VISWAM's படம்

நாதஸ் : அண்ணே! வெங்காயம் உரிச்சா ஏன் கண்ல தண்ணி வருது தெரியுமாண்ணே!!

கவுண்டர் : அதென்னடா பெரிய தங்கமலை ரகசியம். நீயே சொல்லு.

நாதஸ் : ஒரு ஊர்ல ஐஸ் க்ரீம், தக்காளி, வெங்காயம் மூணும் பிரண்ட்ஸா இருந்தாங்க. ஒரு நா மூணு பேரும் படம் பார்க்க கிளம்பினாங்க.

போற வழியில வெயில் அதிகமா இருந்ததாலே ஐஸ் க்ரீம் உருகி ஒன்னுமில்லாம போயிடுச்சு. அதப்பார்த்த வெங்காயமும் தக்காளியும் ஐயோ நம்ம நண்பன் போயிட்டானேன்னு விம்மி விம்மி அழுதுச்சுங்களாம்...ம்ம்ம்ம்...

கவுண்டர் : அதுக்கு ஏன்டா நீ அழுவுறே?

நாதஸ் : விழுந்தது ஏன் ஐஸ் க்ரீம்லோ. அழுவாம என்ன பண்ண?

கவுண்டர் : சரி மேல கதைய‌ச் சொல்லு.

நாதஸ் : அப்புறம் மனச தேத்திக்கிட்டு மத்த‌ ரெண்டும் டிக்கட் எடுத்து படம் பார்க்க சோபால‌ உட்காந்து இருந்துச்சாம். அந்த நேரம் பார்த்து வந்த ஒருத்தன் இருட்ல சரியா கண்ணு தெரியாம தக்காளி மேல உட்கார்ந்துட்டான். தக்காளி நசுங்கி போச்சு.

அதப்பார்த்த வெங்காயம் அழுது கூப்பாடு போட்டுச்சாம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு மறுபடியும் அழுதுச்சாம்.

கவுண்டர் : ஏன் அது மேல யாரும் உட்காந்துட்டாங்களா?

நாதஸ் : அதில்லண்ணே! நம்ம கத முடிஞ்சா நமக்காக அழ யாருமில்லன்னு அழுதுகிட்டே இறைவன் கிட்ட வேண்டுச்சாம். அதனால தான் அத நாம உரிக்கும் போதெல்லாம் நமக்கு கண்ணீர் வருது.

நன்றி : Abdul Vahab

2
Your rating: None Average: 2 (1 vote)

கருத்துகள்

sugiri's படம்

ஐயோ பாவம்! அதை போய்


2

ஐயோ பாவம்! அதை போய் உரிப்பானேன்? விலையை கேட்டாலே கண்ணீர் வந்திடும்.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


VISWAM's படம்

நன்றி


நன்றி