oruvaarthai's படம்

ருத்துவ காப்பீட்டுத் திட்டம்,108 இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ், 1ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி,இலவச கலர் டிவி,இலவச எரிவாயு இணைப்புன்னு கடந்த நாலரை வருஷமா எவ்ளவோ மக்கள் நலத் திட்டங்களை ஆளும் தி.மு.க கட்சி செஞ்சிருந்தாலும் தி.மு.க இந்த தேர்தல்ல தோத்துப் போறதுக்கான பலவீனமான காரணங்கள் நெறைய இருக்கு.அப்படிப்பட்ட பலவீனங்களைத் தான் நாம இப்போ பாக்கப்போறோம்...

விலைவாசி உயர்வு : போன நாலரை வருஷமா ஏழை,எளிய மக்களையும் நடுத்தர மக்களையும் பாதிக்கிற ஒரு கொடுமையான விஷயம் இந்த விலைவாசி உயர்வு தான். நல்ல அரிசி கிலோ எட்டு ரூபாய்ன்னு மார்க்கெட்டுல வித்த காலம் போயி, இப்போ அதே தரமுள்ள ஒரு கிலோ அரிசி முப்பது ரூபாயா வெல ஏறிப்போச்சி. இதனால அதிகம் பாதிக்கப்பட்டுக் கிட்டிருக்குறது ஏழை,எளிய மக்களும் நடுத்தர மக்களும் தான்.

என்னதான் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்ன்னு ரேஷன்கடையில அரசு வித்தாலும் ஒரே ஒரு அரசியல்வாதியாவது அந்த அரிசியை வாங்கி தங்களோட வீட்டுல பொங்கி சாப்புடுறாங்களான்னா..? இல்லேன்னு தான் சொல்லணும். அந்தளவுக்கு அந்த அரிசியோட தரம் இருக்குதாம். இந்த ஒத்த ரூபா அரிசி ஏழைங்க வயித்த நிரப்புதோ இல்லையோ அதை கள்ளச்சந்தையில விக்குற ரேஷன் அதிகாரிங்களோட கல்லாவை நல்லாவே நெறப்புது. 
அப்படியே ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கினாலும் அதை சமைச்சி சாப்புடுறதுக்கு காய்கறி,மளிகை சாமான்களோட விலை வானத்த முட்டுற அளவுக்கு இருக்கு. ஒருரூபாய் அரிசியை சமைச்சி சாப்புட மளிகை சாமானுக்கு 50 ரூபாய் செலவு பண்ண வேண்டியிருக்கு. விலைவாசி உயர்வை எப்போ கட்டுப்படுத்துவீங்க..?ன்னு பிரதமர்கிட்ட கேட்டா அவரு இந்தா.. இன்னும் ஒரு மாசத்துல கொறஞ்சிரும், இந்தா...இன்னும் ரெண்டு மாசத்துல கொறஞ்சிரும்னு ரெடிமேடா ஒரு பதிலை சொல்லி தன்னோட கையாலாகாத் தனத்தை காட்டுறாரு...மாநில அரசும் கூட இது சம்பந்தமா ரேஷன் கடையில சில மளிகை சாமான்களை பாக்கெட் போட்டு வித்தது தான் உச்சபட்ச நடவடிக்கை. நெலமை இப்படியே போச்சின்னா இனிமே ஒவ்வொருத்தர் வீட்டுலேயும் தெனமும் என்னென்ன சமைச்சி சாப்புடணும்னு கவர்மெண்டே மெனு குடுத்தாலும் ஆச்ச்சரியப்படுறதுக்கில்ல...
மின்வெட்டு : இந்த துறை அமைச்சர் ஆற்காட்டார் பொதுமேடையில பேசிக்கிட்டிருக்கும் போதே கரண்ட் கட்டாவுற நிலைமையில தான் இருக்கு தமிழகத்தோட மின்சார வளம். 
ஒரு தடவை கரண்ட்ஃபில்லை கட்டாம போனாலே உடனே அந்த வீட்டோட மின்சார இணைப்பை துண்டிக்கிறதுல முனைப்பு காட்டுற மின்சார வாரியம் தமிழகத்தோட கரண்ட் தட்டுப்பாட்டை தடுக்குறதுக்கும்,போதுமான மின்சாரத்தை மக்களுக்கு கொடுக்குறதுக்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் இதுவரைக்கும் எடுத்த மாதிரி தெரியல. 
ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி சென்னை மாதிரியான மெட்ரோ சிட்டிகள்ல தெனமும் ஒருமணி நேரம் கரண்ட் கட்டாச்சி.இப்போ தேர்தல் வர்றதுனால ஃகரண்ட் கட்டாவுறதில்ல.ஆனா இந்தியாவோட இதயமா இருக்குற கிராமங்கள்ல இப்பவும் மூணுமணி நேரம்,ரெண்டுமணி நேரம்னு மின்வெட்டு இருக்கு. போதாக்குறைக்கு தேர்தல் வேற ஏப்ரல்,மே ன்னு கோடைகாலத்துல வருது. இதுவரைக்கும் இம்மி அளவுக்கு கூட இந்த விஷயத்துல அக்கறை காட்டாத ஆளும்கட்சி இனிமேலுமா இந்த விஷயத்துல அக்கறை காட்டப்போறாங்க...
பெட்ரோல் விலை உயர்வு : முன்னெல்லாம் மத்திய சர்க்கார் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை கூட்டினப்போ ஒருதடவை கூட விக்குற வரியை நயா பைசா குறைக்காத முதல்வர் இப்போ தேர்தல் வருதுன்னு தெரிஞ்ச உடனே லிட்டருக்கு  1 ரூபாய் 38 பைசா குறைச்சிருக்காரு...இது கண்டிப்பா தேர்தல் நெற்ற ஃஸ்டண்டதான்னு மக்கள் தெளிவா புரிஞ்சி வெச்சிருக்காங்க. 
அதேநேரம் பெட்ரோல் விலையை ஏத்துறப்போ மட்டும் மூணு ரூவா,அஞ்சி ரூவான்னு ஏத்திட்டு குறைக்கிறப்போ மட்டும் ஐம்பது பைசா,ஒரு ரூவான்னு கொறைக்கிறது எந்த விதத்துல நியாயம்னு மக்கள் கேக்குறாங்க.இதுவரைக்கும் மத்தியில ஆட்சி செஞ்ச கட்சிகள்லேயே காங்கிரஸ் கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தான் தங்களோட ஆட்சி காலத்துல அதிக தடவை பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எண்ணெய்ப் பொருட்களோட விலைகளை தாறுமாறா உயர்த்தியிருக்காங்க...
இதனால இன்னைக்கும் பாதிக்கப்பட்டுக்கிட்டிருக்கிறது சாமானிய மக்கள் தான். இந்த லட்சணத்துல காங்கிரஸ் கட்சி சாமானியர்களின் கட்சின்னு சொல்லிக்கிறது தான் வெட்கக்கேடா இருக்கு.
மீனவர் தாக்கப்படும் விவகாரம் : உண்மையிலேயே இந்தப் பிரச்சினையில ஆளும்கட்சியோட நடவடிக்கைகளை பார்த்தப்போ அவங்களுக்கு மீனவ மக்கள் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லையோங்கிற சந்தேகத்தை தான் ஏற்படுத்திச்சி.
ஏன்னா எத்தனையோ தடவை பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி பார்த்துட்டாரு., ஆனா தமிழக முதல்வரும் சரி, மத்திய சர்க்காரும் சரி இந்த விஷயத்துல ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடலை. இதுவரைக்கும் இலங்கை கடற்படையால சுட்டு செத்த மீனவ குடும்பங்களுக்கு “நிவாரண நிதி”ங்கிற பேர்ல சில லட்சங்கள் பணத்தை மட்டுமே குடுக்குறது,உண்ணாவிரதம் இருக்குறதுன்னு தொடர்ந்து இந்த மாதிரி தாக்குதல் நடக்காம இருக்குறதுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காம தமிழ்நாட்டோட மீனவர்களை ஏமாத்திக்கிட்டே இருந்தவர் தமிழக முதல்வர். 
“அவரோட புள்ளைங்களுக்கு எம்.பீ சீட் வேணும்னா மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காம டெல்லிக்கு போற முதல்வர் இந்த பிரச்சனைக்காக ஒரு தடவையாவது டெல்லிக்கு போயிருக்காறா..?”ன்னு ஒரு மீனவ நண்பர் சொன்னப்ப தேர்தல்ல இந்த விஷயம் எதிரொலிக்கும்னு தோணிச்சி.
மிகப்பெரிய பலவீனம்
ஸ்பெக்ட்ரம் ஊழல் : தி.மு.க வோட மிகப்பெரிய பலவீனமே இதுதான். தமிழ் வாழ்க,தமிழன் வாழ்கன்னு செம்மொழிப் பூங்காவெல்லாம் தொறந்து வெச்சி தமிழக முதல்வர் மேடைக்குமேடை முழங்கி தமிழை அரும்பாடுபட்டு வளர்க்க, அவரோட அமைச்சரவையில இருந்த ஆ.ராசாவோ தமிழனோட மானத்தை கப்பலேத்திட்டு திகாருக்கு போயிட்டாரு. 
கவர்மெண்டுக்கு வரவேண்டிய ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை இழப்பு ஏற்படுத்தி அதுல ஊழல் பண்ணி அதுக்கு பலனா சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள்கிட்டேயிருந்து பலகோடி ரூபாயை ஆண்டிமுத்து ராசா அன்பளிப்பா வாங்குனதுல ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி அடைஞ்சது என்னவோ உண்மைதான். இப்பவும் hello,thankyou மட்டுமே பேசத் தெரிஞ்ச கிராமத்து மக்கள் மத்தியில கூட இந்த spectrom பேரு நல்லா பதிஞ்சிருக்கு. அந்தளவுக்கு தமிழ்நாட்டுல ஸ்பெக்ட்ரம் ஊழல் ரொம்ப ஃபேமஸாயிருக்கு. 
ஆனா இதுல தி.மு.க வுக்கு இருக்குற முக்கிய பிரச்சனை என்னன்னா..? ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்புக்கும்,ஊழலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அதாவது ஆண்டிமுத்து ராசா ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை மொத்தமா சுருட்டிட்டு போவல. அந்த தொகை கவர்மெண்டுக்கு வரவேண்டிய தொகை அந்த தொகையை வரவிடாம பண்ணிட்டாரு.அப்படி பண்ணினதுல அவருக்கு சில கோடிகள் அன்பளிப்பா வந்திச்சி.
ஆனா மொத்தமா எல்லாரும் ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் ஊழல்னு பொத்தாம் பொதுவா சொல்றதுனால மக்கள் எல்லாரும் “இவ்ளோ அமோவ்ண்டை ராசா யார்கிட்ட குடுத்து வெச்சிருப்பாரு.."ன்னு தங்களுக்குள்ளாவே ஆச்சரியமா கேட்டுக்குறது தான் இந்த தேர்தல்ல தி.மு.க.வுக்கு முக்கிய பலவீனம். 
அதாவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் பணம் முழுவதையும் ஆ.ராசாவே சுருட்டிகிட்டு போயிட்டாருன்னு மக்கள் மத்தியில ஒரு எண்ணம் இருக்கு. இப்படி ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருக்குறது உண்மையிலேயே தி.மு.க.வோட மிகப்பெரிய பலவீனம் தான். தி.மு.க அவங்களோட தேர்தல் பிரச்சாரத்துல இது சம்பந்தமா விளக்கம் கொடுக்கலன்னா அதுவே தோல்விக்கு ஒரு ஆரம்பப்புள்ளியா இருக்கும்.
இன்னும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மணல் கொள்ளை, ஈழத்தமிழர் விவகாரத்தில் சுயநலம்னு இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆளும்கட்சிக்கு பலவீனங்களா இருக்கும். இந்த பலவீனங்களை எல்லாம் பலமா மாத்தி மறுபடியும் தி.மு.க ஆட்சியை புடிக்குமா புடிக்காதான்னு மே மாசம் 
13 – ஆம் தேதி தெரிஞ்சி போயிடும்.

5
Your rating: None Average: 5 (3 votes)
http://oruvaarthai.blogspot.com/2011/03/blog-post_09.html

கருத்துகள்

VISWAM's படம்

அருமை


4

அருமை