thirumathibssridhar's படம்

கண்ணையா(கிருஷ்னர்) நிறைய சீப்(செம்மறி ஆடு) வச்சிருந்தாராம்.
 பீகாக் வச்சிருக்க முருகர் வந்து கண்ணையாகிட்ட உம்பேரு என்னானு கேட்டாராம்.எம்பேரு கண்ணையா னு சொன்னாராம்,எம்பேரு முருகர் னு சொன்னாராம்.

ஹை! நிறைய சீப் வச்சிருக்கியே அவங்க பேர்லாம் என்னனு கேட்டாராம் முருகர்.
இது பேரு முன்னா.இது பேரு முன்னி.இது பேரு ஜீகி...அப்பின்னு(அப்படின்னு) சொன்னாராம்.

கண்ணையா... உங்க அம்மா அப்பா எங்கனு கேட்டாராம் முருகர்.
எங்க அம்மா அப்பாவ காணும்னு சொன்னாராம் கண்ணையா.

முருகர் ஜாது(மேஜிக்)செய்து கண்ணையா அம்மா அப்பாவ அழைச்சுட்டு வந்துட்டாராம்.கண்ணையா முருகருக்கு தூ தோ பகுத் அச்சா பச்சி ஹே(நீ ரொம்ப நல்ல பிள்ளை) பகுத்(ரொம்ப/நிறைய) தேங்ஸ் - அப்பின்னு சொல்லிட்டாராம்.

பீகாக்ல ஏறி முருகர் க்ளவுடுக்கு (வானம்)போய்ட்டாராம்.ஹனுமான் பெரிய வாலுடன் சுத்தி,சுத்தி வந்தாராம்.டைகர் வந்து ஹனுமான் வால கடிச்சிட்டாம்.கண்ணையா,கண்ணையா,முருகா,முருகா அப்பின்னு ஹனுமான் கத்தினாராம்.

கண்ணையாவும்,முருகரும் அடிச்சிடுவாங்கன்னு டைகர் ஓடியே போய்ட்டாம்.

அவ்ளதான் கதை முடிஞ்சிட்டு.

பொறுமையா இந்த கதைய நான்  ம்...ம்...னு கேட்டதில் ஹே..ஹ்ஹே..ஹே..என்று கதை சொல்லி முடித்துவிட்ட சந்தோசத்தில் சிரிப்பை முழுசா சிரிக்க முடியாதளவிற்கு (எல்.கே.ஜி. படிக்கும்) என் மகளுக்கு தூக்கம் கண்களை கட்டியது.மம்ம(நம்ம) இன்னொரு கத சொல்லுவோம்னு சொன்னவளை இந்த கதையே சூப்பரா இருக்கு,நான் ஒரு கத சொறேன்னு  சொல்லி தட்டிக் கொடுத்து தூங்கவச்சிட்டு இந்த கதைய ஒரு பதிவாக்கிட்டேன்.

இதுவரை மகள் பார்த்த தொலைக்காட்சி புராணக் கதைகள்,கார்ட்டூன் புராணம் மற்றும் நாங்கள் அவ்வப்போது சொல்லிய புராணக் கதைகளின் கலவையில் அவளுக்கு தோன்றிய கற்பனையாக இருக்கலாம். 

5.4
Your rating: None Average: 5.4 (5 votes)
http://aatchi.blogspot.com/2011/10/2011.html

கருத்துகள்

vinoth's படம்

ஞாபகம் ஞாபகம் வருதே... சின்ன


4

Smile Smile
ஞாபகம் ஞாபகம் வருதே... சின்ன வயசு கதைகள் படித்தது ஞாபகம் வருதே


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

அருமை அருமை.....


5

அருமை அருமை..... Clap Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


rajudranjit's படம்

பாப்பா மழலை மொழியில் கதை


6

பாப்பா மழலை மொழியில் கதை சொல்லியிருந்தாலும் சிந்திக்க வைக்கிற மாதிரி சொல்லியிருக்காள்!

தாய் மொழியின் அவசியம் அனைவரும் உணர்வது மிகவும் அவசியம்!

thirumathibssridhar's படம்

@வினோத் @ராகவன் @rajudranjit


@வினோத்
@ராகவன்
@rajudranjit
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.உங்களின் கருத்துக்களை மகளிடம் சொன்னேன்.என்ன் புரிந்ததோ ...ஒரே சிரிப்புதான். Big smile

sugiri's படம்

உங்கள் மகளுக்கு


7

உங்கள் மகளுக்கு Clap Clap Clap


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/