நீங்கள்பார்வைக்கு அசட்டையாகக் காணப்பட்டாலும் சுற்றுப்புறங்களை இருந்த இடத்தில் இருந்தே கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். உங்களுக்கு முகத்திலும் தலையிலும் தழும்பு ஏற்பட்டு நிரந்தர வடுக்கள் காணப்படும்.
பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப் பெற்றிருக்கும் நீங்கள், கலா ரசிகர்களாகவும், வினோத பிரியர்களாகவுமிருப்பீர். பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும், தமக்குத் தெரிந்த விஷயம் போல் கலந்து பேசி ரசிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரித்து விடாமல் தனக்கென சொந்த அபிப்பிராயங்களைப் பெற்றிருப்பீர் தனக்கு தோன்றியபடி தான் நடந்து கொள்வதுமல்லாமல், தனக்குப் பிடித்த மாதிரிதான் செய்யவேண்டும் என்ற பிடிவாதம் குணம் உங்களுக்குஉண்டு. வாத பிரதிவாதங்களில் திறமையோடு விவாதித்து தனது அபிப்பிராயத்தை நிலை நாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல்படைத்தவர். வெகுளியாகவும், கபட மற்றும் காணப்படும் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவீர். நிர்ப்பந்தத்தின் காரணமாக சொந்த அபிப்பிராயங்களை வெளியிட முடியாத நீங்கள் சமயம் வரும்போது தனது பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டி பேரும் புகழும் பெற்றிடுவார்கள்.
2, தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்கள் நேர்ந்தாலும், அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து தங்களது சுயநலத்தை தியாகம் செய்தாவது அவர்களுடைய காரியங்கள் வெற்றி பெறுவதற்காக பாடுபடுவீர்.தங்களது கௌரவத்துக்கும் அந்ததுக்கும் பழுது ஏற்படாத எந்தப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வீர்.. எந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி கருத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றி வெற்றி பெறுவீர். ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த நீங்கள் திடீரென்று மன வேறுபாடு அடைவதும் உண்டு.
3, உங்கள் சுயேச்சையான சுபாவத்தையும் அகங்கார குணத்தையும் கண்டு உங்களை நேசிப்பவர்கள்கூட சிலசமயம் வெறுப்படையும் படி நடந்து கொள்வதும் உண்டு.
நீங்கள் வாக்கு சாதுரியம் பெற்றவர்கள். வாத-பிரதிவாதங்களில் தங்களது வாக்குவன்மையை அதிகமாக வெளிப்படுத்தி அவற்றில் வெற்றியும் பெறுவீர். தைரியமும், அஞ்சா நெஞ்சமும் படைத்தவர்களாயினும் சில சமயங்களில் திடீரென்று மன அமைதியினை இழந்து கவலையுடன் காட்சி அளிப்பீர். ஆனால், அந்த கவலையை உடனுக்குடனே மறந்து விடும் ஆற்றல் பெற்றவர்நீங்கள்.எந்தவித காரியத்தையும் திடீர் என்று தீர்மானிப்பீர்.
மன அமைதியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பிறருக்குத் தெரியாதவாறு மறைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்.. சிரிக்கச் சிரிக்கப் பேசும் நீங்கள் தங்களது வாக்குத் திறமையால் மற்றவர்களைக்குலுங்க, குலுங்க சிரிக்க வைப்பீர்கள். பிறரை வசீகரிக்கத்தக்க பேச்சுத்திறன் படைத்தவர்கள் என்றால் அது மிகையாகாது. அழுத்தம் திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் பேசும் நீங்கள் சில சமயக்ஙளில் பிறர் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு தங்கள் கருத்தை மாற்றியும் பேசுவீர். சுருங்கச்சொல்லி விளங்கவைப்பதே குறிக்கோளாகக் கொண்ட நீங்கள்
பிறர் உங்களுடைய கருத்தை எதிர்க்கும்போது மௌனத்தைக் கையளுவீர். நீங்கள் காரிய வாதிகள் ஆனதால் வீண்பழிச் சொற்களுக்குச் செவி சாய்க்க மாட்டீர். சமயம் பார்த்து தன் வாக்குத் திறமையால் பிடிகொடுக்காமல் பேசி பிறரைத் திணறும் படி செய்வீர்கள்.
நீங்கள் சளைக்காமலும், சுய நலம் கருதாமலும், பிரதிபலனை எதிர்பார்க்காமலும் பரந்த நோக்கத்துடன் பாடுபடும் ஆற்றல் கொண்டவர்கள்
தோல்விகளை கண்டு மிரளாமலும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமலும், உறுதி தளராமலம் முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்லும் செயல் வீரர்களென்றால் உங்களுக்கு தகும். புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காமல், தானுண்டு தம் காரியம் உண்டு என்ற குறிக்கோளுடன் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக, துணிகரமாக ஈடுபட்டு வெற்றி பெறும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள்.
நீங்கள் பெரும்பாலும் தீர்க்காயுள் பெற்றவர்களாகவே இருப்பீர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் சீரடையும். உங்கள் வாழ்க்கை இன்பதுன்பங்கள் கலந்ததாகவே இருக்கும் என்றால் மிகையாகாது. ஆனாலும், தீவிர தெய்வ பக்தியும், இரக்ககுணமும் கொண்டவர்களாதலால் நீங்கள் ஈடுபடும் எந்த காரியத்திலும் இந்த குணம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்
- BRAHMAGURU's blog
- Login or register to post comments
- 3639 reads
கருத்துகள்
நன்றி, இதே போல மற்ற எல்லா
நன்றி, இதே போல மற்ற எல்லா இராசிக்காரர்களின் சிறப்பு இயல்புகளை தாங்களேன்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
i want meena rasi detail
i want meena rasi detail please
என்ன ஜெயகாந்தன் நீங்க மீன
என்ன ஜெயகாந்தன் நீங்க மீன ராசியா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
hai friends, enudaya rasi
hai friends,
enudaya rasi ,mesa rasi










