(முன்குறிப்பு; நீங்க இந்த விமர்சனத்தை கடைசிலேந்தும் படிக்கலாம்.)
படத்தின் முதல்பாதி;
இரண்டாம்பாதி;
மனித உணர்வுகளை திரையில் காட்டுவதில் வல்லவரான மணிரத்னம் இந்த படத்தில் எங்கே போனார் என்று தெரியவில்லை. மணியின் முத்திரை அடுத்த படத்திலாவது கிடைக்குமா?
படத்தை அழகாக்கும் இரு முக்கியமான அம்சங்கள் ரகுமானின் பிண்ணனி இசையும் சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவும்தான். உசிரே போகுதே,வீரா வீரா, காட்டுச்சிறுக்கி பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் படத்தில் அப்பாடல்கள் கையாளப்பட்டிருக்கும் விதம் படத்திற்கு பாட்டே தேவை இல்லை என்று ஆகியிருக்கிறது. காட்டுக்குள் சந்தோஷ் சிவனின் கேமரா புகுந்து விளையாடுகிறது. அவ்வளவு குளுமை....
ரஞ்சிதா திரையில் வரும் ஒன்று இரண்டு காட்சிகளில் திரையரங்கில் ஒரே சலசலப்பு.
படத்தின் முக்கியமான அம்சம் பிரியாமணியின் பின்னோக்கு காட்சி(அதாம்பா......ஃப்ளாஷ்பேக்)..
பிருத்விராஜுக்கு உதவி செய்யும் அனுமாராக கார்த்திக் வந்து போகிறார். வீரையாவுக்கு பக்கபலமாக பிரபு தோள் கொடுக்கிறார்.
வீரைய்யாவையும் கடத்தப்பட்ட தன் மனைவியையும் தேடி வரும் போலிஸ்காரராக பிருத்விராஜ். என்னதான் போலிஸ்கார்ராக இருந்தாலும் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் அலையவேண்டுமா?
போலிஸ்காரன் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யாராய். இன்னமும் உலக அழகியாகத்தான் இருக்கிறார். தன்னை கடத்தியவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள துணிச்சலுடன் மலையிலிருந்து பாய்கிறார். ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்...அவ்வளவுதான்.
வீரைய்யா என்ற கதாபாத்திரத்தில் விக்ரம். பொருத்தமாக இருக்கிறார். ஆனால் அவர் டண்டண்டண் என்று வாயால் மத்தளம் அடிக்கும் மேனரிஸம் ஏனோ மனதில் ஒட்டவில்லை. ஊர் மக்களுக்கு தலைவன் போல இருக்கிறார். போலிஸ்காரன் மனைவியை கடத்துகிறார். அவளை நேசிக்கிறார். தங்கை பாசத்தில் உருகுகிறார். இறுதியில் தனது பழிவாங்கும் படலம் நிறைவேறாமலே பரிதாபமாக சாகிறார்.
கதை; அதை பத்தி சொல்றத்துக்கு ஒன்னுமில்லே...இராமாயணம் படிச்சவங்க.......எல்லோருக்கும் தெரிஞ்ச கதைதான். முதல் பாதியில் படத்தில் ஒன்னுமே இல்லையோ....எந்திருச்சி வெளில போயிடலாமோன்னு நினைக்கும்படி மொக்கை போடுகிறார்க்ள். படத்தின் ஒட்டு மொத்த சாரமும் இடைவேளைக்கு பிறகு வருவதால் கொஞ்சம் தப்பித்தோம்.
இயக்குனர் மணிரத்னத்தின் மற்றுமொரு திரைப்படம்.
- kumaran's blog
- Login or register to post comments
- 488 reads
கருத்துகள்
விமர்சனத்திற்கு நன்றி
விமர்சனத்திற்கு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










noted


