oruvaarthai's படம்

ணேசனை பாத்து மூனு மாசத்துக்கு மேல ஆச்சி..,

எங்க போனா..? என்ன பண்ணுறான்..? ஒன்னுமே தெரியல

அவனோட வீட்டுல ஒரே பிரச்சனை,அவனோட அப்பாவ அவ அம்மாக்காரி
வரிஞ்சி கட்டிக்கிட்டு திட்டிகிட்டு இருந்தா...!

எல்லாம் உங்களால் தான் ஒத்தைக்கோர் புள்ளையை நான் தவமிருந்து பெத்து வெச்சேன்.அவ இங்க இருக்குறது உங்களுக்கு புடிக்கல..? பெத்த வயிறு பத்திகிட்டு எரிந்தது...

எப்போ பாத்தாலும் அவன திட்டி தீக்குறதே உங்க வேலை, உங்க தொந்தரவு தாங்காம தான் அவன் வீட்ட விட்டு எங்கயோ ஓடிப்போயிட்டான்.

என்னைக்காவது ஒரு பொறுப்பான அப்பாவா நீங்க இருந்திருக்கீங்களா..?
இல்லேன்னா பாசமாத்தான் அவன்கிட்ட ஒரு ரெண்டு வார்த்த பேசிருப்பீங்களா..?

அய்யோ எம்புள்ளையை வீட்ட விட்டே தொறத்திட்டீங்களே..? நீங்கல்லாம் ஒரு அப்பாவா..?

பெத்த மனம் சலிக்காமல் புலம்பியது..

பொண்டாட்டி திட்டி தீர்ப்பதை எந்த சலனமும் இல்லாமல் காதுகளில் வாங்கி போட்டுக் கொண்டிருந்தார் மூர்த்தி. அது மூனு மாசமா அவருக்கு பழக்கமாகியிருந்தது.

மகன் எங்கே போனான்

"அப்பா...எனக்கு ராணுவத்துல சேரணும்னு சின்ன வயசிலிருந்தே ஆச...அதனால நான் அங்க போறேன்.அம்மாவுக்கு தெரிஞ்சா ஒரே ஒரு புள்ளைன்னு என்ன  உட மாட்டாங்க.."

அதனால எப்படியாவது அம்மாவை நீங்க தான் சமாளிக்கணும்.கண்டிப்பா நான் ஒரு ராணுவ வீரனாத் தான் உங்க முன்னாடி வந்து நிப்பேன்."

மகன் எழுதி வைத்த 'கடிதரகசியம்' அவருக்கு மட்டுமே தெரிந்தது.

0
Your rating: None
http://oruvaarthai.blogspot.com/2010/05/blog-post_8802.html

கருத்துகள்

Ragavan's படம்

எல்லாரும் பெண்கள் தான்


எல்லாரும் பெண்கள் தான் சென்ட்டிமென்ட்டல்ன்னு நினைச்சிட்டு இருக்கோம்...
உண்மையில் ஆண்களுக்குதான் சென்ட்டிமென்ட் அதிகம்... பட் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வது இல்லை....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.