உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
1.தமிழில் படிக்கப் போகிறவர்களுக்கு இனி அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
(தமிழில் படித்து வேலை வாய்ப்பே இல்லாமல் இருப்பவர்களின் நிலை? )
2.பள்ளி,கல்லூரி பல்கலைக் கழக பாடத்திட்டங்களில், 'தமிழ்ச்செம்மொழி' அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம் பெறும்
3.மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்
(மற்ற மாநிலத்தவரும் தங்கள் மொழியை ஆட்சி மொழியாக்க குரல் எழுப்பினால்? )
4.சென்னை உயர் நீதி மன்றத்தில், தமிழை பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
5.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும்,குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும்.
6.இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.
7.சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவர்க்கு 'கணியன் பூங்குன்றனார் 'விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்
8.தமிழக அரசின் சார்பில்,ஐந்திணை நிலவகைகளில் 'பாரம்பரிய மரபணு பூங்காக்கள்' அமைக்கப்படும்.
9.கோவையில் 'செம்மொழிப்பூங்கா' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை போக்க ரூ.100கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
(2011ல் திமுக ஆட்சி அமைந்தால் )
10.குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
- kumaran's blog
- Login or register to post comments
- 489 reads
கருத்துகள்
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










