எங்க பாத்தாலும் கெளதம்மேனனோட நடுநிசி "நாய்கள்" படத்தை பத்தித்தான் ஒரே பேச்சி..."ச்சீ...""தூ.. "தூ"த்தெரி"...இப்படி என்னமோ பாக்காதத பாத்துட்டா மாதிரி நம்ம ஆளுங்க மூஞ்சியை சுளிக்கிறாங்க.
சரி நான் தெரியாமத்தான் கேக்குறேன், கெளதம்மேனன் என்ன உலகத்துல நடக்காததையா சொல்லிட்டாரு இல்லியே..?உண்மையில நடந்த அக்கிரமத்தை தானே படத்துல வெளிச்சம் போட்டு காட்டியிருக்காரு...அப்புறம் எங்க கூடி வருது இந்த முகசுளிப்பும்,காரி துப்புற கெட்ட பழக்கமும்...
* ஏழு பசங்கள்ல ஒரு பையன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவுறான்னு உலக சுகாதார நிறுவனம் சொல்லிருக்கு.
* பெண் குழந்தைகளுக்கு நிகர ஆம்பள பசங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவுறாங்கன்னு நம்ம கவர்மெண்ட் சொல்லிருக்கு.
இதுல காரித்துப்புற கனவான்கள் கண்ண தொறந்து வெச்சி யோசிக்க வேண்டிய விஷயம் இன்னொன்னு என்னன்னா, குழந்தைங்க மேல நடத்தப்படுற இந்த மாதிரி பாலியல் அக்கிரமங்களை தைரியமா பெத்தவங்க வெளிஉலகத்துக்கு சொல்றதில்ல,போலீஸ் ஸ்டேஷன்ல போயி கம்ப்ளைண்ட்டா பதிவு பண்ணுறதுமில்லைன்னு.அதனாலதான் குழந்தைங்க மேலான அத்துமீறல்கள் அதிகரிச்சிக்கிட்டே வருது. இதுக்கு உங்க மூஞ்சியை எந்த செவுத்துல போயி தேச்சுப்பீங்க...
என்ன இருந்தாலும் ஒரு அப்பனே மகனைப் போயி...? பெத்த அம்மா ஸ்தானத்துல இருக்குற ஒரு பொண்ணை வளர்த்த பையனே வலுக்கட்டாயமா...?...?...?" எங்க நடக்குதுன்னு வெள்ளந்தியா சில பேர் கேக்குறாங்க...
என்ன பண்றது ஒரு ஓசி பேப்பரை ஒன்பது பேர் சுத்தி நின்னு படிக்கிற ஜனங்க தான நாம...அப்புறம் எங்க கூடி நாட்டுநடப்பு தெரியும்,அறிவு வளரும்.அதிலேயும் சிலபேர் "சரி, எங்காவது ஒரு இடத்துல நடக்கலாம் அதுக்காக அதப்போயி படமா எடுக்கனுமா"ன்னு...வியாக்கியானம் பேசுறாங்க...
எடுக்கணும் ஸார்...எடுக்கணும் நாட்டுல என்னென்ன அட்டூழியங்கள் நடக்குது,என்னென்ன அக்கிரமங்கள் நடக்குதுன்னு வெளி உலகத்துக்கு தெரியணும் ஸார்...அப்பத்தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும்.
"குழந்தையும்,தெய்வமும் குணத்தால் ஒண்ணு"ன்னு பாடுற நம்ம நாட்டுல தான இந்த மாதிரி எல்லாம் நடக்குது. அப்புறம் எங்கிட்டு கூடி நாம வெட்டி நியாயம் பேசுறது. உண்மையிலேயே இதுவரைக்கும் இப்படி ஒரு அக்கிரமம் நடந்துக்கிட்டு வருதுன்னு அதை படமா இயக்கி வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டின கெளதம்மேனனை பாராட்டனுமே தவிர திட்டக்கூடாது. பாராட்டுகள் கெளதம்.
ரெண்டு ஆப்பாயில்,தொப்புள் குத்து பாட்டுகள்,அஞ்சி பைட் சீன்கள்,பத்து,பதினஞ்சி பஞ்ச் டயலாக்குகள்னு நம்ம ஆளுங்ககிட்ட இருக்குற ஒரே பிரச்சனை தெளிவில்லாத,சுயஅறிவு இல்லாத மானம் கெட்ட இன்னும் அப்படியே இருக்குற பழைய ரசனை தான் இந்த மாதிரி படங்களை எல்லாம் திட்ட வெக்கிது.
இதுவே இது ஒரு இங்கிலீஷ் படமா மட்டும் இருக்கட்டும்.உடனே நம்மாளுங்க அத உலகப்படம் ரேஞ்சுக்கு தலையில தூக்கி வெச்சி கொண்டாடுவாய்ங்க..."மச்சா...சான்ஸ்சே இல்லடா சும்மா மிரட்டிருக்காடா...ன்னு அவிங்க காலை கழுவி,கழுவி குடிப்பாங்க...அதுவே நம்மாளுங்க எடுக்கட்டும் ச்சீம்ம்பாங்க...இந்த அளவுல தான் நம்ம மக்களோட ரசனை இருக்கு.
JEEPERS CREEPERS,SAW,HOUSE OF WAX மாதிரி உள்ள இங்கிலீஷ்,சைனீஸ்,கொரியன் படங்கள்ல இல்லாத வண்புனர்ச்சியும், ரெத்தமுமா இந்த படத்துல இருக்கு சொல்லுங்க..? பொதுவா இங்கிலீஷ் படங்கள்ல ரெண்டாயிரத்துல உலகம் அழியப்போகுதுன்னும்,காட்சில்லா மாதிரி,அனகோண்டா மாதிரி மிருகங்களும்,பாம்புகளும் காட்ல இருந்திச்சி,இல்லேன்னா இருக்குன்னு தான் சொல்வாங்க..,
ஆனா கெளதம் நடந்த ஒரு இப்பவும் நடதுகிட்டு இருக்குற ஒரு அக்கிரமத்தை தான படமா எடுத்துருக்காரு இதுல என்ன தப்பு.அதுக்காக படத்த நான் ஆகா,ஓஹோன்னு புகழுறேன்னு நெனச்சிடாதீங்க...
ஹீரோ எப்போ பாத்தாலும் 'வளவள'ன்னு பேசிக்கிட்டே இருக்குறது, ரெண்டாவது பாதியில சமீரா ரெட்டியோட சீன்களை சும்மா பஞ்சு முட்டாய் கணக்கா ஜவ்வா இழுத்துருக்குறதுன்னு சில குறைகள் இருக்கு..ஆனா சொன்ன விஷயத்துல எந்த குறையும் இல்ல,அத சொன்னதால கெளதம் மேல எந்த தப்பும் இல்ல.
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 165 reads
கருத்துகள்
குழந்தைங்க மேல நடத்தப்படுற
குழந்தைங்க மேல நடத்தப்படுற இந்த மாதிரி பாலியல் அக்கிரமங்களை தைரியமா பெத்தவங்க வெளிஉலகத்துக்கு சொல்றதில்ல-சரிதான்.
ஆனால்,இந்த படத்தை பொறுத்தவரை வேலியே பயிரை மேய்ந்த கதையாக அப்பனாலேயே சிறுவன் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான்.அதான் மேட்டரு.அதன் பின்விளைவுகள்தான் கதை. 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.








