Tamil's படம்

உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டி"  முடிவுகள்

 

  

 

உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு பதிவுகள் அனுப்புவதற்காக கடந்த ஜனவரி 20 தேதி வரை கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 

 

நிறைய நபர்கள் தாங்கள் வரைந்த கோலங்களை அனுப்பி வைத்திருந்தனர், இணையத்தில் படங்களை அனுப்புவதில் சில சிக்கல்கள் உள்ள போதும், அழகாக வரைந்து படம் எடுத்து ஆற்றலை வெளிகாட்டியமையும், தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தமையும் போற்றுதற்குரியது.

 

பரிசு விபரம்

 

முதல் பரிசை பெறுபவர்:

ரேவதி அவர்கள்

இரண்டாம் பரிசை பெறுபவர்:  

லலிதா அவர்கள்

மூன்றாம் பரிசாக ஆறுதல் பரிசை பெறுபவர்கள் : 

பிரகாஷ் ராஜா  அவர்கள்

மாலதி அவர்கள்

சந்திரா லேகா அவர்கள்

ஜெயஸ்ரீ ராம் அவர்கள்

 

 

 

 

 

பரிசு பெற்றவர்களுக்கு நூல்களை அவர்களே தமக்குத்தேவையான நூல்களைத் தெரிவு செய்து வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. நூல்களை எங்கே எப்படி வாங்க வேண்டும் என்ற விபரம் அவர்களுக்கு தனி மடலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போட்டி நடந்த விதத்தில் ஏதும் தவறு இருப்பின் மன்னித்துக்கொள்ள வேண்டுகிறோம். தயவு செய்து இப்போட்டி பற்றியும் உதயம்.இன் (Traditional Arts gallery) இணையதளம் பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும். 

கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் உதயம்.இன் மற்றும் தமிழ் நண்பர்கள் சார்பில் மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். இனிவரும் போட்டிகளிலும் அனைவரையும் பங்கேற்கும் படி வேண்டிக்கொள்கிறோம். 

நன்றிகள்

உதயம்.இன் Traditional Arts gallery  மற்றும்

தமிழ் நண்பர்கள் Tamilnanbargal.com

போட்டி முடிவுகள் அறிவிப்பை உதயம் தளத்திலும் நீங்கள் காணலாம்.

5
Your rating: None Average: 5 (1 vote)