என்னோட லைப்ல காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனும்னு சின்ன வயசிலிருந்தே ஒரு ஆசை இருந்துக்கிட்டே இருந்திச்சி.
ரொம்ப நாளா அலைஞ்சி,பல பொண்ணுங்களை சைட்டடிச்சி ஒரு பொண்ணாவது நம்மள திரும்பி பாக்க மாட்டாளான்னு ஏங்கித் தவிச்ச காலங்கள் போன வாரம் வரைக்கும் 'கன்னித்தீவு' கணக்கா தொடர்ந்திச்சி...
மொத்தம் எட்டு பொண்ணுங்களை லவ் பண்ணிருக்கேன்.போன தை மாசத்தோட பாரதியையும் சேர்த்து நான் காதலிச்ச எட்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சி.
கிட்டத்தட்ட வத வதன்னு பொண்ணுகளை பெத்து வெச்சி அதை கல்யாணம் பண்ணி குடுத்த பின்னாடி அவங்கள பெத்த அப்பனுக்கு அப்பாடின்னு ஒரு சந்தோசம் வரும்ல அது மாதிரி... நான் காதலிச்ச எல்லா பொண்ணுங்களுக்கும் காலாகாலத்துல கல்யாணம் முடிஞ்சத எண்ணி எனக்குள்ள தலை,கால புரியாத அளவுக்கு சந்தோஷம்.
இதெப்படி காதலாகும்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.இதுல ஒரு குழப்பமும் இல்ல எல்லாமே 'ஒருதலைராகம்' ரகம் தான்.
போன வாரம் வரைக்கும் தேடிக்கிட்டிருந்தேன்,யாராவது ஒரு பொண்ணு நம்மள காதலிக்க மாட்டாளான்னு..?
பேச்சி குடுத்து பார்ப்பேன்.
"சொல்லுங்கண்ணா..."னுதான் முதல் பேச்சையே ஆரம்பிப்பாங்க?
அந்த வார்த்தைகளை கேட்ட உடனே பொசுக்குன்னு என்னோட மூஞ்சி சுருங்கி போயிடும்.
ஆகா... நமக்கு தான் எத்தனை தங்கச்சிகள்...
பிரண்டுகிட்ட சொன்னேன்..
"டேய் மச்சான், நான் கண்டிப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாட்டேன்டா..."
எனக்கு அதுல நம்பிக்கை இல்ல.
"தோ பார்றா எந்த பிகரும் சிக்கிருக்காது அதனால இப்படி ஒரு பிட்டு அப்படித்தான..?"
ச்ச... கரக்டா சொல்றான்.என் மனச புரிஞ்சிக்கிட்டவன் அவன்தான்.
அதுதானே உண்மையும் கூட...
ஒரு வழியா மனச மாத்திக்கிட்டேன்.
இனி கல்யாணம் பண்ணினா அது வீட்டுல பார்த்து கட்டி வெக்கிற பொண்ணோட தான்னு முடிவு பண்ணினேன்.
நாலு நாளைக்கு முன்னாடி மத்தியானம் ரெண்டரை மணிக்கு ஒரு ஆபிசுல உக்கார்ந்து பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்
அப்போ என்னோட மொபைலுக்கு ஒரு போன் வந்திச்சி
"ஹலோ யார் பேசுறீங்க..?"
எதிர் முனையில் ஒரு பொண்ணோட குரல்
(என்னோட பேரை சொல்லி...) நீங்கதானே..?
ஆமாம் நான்தான் நீங்க யாரு..?
நான் உங்க பிரண்டு
யாரு என்னோட பிரண்டா..?
ஆமாம் உங்க பிரண்டு தான்.
எப்படி இருக்கீங்க..?
நல்லா இருக்கேன்.
பாத்தீங்களா..? என்ன மறந்துட்டீங்களே...?
எங்க இருக்கீங்க..?
நான் ஒரு ஆபிசுல இருக்கேன்.
சாபிட்டீங்களா..?
இப்போதான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்
என்ன சாப்பிடுறீங்க..?
பிரியாணி
ஏன் லேட்டா சாப்பிடுறீங்க..?
கொஞ்சம் வேலை அதிகம் அதனால தான்.
ஓ...ஓ..
ஏங்க, உங்க பேரேன்னா..?(இது நான்)
என்னோட பேரு தெரியாதா?
என்ன யாருன்னு கண்டுபிடிங்க..
நான் உங்க பிரண்டு என்ன எப்படி நீங்க மறந்தீங்க..?
என்னது நான் மறந்தனா..? என்னங்க சொல்றீங்க..?
எனக்கு கேர்ள்பிரண்டுகளே கிடையாதுங்க..!
அதெப்படி..?
நான் உங்க பிரண்டு நீங்க எப்படி என்ன மறந்தீங்க..?
அய்யோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..
உங்க பேர சொல்லுங்க ப்ளீஸ்..
இல்ல நீங்களே கண்டுபிடிங்க..,என்ன எப்படி நீங்க மறந்தீங்க..?
நான் யாருன்னு நல்லா யோசிச்சி வைங்க நான் நாளைக்கு போன் பன்றேன்.
ஓ.கே வா..?
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனக்கு ஒரே ஷாக்.
யார்றா.. இந்த பொண்ணு?
எல்லா வகையிலும் யோசனைப் பண்ணி பார்த்தாச்சி
ஊஹும்... யாரு இது நம்மோட பிரண்டு..அதுவும் கேர்ள்பிரண்டு..,
ஒருவேளை யாராவது நம்மளை களாய்க்கிறாங்களோ..?
அந்தப் பொண்ணு சொன்னபடி ரெண்டாவது நாள் போன் வரல
அதனால நான் அவ யாருன்னு தெரிஞ்சிக்கிற வேலையில இறங்கல
அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, ஏன்னா அவ ஒரு 'பி.சி.ஓ'ல இருந்து தான் பேசினா..
அதுக்கு மறுநாள் ஒரு செல் நம்பர்ல இருந்து மூணு மிஸ்டு கால்.
யாருன்னு பார்த்தான் அதே பொண்ணு..
போனை எடுத்த உடனே
என்ன 'என்னை யாருன்னு கண்டுபுடிச்சீங்களா..?'
இல்லமா உன்னை யாருன்னே என்னால கண்டுபுடிக்க முடியல
உன் பேரோட முதல் எழுத்தையாவது சொல்லேன்.., நான் கண்டுபுடிக்கிறேன்
சொல்ல மாட்டேன் நீங்களே கண்டுபுடிங்க.., என்னை எப்படி நீங்க மறந்தீங்க..?
தொடர்ந்து வழக்கமான ஆனா இதுவரைக்கும் என் வாழ்க்கையில என்கிட்டே எந்த பொண்ணும் பேசாத மாதிரி ரொம்ப அன்பா,அன்யோன்யமா ரொம்ப உரிமையோட அந்தப் பொண்ணு எங்கிட்ட பேசினா...
எனக்கு அது ரொம்ப புதுசா இருந்திச்சி..,சந்தோஷமாவும் இருந்திச்சி..,
இப்போ அவள கண்டுபுடிக்கிற வேலையில இறங்கியிருக்கேன்.
அதுல முதல் கட்டமா அவ காலேஜில படிக்கிற பொண்ணுங்கிறது உறுதியாயிடுச்சி.
ஆனா..நான் இருக்குற பீல்டுக்கும் காலேஜிக்கும் சம்பந்தம் இல்லை.
ஸோ..,யார் இந்தப் பொண்ணு?
அவ எங்கிட்ட என்ன எதிர்பார்க்கிறா..?
ஏன் இவ்ளோ அன்யோன்யமா பேசணும்(அதாவது வாடா,போடா..ங்கிற ரேஞ்சில...)
நான் காதலிச்சே கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணின ஒரே வாரத்துல இப்படி ஒரு முகம் தெரியாத பொண்ணு எதுக்காக போன் பண்ணனும்?
காரணத்தை தேடிக்கிட்டிருக்கேன்,கண்டுபுடிச்சிருவேன்.
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 523 reads







