தமிழகம் முழுக்க காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அந்தக் கட்சியை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இயக்குனரும் நாம்தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் அவர்கள்.
அதுவும் சரிதான். வெட்கமில்லாமல் தமிழர்களிடம் காங்கிரஸ்காரர்கள் ஒட்டுக்கேட்டு வருவதற்கு ஒரு நல்ல காரணத்தை சொல்ல முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக அதற்கு பதில் ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு நாம் ஓட்டு போடக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அந்த காரணங்களில் சிலவற்றை இங்கே பட்டியல் போட்டுள்ளேன்.இந்த பட்டியலே போதும் நாம் ஏன் காங்கிரஸுக்கு ஓட்டு போடக்கூடாது என்று முடிவெடுப்பதற்காக...,ஓட்டு போடுவதற்கு முன்பு ஒரு நிமிடம் சிந்தியுங்கள் தமிழர்களே...?
# முதலில் நாம் உண்மையான தமிழர் என்றால்,நம்மை சார்ந்த தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர் என்றால் நாம் ஓட்டு போடுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும்.
# ஈழத்தில் யுத்தம் நடந்த போது மூன்று லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று அதில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நம் தமிழ்ப்பெண்களை கற்பழித்து கொன்ற சிங்களவனுக்கு துணை போன காங்கிரஸுக்கு தமிழர்களாகிய நாம் வாக்களிக்க வேண்டுமா?
# தமிழக மீனவர்களை சிங்கள ராணுவத்திடமிருந்து காப்பாற்ற முடியாது,என்று கூறியது மட்டுமல்லாது சுட்டவணை தண்டிக்க துப்பில்லாமல் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டிப்போகக் கூடாது என்று சொன்ன காங்கிரஸுக்கு தமிழர்கள் வாக்களிக்கலாமா?
# வந்தாரை வாழவைத்து பழக்கப்பட்டு போன தமிழகத்தில் தள்ளாத வயதில் தரமான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தமிழகம் வந்தா பார்வதி அம்மையாரை மருத்துவம் பார்க்க விடாமல் மறுத்த காங்கிரஸ் கட்சிக்கு நாம் ஓட்டு போடத்தான் வேண்டுமா..?
# லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து மனித மிருகமாய் உலாவரும் மனித மாமிசம் தின்னும் மிருகம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து மகிழும் காங்கிரஸ் கட்சிக்கு நமது ஓட்டு அவசியம் தானா?
# தமிழக மீனவர்கள் 600 பேர்களை தனது ராணுவத்தின் மூலம் சுட்டுக்கொன்ற மனித மாமிசம் தின்னும் மிருகம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு கேரளாவில் ஆயில் மசாஜ்,திருப்பதியில் சாமி தரிசனம்,சிம்லாவில் சுற்றுலா,மும்பையில் உலக கோப்பையை காண அனுமதி என்று காங்கிரஸ் ஆளும் இடங்களில் எல்லாம் தமிழினத்து எதிராக எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குய் தமிழனுடைய ஓட்டு எதற்காக..?
# இந்தியாவின் வறுமையை ஒழிக்க 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை அந்தந்த நாடுகளே தர முன்வரும் போது வேண்டாம் அந்தப் பணத்திற்கு வரி மட்டும் கட்டினால் போதும் என்று கறுப்புப் பண முதலைகளை காப்பற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்?
டிஸ்கி : இந்த குறிப்புகள் அனைத்தும் நாம்தமிழர் இயக்கம் மக்களிடையே விநியோகித்த துண்டு பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
(4 votes)
http://oruvaarthai.blogspot.com/2011/04/blog-post_05.html
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 320 reads






