saravanamuthu's படம்

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் இடம்

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் இடம் தமிழகம்.

தென்கச்சி சுவாமினாதன் சொன்ன தகவல்.

இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது தற்கொலை செய்து கொண்டவர்கள் பதினாறு பேர் என்றும் அதில் பதினான்கு பேர் தமிழ்நாடு, ஒருவர் ஒரிசா, மற்றவர் மலேசியா என்றும் சொன்னார்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரிசாவிலும் மலேசியாவிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் அந்தப் பகுதியினர் அல்லர்.
அவர்களும் தமிழ்நாட்டிலிருந்து போனவர்கள்......

சிறந்த சிந்தனையாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் க.ப. அறவாணன் இதுபற்றி மிகுந்த அக்கறையுடன் ஓர் ஆய்வு மேற்கொண்டு சொன்ன தகவல் இது.

கலைஞர் கைதான போது நிகழ்ந்த தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் எண்ணிக்கையில் இன்னும் அதிகம்.

தமிழகத்து அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாத என்.டி.ராமாவின் பதவிக் கவிழ்ப்பு நிகழ்ந்தபோது அவரது ஆந்திரத்தில் ஒருவரும் தற்கொலை செய்து கொள்ள்வில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது அதிர்ச்சியாக இல்லையா?

ஜாதித்தலைவர்கள், சமயவாதிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் தற்கொலையைத் தூண்டுகிறார்கள்.
தன்பொருட்டுத் தீக்குளித்தோருக்கு, நாவறுத்தோருக்கு, தற்கொலை செய்ய முயன்றவருக்கு, அவர்களின் பரம்பரைக்குப் பணம், பதவி, பட்டம் தருவதன் மூலம் தற்கலை ஊக்குவிப்புத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கிறோம் என்று அவர்கள் உணரவேண்டும்.

அடுத்த தலைமுறையை அறுத்தெரியும் எந்தத் தலைமையையும் இனி ஆதரிக்கக்கூடாது என்று தீர்மானித்தால் நாடு உருப்படும்.

-------------- சுகிசிவம் -----------------------
இன்றும் கூட ராஜீவ்கொலை வழக்கில் அவர்களுக்கு விடுதலை அழிக்கச் சொல்லி அவர்களது வீட்டில் உள்ள ஒருவரும் தற்கொலை செய்யவில்லை..

---------- சரவணமுத்து

6
Your rating: None Average: 6 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

பக்தி, விருப்பம் இருக்க


10

பக்தி, விருப்பம் இருக்க வேண்டும். அதனையே சாட்டாக வைத்து பிரிவுத் துயர் தாங்க முடியாமையால் தற்கொலை வரை செல்கிறார்கள். இந்நிலை தமிழ் நாட்டில் அதிகம் தான். ஆனால் தமிழ் நாட்டவர் இன்று இது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆயினும், தற்கொலைக்குப் பதிலாகத் தமது பக்திக்குரிய, விருப்புக்குரிய ஆட்களின் பெயரில் மாற்றாரை வாழவைக்கும் நலத் திட்டங்களைச் செய்யலாமே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

உண்மை தோழரே!! தங்கள்


4

உண்மை தோழரே!!
தங்கள் கருத்துக்கு நன்றி!!!!

sugiri's படம்

சிந்திக்க வைத்த படைப்பு. மனித


5

சிந்திக்க வைத்த படைப்பு. மனித உணர்ச்சிகளுடன் ஆன விளையாட்டை திரைத்துறையும் அரசியலும் நிறுத்தினால் தேவலை. பள்ளிக்குழந்தைகள் கூட ஆசிரியர் திட்டினார், அம்மா/அப்பா கோவித்தார் என்று தற்கொலை செய்துகொள்ளும் அவலம் இங்கே தான் அதிகமாக இருக்கிறது. சின்ன வயதில் இருந்து மனதிட பயிற்சி தேவை.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


saravanamuthu's படம்

”சின்ன வயதில் இருந்து மனதிட


4

”சின்ன வயதில் இருந்து மனதிட பயிற்சி தேவை”
--------- உண்மை தான்!!------------

கருத்துக்கு நன்றி தோழி!!