வணக்கம் தலிவா...இனிமே வாராவாரம் இந்த “நொறுக்குத் தீனி” பகுதி இடம்பெறும். தலைப்புக்கு ஏத்த மாதிரியே எல்லா சமாச்சாரங்களை பத்தியும் இதுல நான் சுருக்கமா அதேநேரம் நறுக்கு தெரிச்சா மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.வழக்கம் போல படிச்சிட்டு உங்க நிறை,குறை கருத்துகளை சொல்லுங்க...
* தெனமும் கல்யாணம்
நேத்திக்கு (18-ஆம் தேதி) களவாணி படத்துக்குப் பொறவு அந்தப் படத்தோட ஹீரோ விமலும்,தயாரிப்பாளர் நஷீரும் மறுபடியும் சேர்ந்த “எத்தன்” படத்தோட ஆடியோ ரிலீஸ் சத்யம் தியேட்டர்ல நடந்திச்சி. அதுக்குப் பின்னாடி ஒரு நட்சத்திர ஓட்டல்ல இந்தப் படத்தோட பிரஸ்மீட்.
ஹீரோ விமல் மைக்கை பிடிச்ச உடனே முதல்ல உங்ககிட்ட நான் மன்னிப்பு கேக்குறேன். என்னோட கல்யாணம் உங்க முன்னாடி நடக்கணும்னு ஆசைப்பட்டேன்.ஆனா அது முடியாமப் போச்சி.உங்க முன்னாடி ஒருதடவை நான் மாலை மாத்திக்கிறேன்,என்றவர் இப்படித்தான் கமலா தியேட்டருக்கு படம் பாக்கப்போனேன் அங்க சிதம்பரம் ஐய்யா (தியேட்டர் ஓனர்) என்னையும் என் பொண்டாட் டியையும் மாலை மாத்திக்க சொன்னார்.
அதே மாதிரி எஸ்.பி.முத்துராமன் சாரை பாக்கப்போனேன்.அவரும் அவரு முன்னாடி மாலை மாத்திக்க சொன்னாரு...இப்படி யார்கிட்டேயும் சொல்லாம நான் கல்யாணம் பண்ணினதுனால இப்போ தினமும் ஒரு தடவை கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கேன்.என்று சொல்லி முடிக்க கூட்டத்தில் ஒரே சிரிப்பு சத்தம்.
........................................................................
* எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...
வடிவேலு பாணியில சொல்லப்போனா எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒருவரைத்தான் நாம இப்பவும் பிரதமரா வெச்சி வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கோம்.ஒரு மனுஷன் ஒருதடவை அசிங்கப்பட்டான்னா அடுத்த தடவை ச்சே.. போன தடவ தான் அசிங்கப் பட்டோம்.இந்த தடவை அசிங்கப் படக்கூடாதுன்னு தான் நெனைப்பாய்ங்க...ஆனா நம்ம பிரதமர் அப்படியெல்லாம் இல்ல,உச்சநீதிமன்றம் எவ்ளோ திட்டினாலும் கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம நாங்கெல்லாம் அடி வாங்காத எடமே...கிடையாது,”எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்”கிற கதையா எதைப்பத்தி கேட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி மழுப்புறதையே வாடிக்கையா வெச்சிக்கிட்டிருக்கார்.
“ஸார்...என்ன ஸார்...உங்க துறையில உள்ளவங்க இவ்ளோ ஊழல் பண்ணிருக்காங்க இதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு கேட்டா “அப்டியா...எனக்கு எதுவுமே தெரியாதே..? ன்னு ரொம்ப கூலா சொல்லிட்டி கெளம்பிடுறாரு...நேத்திக்கு கூட அணுசக்தி ஒப்பந்தத்துல மெஜாரிட்டி வேணும்கிறதுக்காக சகட்டுமேனிக்கு எல்லா கட்சி எம்.பி.க்களுக்கும் காசை வாரி இறைக்கிறதா விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிட,கொதிச்சுப்போன எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை வழக்கம் போல நடத்த விடல...
சரி இந்த குற்றச்சாட்டைப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு பிரதமர்கிட்ட கேட்டா அவரும் வழக்கம் போல இதப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டார்.அதுவுமில்லாம முடிஞ்சி போன ஒரு விஷயத்தை மறுபடியும் கிளர்றது ரொம்ப வருத்தமளிக்குதுன்னு சொல்றார்.அதாவது நாங்க பணமே கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புல ஜெயிச்சிருந்தாலும் அது பழைய விஷயம் அதனால முடிஞ்சி போன அதை நீங்க கிளறக்கூடாதுன்னு சொல்றார். இதெப்படி இருக்கு? இப்படிப்பட்டவங்களை எல்லாம் ஆட்சியில உட்கார வெச்சி அழகு பாக்குற நம்ம நாட்டு மக்களை உச்சிமோந்துல பாராட்டணும்.
........................................................
* எங்க போச்சி ஒற்றுமை?
வரவர மக்கள்கிட்ட ஒற்றுமையா இருக்குற நல்ல பழக்கம் குறைஞ்சிகிட்டே வருது. ஒற்றுமைன்னா கிலோ என்ன விலைன்னு கேக்குறவங்க தான் தமிழர்கள்னு சொன்னா தப்பே கிடையாது.
ஒற்றுமையா இருந்தா தமிழக மீனவர்கள் சிங்கள படையினரால் கொல்லப்படுறதை பாத்துக்கிட்டிருப்போமா..? இல்லேன்னா மத்தியில ஆட்சி நடத்துறவங்களோட தொடர்பும் வெச்சிக்கிட்டு ஈழத்துல நம்மோட உறவுகள் சாகுறதை தட்டி கேட்க முடியாத துப்புக் கெட்டவங்களா இருப்போமா..? சரி பல கோடிகள் இருக்குற நம்மகிட்ட மட்டும் தான் ஒத்துமை இல்லேன்னா எண்ணிக்கையில குறைவா இருக்குற இந்த திருநங்கைகள் கிட்டேயும் ஒத்துமை இல்லாமப் போச்சு.
ஒரு பக்கம் ஒரு திருநங்கைகள் குழு “தி.மு.க கட்சிக்கு தங்களோட ஆதரவும்,ஓட்டும் உண்டுன்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் குடுக்க இன்னொரு பக்கம் திருநங்கை ரோஸ் தே.மு.தி.க கட்சியில போயி இணைஞ்சி ஒரு தொகுதியில போட்டியிடப்போறதா சொல்லியிருக்காங்க,பாருங்க குறைவான எண்ணிகையில இருக்குற இவங்களுக்குள்ளேயே ஒத்துமை இல்லாமப் போச்சி. இப்படி நாம ஒத்துமையா இல்லாதது தான் இந்த மக்களை ஏமாத்தி சம்பாதிக்கிற அரசியல்வாதிகளுக்கு ரொம்ப வசதியாப் போச்சி.என்னத்த சொல்ல...எப்போ நாமெல்லாம் திருந்தப் போறோம்.
.......................................................................
* ஜப்பானியர்களின் தன்னம்பிக்கை!
உண்மையிலேயே ஜப்பானிய மக்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளவங்க தான் என்பதை மறுபடியும் நிரூபிச்சிட்டாங்க..
பல வருஷங்களுக்கு முன்னாடி ஹிரோஷிமா நாகசாகின்னு ரெண்டு நகரங்கள் உருக்குலைஞ்சப்போ ஜப்பான் அவ்ளோ தான் இதோட அந்த நாடு அழிஞ்சி போச்சின்னு சொன்னவங்களுக்கு மத்தியில மறுபடியும் உலகமே வியக்கிற அளவுக்கு தங்களோட உழைப்பால நாட்டை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தாங்க அங்க உள்ள மக்கள். இப்பவும் அவங்களோட தொழில்நுட்பத்துக்கு முன்னாடி பெரிய அண்ணன் அமெரிக்கா கூட பக்கத்துல நெருங்க முடியல.
அந்தளவுக்கு உழைப்புக்கு உதாரணமா ஜப்பான் மக்களை சொல்லலாம்.அதேநேரம் ஜப்பான் நாட்டுக்கு அடிக்கடி இயற்கை மூலமா இடையூறுகள் வர்றது ரொம்ப சாதாரணம்.இப்போ கூட சுனாமி,பூகம்பம் ரெண்டாலேயும் பாதிக்கப்பட்டப்ப அதை டி.வியில பாத்த நமக்கே கண் ஓரத்துல கொஞ்சம் கண்ணீர் வந்தது என்னவோ உண்மை தான்.ஆனா டி.வி யில நாம ஜப்பான் மக்கள் அங்கேயும்,இங்கேயும் ஓடுறதை பாத்தோம்,எப்படி சுனாமி தாக்கிச்சி,பூகம்பம் வந்தப்போ உங்க மனநிலை எப்படி இருந்துச்சின்னு அவங்க கிட்ட கேட்டப்போ யாருமே கண்ணீர் விட்டு கதறி அழுது பேசினா மாதிரியே தெரியல.
ஒருத்தர் அவரோட தோட்டத்துல சுனாமி வந்தப்போ ஏற்பட்ட பாதிப்பா பத்தி டிவியில சொன்னப்போ கூட அவர் முகத்துல கொஞ்சம் கூட வருத்தத்தை பார்க்க முடியல,கண்ணீர் விடல. இப்படி ஜப்பானிய மக்களோட மன தைரியத்தையும், போனா என்ன மறுபடியும் அதை நாம சம்பாதிக்க முடியும் இல்லேன்னா அதை உருவாக்க முடியும்கிற அவங்களோட தன்னம்பிக்கையும் எந்த நாட்டு மக்களிடமும் பாக்க முடியாது தான். அவங்களோட தன்னம்பிக்கை கண்டிப்பா அவங்க நாட்டை இயற்கையோட கோபத்துல இருந்து மீட்டுத்தரும்.
................................................................
* ஐ – போன் வேஸ்ட்,ஆன்ட்ராய்டு பெஸ்ட்
பெரிய,பெரிய கம்பெனிகளோட தயாரிப்புகளை வாங்குறது என்னவோ நமக்கு அதுல ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்யுது.ஆனா அதே நேரம் புதுசா ஒரு நிறுவனம் நாம குடுக்குற காசுக்கு தகுந்த வசதிகள் உள்ள ஒரு பொருளை விற்பனைக்கு கொண்டு வந்தா நம்ம மக்கள் அதை வாங்கி பயன்படுத்துறதுக்கு ரொம்ப யோசிப்பாங்க.
சோனி,நோக்கியா போன்ற நிறுவனங்கள் எல்லாம் இப்படித்தான் தங்களோட பேரை மட்டும் வெச்சிக்கிட்டு வசதிகள் குறைவான உள்ள தயாரிப்புகளை அதிக விலைக்கு நம்மகிட்ட குடுக்குறாங்க.உதாரணமா நோக்கியா 10 ஆயிரம் ரூபாய்க்கு லோரு மொபைலை குடுக்குதுன்னா அதை விட ஆயிரம் ரூபாய் கம்மியா சாம்சங் குடுக்குற ஒரு மொபைல்ல தொழில்நுட்ப வசதிகள் அதிகமா இருக்கும். இந்த ரகசியம் நம்மள்ல நெறைய பேருக்கு தெரியாது.
பெரிய நிறுவனங்கள் எல்லாமே இப்படித்தான் அவங்களோட பாப்புலரான பேரை வெச்சிக்கிட்டு நம்மகிட்ட பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க. அந்த வரிசையில பணக்காரர்களுக்காகவே தயாரிப்புகளை தர்ற அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் அதோட தயாரிப்புகள் எல்லாத்தையும் அதிக விலைக்கு தான் வெச்சி விக்கும்.காரணம் என்னவோ அந்த நிறுவனத்தோட தயாரிப்பை நாம வெச்சிருந்தா அது நமக்கு கவுரவம் மாதிரின்னு நமக்குள்ள ஒரு எண்ணத்தை உருவாக்கி வெச்சிருந்த அந்த நிறுவனத்தோட வியாபாரத் தந்திரம் தான்.
இப்படிப்பட்ட ஆப்பிளை காலி பண்ணுறதுக்குன்னே கூகிள் நிறுவனம் கண்டுபிடிச்சி கொண்டு வந்தது தான் ஆன்ட்ராய்டு ஓ.எஸ். ஒரு திறந்து விடப்பட்ட மென்பொருளான இந்த மென்பொருள் உள்ள மொபைல் உண்மையிலேயே ஒரு சூப்பரான மொபைல் தான் போங்க.சொல்லப்போனா இந்த மென்பொருள் உள்ள மொபைலை நாம எப்படி வேணாலும் யூஸ் பண்ணலாம்.நாமலே தனியா ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி பயன்படுத்த முடியும்.பெரும்பாலும் இந்த வகையான மொபைல்கள் பிராப்ளம் ஆனதே கிடையாது.
இந்த மென்பொருள் உள்ள மொபைல் பிரௌசர் ரொம்ப வேகமா இருக்கும்.அதாவது 40,000 ரூபாய் விலைக்கு விக்கிற ஐ-போனை விடவும் வெறும் 7000 ரூபாய்க்கே கெடைக்கிற இந்த ஆன்ட்ராய்டு மென்பொருள் உள்ள மொபைலோட பிரௌசரோட வேகம் 80 சதவீதம் அதிகமாம். அதேமாதிரி வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குமாம். மொபைல்ல உள்ள பிரச்சனையே இணையவேகம் தான். அந்த குறையை தீர்க்குறதுல கூகுள் தான் முதல்ல நிக்குதாம்.
கனடாவை சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் நிறுவனம் தான் இந்த ஆய்வை சமீபத்துல நடத்தி இப்படி ஒரு ரிசல்டை குடுத்துருக்காங்க. அதுவும் சரிதாங்க..வெறும் ஆயிரம் ரூபாய் குடுத்து வாங்குற போன்ல கூட எப்.எம் ரேடியோ இருக்கு. ஆனா நாப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் விக்குற ஆப்பிள் ஐ-போன்ல எப்.எம் கெடையாது.எதையுமே வாங்குறதுக்கு முன்னாடி ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிங்க...(குறிப்பா பிரபல கம்பனிகளோட தயாரிப்புகளை வாங்குறப்போ இது ரொம்ப முக்கியம்.)
...............................................................................
* இளையராஜாவுக்கு என்னாச்சி?
அழகர்சாமியின்குதிரை படத்தோட பிரஸ்-மீட்ல அந்தப் படத்தோட ஹீரோ அப்புக்குட்டி பேசிக்கிட்டிருக்கும் போது வேகமா வந்தாரு இளையராஜா...வந்தவரை உடனே மைக் முன்னால பேச அழைக்க மனுஷர் பேசினது எல்லோருக்குமே ஒரே குழப்பம்.
அந்தப் படத்தோட ஹீரோ அப்புக்குட்டியை பாத்து “நீ ஹீரோவா இந்தப் படத்துல நடிச்சதுனாலா நீ சூப்பர்ஸ்டாருன்னு அர்த்தம் கெடையாது.இங்க சூப்பர் ஸ்டார் ஒருத்தர் தான். அதேநேரம் சூப்பர் ஸ்டார் இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சா கண்டிப்பா அது சரியா இருக்காது.இந்தக் கதைக்கு நீ தான் ஹீரோவா நடிக்க முடியும் அவ்ளோ தான்.
நாடு எங்க போய்க்கிட்டிருக்கு.என்ன நடக்குது இங்க..?எல்லாமே இறைவன் தீர்மானிக்கிறது தான். அவனுக்கு முன்னாடி நாம எல்லாம் வெறும் தூசுதான்.இறைவன் நினைப்பான்,அவன் நினைக்கணும். அவன் தீர்மானிக்கிறது தான்.நாம அவனுக்கு முன்னாடி என்ன பண்ண முடியும்.அவன் லேசா கண்ணா காட்டினாம்னா அவ்ளோ தான்.
இவங்க கூட எதுக்கு நீங்க?ன்னு இங்க இருக்குற ஒருத்தர் கேட்டார். நான் இப்பவும் புதுமுகம் தான். இப்பவும் நான் கத்துக்கிட்டு தான் இருக்கேன். என்னோட எல்லாப்படமும் எனக்கு முதல்படம் மாதிரி தான்.”இந்தப் படத்தோட டைட்டில் இசையை நீங்க கேளுங்க...கேட்டுப்பாருங்க...உங்க கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரலேன்னா நான் இசையமைக்கிறதையே விட்டுடுறேன்”என்று உணர்ச்சிவசப்பட்டவரிடம் ஒரு நிருபர் “ இந்தப் படத்துக்கு ஹங்கேரி இசையை பயன்படுத்தி இருக்கீங்களாமே? அதப்பத்தி சொல்லுங்கன்னு கேட்க அதுக்கு இளையராஜா “நான் அதை பத்தி விளக்கமா சொன்னா அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு ஞானம் உங்களுக்கு இருக்கணும்.அது உங்களுக்கு இருக்கான்னு ? கேட்டு கடுப்பேத்த தொடர்ந்து கேள்விகள் கேக்காமலேயே பிரஸ்மீட் முடிஞ்சது. (அதுல ஒருத்தர் அன்னக்கிளி படம் வந்தப்போ இவரு இப்படி பேசியிருக்கணும் என்றார் அதுவும் சரிதான்.)
................................................................
* அடேங்கப்பா...ரஜினியோட மனிதாபிமானம்?
உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிதுங்க ரஜினியோட மனிதாபிமானம்.அப்புறம் என்னங்க...கூப்புடுற தூரத்துல இருக்குற நாடான இலங்கையில நம்ம தமிழ்மக்களை சிங்கள அரசு கொன்னுகுவிச்சப்போ வராத அனுதாபம்,போரால பாதிக்கப்பட்டு ஒருவேளை சோத்துக்கு கஷ்டப்பட்டு நடுத்தெருவுல பட்டினியா,அனாதையா நின்னப்ப வராத இரக்கமும், அனுதாபமும் எங்கயோ இருக்குற ஜப்பான்ல சுனாமி வந்த உடனே ரஜினிக்கு வந்திருக்குறது உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிற சமாச்சாரம் தான்.
ஜப்பான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி அனுதாபம் தெரிவிக்கிற ரஜினி போரை நிறுத்தச் சொல்லி ஒரு தடவையாவது இங்க இருக்குற நம்ம மத்திய அரசுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருப்பாரா..? என்ன பண்றது நாளைக்கே ரஜினியோட அடுத்த படம் நல்லா ஓடனும்னு கோவில்ல காவடி தூக்குற ஆளுங்க தானே நாம..? இளிச்சவாயன் தமிழன் தானே..?
(2 votes)
http://oruvaarthai.blogspot.com/2011/03/19032011.html
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 374 reads
கருத்துகள்
என்னன்னு தெரியல இப்ப இளையராசா
Submitted by vinoth on சனி, 19/03/2011 - 11:16pm.
என்னன்னு தெரியல
இப்ப இளையராசா வுக்கு கொஞ்சம் அதிகம் தான்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)
Submitted by kumaran on ஞாயிறு, 20/03/2011 - 11:56am.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.















