kumaran's படம்

நடுநிசி நாய்கள்-விமர்சனம்
நடுநிசி நாய்கள்-விமர்சனம்
நடுநிசி நாய்கள்-விமர்சனம்

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு கௌதம் மேனனிடமிருந்து வந்திருக்கும் க்ரைம் ஸ்டோரி.(உண்மை கதை என்கிறார்கள்)

சிவப்பு ரோஜாக்கள் நினைவுக்கு வருகிறது.

கதை; தகப்பனால் அறியாத வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் வீரா மனச்சிதைவு அடைகிறான். அவனை பக்கத்துவீட்டு பெண்மணி மீனாட்சி காப்பாற்றி வளர்க்கிறார்.வாலிபவயதில் வீரா பாலியல் சைக்கோவாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.அதன் விளைவு அவனை வளர்த்த மீனாட்சி அம்மாவின் மீதே காமம் கொண்டு அவளை அனுபவிக்கிறான். மீனாட்சி அம்மாவை திருமணம் செய்துகொள்ளும் அவள் நண்பனை கொல்கிறான்.அந்த மோதலில் மீனாட்சி அம்மாள் உடல் கருகி சில நாட்களில் கோர முகத்துடன் இறக்கிறாள். தொடர்ச்சியாக சென்னையில் பல பெண்கள் அவனுக்கு இரையாகிறார்கள்.அதில் கடைசியாக வருபவர் சமீரா ரெட்டி. அவர் கதி என்ன ஆனது என்பதை வெண்திரையில் காண்க.

சைக்கோவாக வீரா பாத்திரத்தில் வீரா நடித்திருக்கிறார்.அருமை.

அவருக்கு இணையாக கலக்கியிருப்பவர் படத்தின் முதல் நாயகியான ஸ்வப்னா ஆப்ரஹாம்.(இவர் கேரளாவைச் சார்ந்தவர்.பாடகி) மீனாட்சி அம்மாள் பாத்திரத்துக்கு ஏற்ற இளம் வயது ஆண்ட்டியாக நடித்திருக்கிறார்.முகம் கருகிய நிலையில் திகிலூட்டுகிறார்.

சுகன்யாவாக சமீரா ரெட்டி.இடைவேளையில்இருந்து வருகிறார்.வீராவிடம் நிறைய அடி வாங்குகிறார்.அடிக்கிறார்.அழுகிறார். அளவுக்கு அதிகமாக அழுதுகொண்டே இருப்பதால் நமக்கு எரிச்சல் வருகிறது.

புதுமுகம் தேவா-விஜய் என்கிற காவலராக வந்து படத்தை முடித்து வைக்கிறார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு திகிலுக்கு துணை நிற்கிறது.

இசை பாடல்கள் இல்லை.

சைக்கோ,பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுபவர்கள்,கொலைகாரன்,கொள்ளைக்காரன் இவர்களுக்கெல்லாம் பெண்கள் எளிதில் கிடைத்துவிடுகிறார்கள் அல்லது போய் சிக்கிக் கொள்கிறார்கள். Smile நேர்மையாக காதலிக்க விரும்புபவர்களுக்கும் கல்யாணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கும்தான் எளிதில் பெண்கள் கிடைப்பதில்லை. Smile

இண்டர்நெட் ஆண்-பெண் நட்பில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதையும் படத்தின் இடையே இயக்குநர் கையாண்டிருக்கிறார். பல இடங்களில் இலைமறையாக நடந்துகொண்டிருக்கிற சில பாலியல் செயல்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதால் நிறைய கண்டனங்களும் எதிர்விமர்சனங்களும் நிறைய கிடைக்கும். Smile

இந்த ஆண்டின் மற்றுமொரு க்ரைம் திரில்லர். Clap

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

கருத்துகள்

sugiri's படம்

"சைக்கோ,பல பெண்களை திருமணம்


2

"சைக்கோ,பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுபவர்கள்,கொலைகாரன்,கொள்ளைக்காரன் இவர்களுக்கெல்லாம் பெண்கள் எளிதில் கிடைத்துவிடுகிறார்கள் அல்லது போய் சிக்கிக் கொள்கிறார்கள். நேர்மையாக காதலிக்கவும் கல்யாணம் செய்துகொள்ளவும்தான் பெண்கள் கிடைப்பதில்லை."

இது 'நிஜமாவே' உண்மையா!!?? Smile அப்படின்னா சிந்திக்க வேண்டும்

உணர்ச்சி வசப்படேல்! நல்லது நிச்சயம் நடக்கும்


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

பார்க்கலாம்.


Smile பார்க்கலாம்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


3

enjoying music

kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.