எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை. அதற்கு காரணம் அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கில்லை. அப்படியே பார்த்தாலும் முதல் வாரம் பார்ப்பதில்லை. ஒரு படத்திற்காவது விமர்சனம் எழுத வேண்டும், அப்படி எழுதும்போது..... நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
படத்தோட கதையை வெறும் நூற்றி அறுபது கேரக்டரில் எழுதும் SMS-இல் எழுதினால்கூட இன்னும் ஒரு இருபது எழுத்து மிச்சமிருக்கும். விஜயகுமாரின் மகளான குஷ்புவிற்கும், கேப்டன் ராஜின் மகன் பிரகாஷ்ராஜிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் வேளையில், தன் முறைப்பையன் ஜெயராமை சந்திக்கும் குஷ்பு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த குஷ்புவின் உடன் பிறப்பு பொன்வண்ணன் அவரை வீட்டைவிட்டு துரத்துகிறார்.அப்போது குஷ்பு "தனக்கு பிறக்கும் ரெட்டை குழந்தைகளான ஆண் பையன்களுக்கு உனக்கு பிறக்கும் இரண்டு பெண்களை திருமணம் செய்து வைப்பேன்"(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...அவரது அண்ணன் பொன்வண்ணனுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தைகள் தான் என்று கல்யாணம் ஆன மறுநிமிடமே கண்டுபிடித்து விடுகிறாரே....)என்று சபதமேற்கிறார். பிரசாரத்திற்கு கிளம்பியிருக்கும் காமடி பீசுகளை போல நெப்போலியன், ராஜ்கிரண், நாசர், சினேகா, சீதா பொன்னம்பலம் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து அவரது சபதம் நிறைவேற பாடுபடுகிறார்கள். அம்புட்டுதாங்க...
கலைஞர் தேர்தல் பிரசார அவசரத்தில் வசனம் எழுதியிருப்பாரோ அல்லது வயசான காலத்தில் எதுக்கு கலைஞரை கஷ்ட படுத்துவானேன்னு இயக்குனர் தியாகராஜன் நினைத்தாரோ என்னவோ......ரொம்பவும் கம்மியான வசனம் தான். (கலைஞரின் கதாநாயகி (தேர்தல் அறிக்கை)யில் கூட அதிக வசனங்கள்). அதிலும் இரு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாந்த்கள் அதிகமாக வசனத்தை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல...ஆளுக்கு ஒரு நாலு வார்த்தை பேசிவிட்டு மணிரத்னம் பட ஹீரோக்களுக்கு செமத்தியான போட்டியை கொடுக்கிறார்கள்.
இளையராஜா இருந்தும் பாடல்கள் இனிக்கவில்லை.
முன்பெல்லாம் கலைஞர் படம் பார்த்தால்...அந்த பாத்திரத்தோடு ஒன்றி உணர்ச்சி பிழம்பாக இருப்பார்களாம்.
இப்போது சீரியசான காட்சிகளை கூட காமடியாக எடுத்துக்கொண்டு தியேட்டரில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்.
இது கலைஞரின் தோல்வியா? இயக்குனரின் தோல்வியா? அல்லது காலம் மாறிவிட்டதா என்று தெரியவில்லை.
படத்திற்கு பிளஸ் என்று பார்த்தால் கலை இயக்குனரின் கைவண்ணம் தான். செட் டிசைனை அருமையாக போட்டிருக்கிறார்.
இன்னொரு பிளஸ்....சரித்திர படங்களென்றால் மூணு மணிநேரம் ஓடுமோ என்று நினைத்து நெளிந்தவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக இரண்டுமணி நேரம் பத்து நிமிடத்தோடு படம் முடிந்தது.
கொங்கு மண்டலத்தில் கட்சி ரொம்ப வீக்காக இருக்கிறது என்பதை அறிந்த கலைஞர் அந்த பகுதி ஹீரோக்களான பொன்னர் சங்கர் கதையை தூசி தட்டி, தியாகராஜன் பணத்தில் புத்திசாலித்தனமாக பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆங்காங்கே 'பதவிக்காக யாரிடமும் அடிமையாக இருக்க மாட்டோம், வளைந்து கொடுக்க மாட்டோம்., மாநில சுய ஆட்சி' என்று காங்கிரசிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொத்தத்தில் 1950,60-ஆம் ஆண்டுகளில் அதாவது போன நூற்றாண்டில் திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாரித்த பெயரை...இப்போது இந்த நூற்றாண்டில் அவரே கெடுத்து கொள்கிறார் என்று அழுத்தமாக சொல்லும் கலைஞர் படங்களில் இதுவும் ஓன்று.
- ரஹீம்கஸாலி's blog
- Login or register to post comments
- 402 reads
கருத்துகள்
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உங்கள பார்த்தா பெருமைய
உங்கள பார்த்தா பெருமைய இருக்கு,எப்படிங்க? இந்த படத்தை தியட்டர்ல தனிய உட்கர்ந்து பார்த்திங்க,சாதாரனமா கலைஞர் கதை வசனம் என்றலே அந்த படத்தை,தன் கட்சிகாரங்களோட கூட்டனி கட்சிகாரங்களையும் மிரட்டி பார்க்கவைப்பர்கள் முன்னனி தலைவர்கள்,காரணம் மத்தவங்க யாரும் பார்க்க மாட்டாங்கன்னு தெரியும் அவங்களுக்கு.ஆன இப்போ தேர்தல் நடக்குற நேரத்துல, கட்சிகாரங்க எல்லாம் பிரச்சாரத்துக்கு போயிருக்கும் போது,யாரும் திட்டர்க்கு வந்து இருக்க மாட்டாங்க.(இந்த படத்தை பக்குறத விட கொளுத்துற வெயில்ல பிரச்சாரம் எவ்வளோவோ மேல்னு எல்லோரும் ஒடி இருப்பங்க).அந்த நேரம் பார்த்து ஈஸியா டிக்கேட் கிடைக்குதேன்னு நீங்க போய் மாட்டீயிருகிங்க? இலவசம் தரதா அறிவிச்சவங்க உண்மையலையே உங்களுக்கு தான் தங்க செயின் பொட்டு இருக்கனும் உங்க தைரியத்தை பாராட்டி.இதுக்கு எல்லாம் விமர்சனம் பன்ன சொல்லி யாரு உங்ககிட்ட அழுதா??????????????? 
தயவு செஞ்சி மாப்பிள்ளை
தயவு செஞ்சி மாப்பிள்ளை படத்தோட திருட்டு விசிடி'ய கூட காசு கொடுத்து வாங்கி பார்த்துடாதிங்க? அப்புறம் ஒரு வாரம் ரூம் போட்டு அழுவீங்க.தெருகூத்து,மேடை நாடகம்,பழைய ரெக்கார்ட் டான்ஸ், எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு எல்லாரும் வேதனை பட்டுகிட்டு இருந்தங்க. அதுக்கு சன் டி,வி,ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கு,தெருகூத்து,மேடை நாடகம்,பழைய ரெக்கார்ட் டான்ஸ் எல்லாத்தையும் ஒன்னா செர்த்து வெளியிட்டு இருக்குற படம் தனுஷ் நடிச்ச 'மாப்பிள்ளை'. படம் பாருங்க அப்போ சொறியும் sorry தெரியும்.

தயவு செஞ்சி மாப்பிள்ளை
தயவு செஞ்சி மாப்பிள்ளை படத்தோட திருட்டு விசிடி'ய கூட காசு கொடுத்து வாங்கி பார்த்துடாதிங்க? அப்புறம் ஒரு வாரம் ரூம் போட்டு அழுவீங்க.தெருகூத்து,மேடை நாடகம்,பழைய ரெக்கார்ட் டான்ஸ், எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு எல்லாரும் வேதனை பட்டுகிட்டு இருந்தங்க. அதுக்கு சன் டி,வி,ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கு,தெருகூத்து,மேடை நாடகம்,பழைய ரெக்கார்ட் டான்ஸ் எல்லாத்தையும் ஒன்னா செர்த்து வெளியிட்டு இருக்குற படம் தனுஷ் நடிச்ச 'மாப்பிள்ளை'. படம் பாருங்க அப்போ சொறியும் sorry தெரியும்.













