நமக்கு பிரியமானவை பற்பல. நாம் நம் தாயிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவள் நாம் பிறந்ததிலிருந்தே நம்மோடு பழகி நமக்கு அறிமுகமானவள். நமக்கு பசித்தால் உணவளிப்பவள். நமக்குப் பாத்ந்து பேசி நமக்கு ஆவன எல்லாம் செய்பவள். அதற்காக.
நாம் நம் தந்தையாரிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அப்பா நம்மை ஆதாpப்பவர். நமக்கு எது வேண்டுமானாலும் வாங்கித் தருபவர். நம்மைப் படிப்பிப்பவர். நமக்காக நாள் முழுவதும் உழைத்து உணவு, உடை அளிப்பவர். அவருக்குப் பின் அவர் சொத்து முழுவதும் நம்மைச் சேருகிறது. அதற்காக.
நாம் நம் சகோதர சகோதாpகளிடம் பிhpயமாயிருக்கிறோம். ஏன்? அவர்கள் நம் கூடவே பிறந்தவர்கள். நம் துணைவர்கள். நம் பக்க பலமாய் இருப்பவர்கள். நமக்கு உதவி செய்பவர்கள். அதற்காக.
நாம் நம் உறவினாpடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவர்கள் நம் குடும்பத்தாருடன் நெருங்கிய சம்பந்தமுடையவர்கள். அதற்காக.
நாம் நம் ஆசிhpயாpடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவர்கள் நமக்கு கல்வியளித்து வாழ்வுக்கு உதவி செய்பவர். அதற்காக.
நாம் நம் நண்பர்களிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவர்கள் நமக்கு ஹிதம் செய்பவர்கள். அதற்காக.
நாம் நம் மனைவியிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவள் நம் வாழ்வில் துணையாக இருக்கிறாள். நம் சுக துக்கங்களில் பங்கு கொள்கிறாள். நம் இஷ்டப்படியே பங்கு கொண்டு கீழ்படிந்து நடக்கிறாள். அதற்காக.
நாம் நமது உத்தியோகத்திலோ, தொழிலிலோ நமக்கு மேற்பதவியிலிருப்பவர்களிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவர்களால் நாம் ஊதியம் பெறுகிறோம். அதற்காக.
நாம் நமது வேலைக்காரர்களிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவர்கள் நம் குறிப்பறிந்து ஏவல் செய்ய வேண்டும். நம்மை ஏமாற்றாதிருக்க வேண்டும்;. அதற்காக.
இவ்விதம் நாம் பிhpயமாயிருக்கும் ஒவ்வொருவாpடமும் ஏன் பிhpயமாயிருக்கிறோம் என்றும், அவர்கள் ஏன் நம்மிடம் பிரியமயிருக்கிறார்கள் என்றும் மனத்தால் விசாரித்துப் பார்ப்போமானால், நமக்கு அவர்களிடம் கிடைக்கும் ஏதேனும் ஒன்றுக்காகவே பிhpயமாகயிருக்கிறோம். அவர்களும் நம்மால் தத்தமக்கு ஏற்படும் ஏதேனும் ஒரு நன்மையின் பொருட்டே நம்மிடம் பிரியமாயிருக்கிறார்கள் என்று தொடர்கிறது.
கடவுள் நம்மீது பிரியமாயிருக்கிறார். ஏன்? ………. ஏன்? ……. ஏன் தொpயவில்லை. நம்மால் கடவுளுக்க ஆகவேண்டியது ஒன்றுமில்லை. கடவுளுக்கு நாம் உணவளித்து வளர்க்க வேண்டியதில்லை. கடவுளே நம் அனைவரையும் உண்பிக்கிறார். நாம் கடவுளுக்கு உதவியாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. கடவுளே நம் அனைவருக்கும் எப்போதும் உதவி வருகிறார். நாம் கடவுளை காப்பாற்ற வேண்டியதில்லை. அவரே நம் அனைவரையும் காப்பாற்றுகிறார். கடவுளுக்குச் சுகத்தை ஏற்படுத்தி வைக்க நாம் யாரும் தேவையில்லை. அவரே நம் அனைவருக்கும் பற்பலவித சுகங்களையும் ஏற்படுத்தி வைக்கிறார் என்றால் பின் ஏன் நம்மீது பிரியமாயிருக்கிறார்?
ஏன் தெரியுமா? அது தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். மனிதன் காரியார்த்தமாய் பிரியம் காட்டுகிறான். அவன் பிரியம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு. கடவுள் காரணமின்றியே பிரியமாயிருக்கிறார். அது அவரது இயல்பு. அது தான் கடவுள் தன்மை - அருள் ஆகும்.
கடவுள் நம்மிடம் பிரியமாயிருக்கிறார். ஏனென்று ஆலோசித்தால் காரணமே கிடையாது. காரணமற்ற கருணை அது. எந்தப் பிரியம் காரணமற்றதாய், ஒரு பிரதிபலனையும் எதிர்பாராததாய் இருக்கிறதோ அதுதான் சாஸ்வதமாய் - நிலையுள்ளதாய் இருக்கும்.
நம்மால் நம் தாய் தந்தையருக்கு ஒன்றும் உதவியில்லையென்றால் நம்மைப் பெற்றோர் வெறுப்பது நிச்சயம்.
வாலிபம் கொஞ்சம் வர ஆரம்பித்தால் நம் பிள்ளையின் மனப்போக்கில் மாறுதல் தட்டுகிறது. துவறான வழிக்குத் திரும்புவோனாயின் நம் குலத்திற்கும் பழி சேருமே என்று அஞ்சி அவனது மனவேகங்களைத் தகுந்த வழியில் திருப்புவதற்கு நாம் கொஞ்சம் புத்தி கூறினால் போதும். நவீன நாட்டமும், சுதந்திர விறுவிறுப்பும் துடிக்கும் அவன் உள்ளத்தில், சொந்த தாய் தந்தையரே நஞ்சென ஆகின்றனர். பெற்றோரிடம் அவன் இதுவரை காட்டிவந்த விருப்பெல்லாம் வெறுப்பாய் மாறுகிறது.
பிதுரார்ஜித (தந்தையின் வழி வந்த) சொத்தில் அல்லது நம் வறுமைக் காலத்தில் உறவினர் பொருளுதவி அளிக்காவிடிலோ, நம் பந்துத்வ பாசமெல்லாம் பறந்தே போய்விடும்.
உறவினரால் நம் செல்வத்திற்கு செலவு நேர்ந்தாலோ அல்லது நம் வறுமைக்காலத்தில் உறவினர்கள் பொருளுதவி அளிக்காவிடிலோ, நம் பந்துத்வ பாசமெல்லாம் பறந்தே போய்விடும்.
பருகும் நீரற்று காய்ந்து வற்றினால் பறவைகளுங்கூட அக் குளத்தைப் பாராதது போல், கைப்பொருளற்றால் நண்பர்களின் பிரியமும் நழுவிப் போய்விடும்.
நம் மனைவி நம் கருத்துக்கு மாறி நடந்தாலோ, அல்லது மக்கட் போpல்லா மலடியானாலோ, அல்லது பிணியுற்றாலோ அல்லது நம்மைவிட சாஸ்வதமான ஈஸ்வரனிடம் பிhpயம் கொண்டு பக்திவழி பற்றினாலோ நமக்கு மனைவியின் பாலுள்ள அன்பு, ஆசை எல்லாம் அடியோடு போய்விடும்.
நாம் வறுமையுற்றும், பிணி, நரையடைந்தும் போனால் மனைவிக்கு நம்மேலிருந்த பிரியத்தில் மாசு படரும்.
இவ்விதம் உலகினாpடையே காணப்படும் எல்லா வித பிரியமும் ஏதேனும் ஒரு காரியத்தைக் கருதியே உண்டாவதால் அது நிலையற்று மறைந்து விடுகிறது. ஆனால் கடவுளுக்கு நம்மீது உள்ள பிரியம் - அருள் - காரணமற்ற கருணையாதலால் அது எப்போதும் நீங்காத பிhpயமாகிவிடுகிறது.
கடவுள் நம்மீது பிரியமாயிருக்கிறார். ஆனால் நாம் அவர் மீது பிரியமாயிருக்கிறோமா? அது தான் சந்தேகம். நம்மை ஒரு காரியத்திற்கு மட்டும் நேசிக்கும் உலகோரிடம் பிரியமாயிருக்க முந்திக்கொண்டோடும் மனம் நம்மிடம் காரியமின்றி நமக்குக் கொடுப்பவாpடம் நாட்டம் கொள்வதில்லை. நாம் உலகை நேசிப்பதற்கும், கடவுளை நேசிக்க வேண்டியதற்கும் உள்ள வேற்றுமை இதுவாகும். அறிவு தெளிவு அடைந்தால் இவ்விரண்டில் எதை மனிதன் உண்மையாகப் பிhpயப்படுவான்?
நம் பிரியத்தை வீணாக்காமல் இருக்க வேண்டுமானால் அதை நம்மிடம் காரணமின்றிப் பிரியமாயிருக்கும் கடவுளின் பிரியத்திற்குப் பிரதிப் பிரியமாகச் செலுத்துவதே சாரியானதாகும். நாம் கடவுளிடம் கொள்ளும் இந்தப் பிரதிப் பிரியமே பக்தி. நன்றாக ஆலோசிப்போமாயின் நம்மிடம் காரணமற்ற அன்பு கொள்ளும் கடவுளிடம் நாமும் காரணமற்ற, ஒரு காரியத்தையும் எதிர்பாராத - பிரியம் காட்ட வேண்டியதே கடமை என்பதும் தொரிய வரும். அது முடியாவிடிலும் அவர் நமக்கு எல்லாம் தந்தருளுகின்ற காரியார்த்தமாகவாவது நம் ரரூகாரிடம் நாம் பிரியமாயிருக்க வேண்டாமா? காமிய பக்தியாவது வேண்டாமா? நம்மையே அளித்து பிறது அந்த நமக்கு வேண்டிய எல்லா சுகத்தையும் அளிக்கும் கடவுளிடம் நாம் பிரியமாயிருக்கிறோம் என்றால் அதில் வியப்பென்ன? நம் பிரியத்திற்கு மதிப்பென்ன? அதே சமயம் நாம் நம் பரம ரரூகராகிய அவரை மறந்து உலகை நேசித்துத் திரியும் போது கூட நம்மிடம் உண்மை இன்பு அருள்வதற்காகக் குருவடிவில் வருகிறார் கடவுள் என்றால், கடவுளின் பிரியமாகிய அருளுக்கு மதிப்பு எவ்வளவு? பக்தி செய்யும் பக்தோருக்கும் அருள் செய்வோனின் அருளுக்கும் எவ்வளவு புகழரம்? சற்குருவிற்கு நம்மிடம் உள்ள பிரியம் அருள். நமக்குக் குருவிடம் உள்ள பிரியம் பக்தி. அருளுக்கு முன்னே பக்தி எம்மாத்திரம்? என்றால் அந்த பக்தியும் கூட இல்லாதாரின் புத்தி எம்மாத்திரம்? அன்பர்கள் ஆலோசித்து அறிக.

- AANMEKAN's blog
- Login or register to post comments
- 308 reads
கருத்துகள்
சற்குருவிற்கு நம்மிடம் உள்ள
சற்குருவிற்கு நம்மிடம் உள்ள பிரியம் அருள். நமக்குக் குருவிடம் உள்ள பிரியம் பக்தி. அருளுக்கு முன்னே பக்தி எம்மாத்திரம்? என்றால் அந்த பக்தியும் கூட இல்லாதாரின் புத்தி எம்மாத்திரம்?
அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
தன்னலம் கருதாத பக்தியும்,
தன்னலம் கருதாத பக்தியும், பலனை எதிர்பாராத பிரியமும் தான் எல்லோருக்கும் வேண்டும்.
அப்போ எல்லாப்பிரியமும் பலனை
அப்போ எல்லாப்பிரியமும் பலனை எதிர் பார்த்து தானா?
அப்போ சுயநலம் இல்லா அன்பு இல்லையா??
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
தன்னலம் கருதாத
தன்னலம் கருதாத பக்தியும்///தன்னலம் கருதாதவருக்கு பக்தி தேவையில்லை,
பலனை எதிர்பாராத பிரியமும்///பலனை எதிர்பாகத இடத்து பிரியம் ஏது,,
- உண்மை
தோழி அப்போது எல்லாமே தன்னலம்
தோழி அப்போது எல்லாமே தன்னலம் , எதிர்பார்ப்பு என்ற இரண்டுக்குள் அடங்கி விடுமே??
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/







