கடி வரும்.
இதற்கு நீங்கள் பதில் கூற , மற்றும் பலரும் தங்கள் கேள்விகளை கேட்க ஏதாவது செய்ய முடியுமா?
orkut ல் உள்ள forum போல்!
அட்மினிடம் கேட்க வேண்டும். இன்னும் இது போல் பல பொதுவான கலந்துறையாடல்களுக்கு.
சந்துரு
மாற்றூம் ஓர் கேள்வி.
மாற்றூம் ஓர் கேள்வி. இருவருக்கும்.
என் வீட்டில் நான்&என் தம்பி ரிசப ராசி(அவன் கார்த்திகை நட்சத்திரம்) மற்றும் எங்கள் அம்மா ரோகினி நட்சத்திரம். அம்மா என்ன ராசின்னு தெரியலை. ஜாதகம் இல்லை.
கேள்வி என்னான்னா அம்மா ரிசப ராசியா இருந்து அதனால ஒரே வீட்டில ஒரே ராசி மூனுபேர் இருந்தா பிரச்சனையா?
சந்துரு








